அறியப்படாத போராளி…
வீரபாண்டிய கட்டபொம்மனோடு உடன்பிறந்தவர்கள் இருவர். ஒருவர் குமாரசாமி என்கின்ற ஊமைத்துரை, மற்றவர் செவத்தையா. ஊமைத்துரைசிறுவயதிலிருந்தே பேசும்போது பேச்சு திக்கித்திக்கி (Stammering) வந்ததால் இவரை ஊமைத்துரை என்று மக்கள் அன்போடு அழைத்தனர். விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரன் ஊமைத்துரை. வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் வீரபாண்டிய கட்டபொம்மனின் சாதனைக்குப் பின்னால் ஒரு மாபெரும் வீரராகத் திகழ்ந்தவர் ஊமைத்துரை என்பது புலப்படும். இவர் நட்புணர்வும் மனிதாபிமானமும் கொண்டவர் என்று இவரது வரலாற்றின் மூலம் அறிகிறோம். ஆங்கிலேயருக்கும், தன் அண்ணனாகிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் போர் ஏற்பட்டது. போரில் இருவரும் தப்பியோடினர். பின்னர் கட்டபொம்மனின் மறைவுக்குப் பிறகு பாளையங்கோட்டைச் சிறையில் ஊமைத்துரை அடைக்கப்பட்டார். ஆனால் இவர் தன் வீரத்தாலும், விவேகத்தாலும் அச்சிறைச்சாலையிலிருந்து தப்பிவந்து வெள்ளையர்களால் பிடிக்கப்பட்ட தங்களது பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டையை ஆறே நாட்களில் ஆங்கிலேயரே வியக்கும் வண்ணம் கட்டிமுடித்தார். இவர் கட்டிய கமுதிக்கோட்டை இன்றைக்கும் வலுவ...