இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டிருந்தாலும் இயற்கையால் ஒன்றிணைந்;திருந்தாலும் இதனை அழகுபடுத்திய பெருமையும், அடுத்த கிரகங்களை நாடுகின்ற முயற்சியும் அறிவியல் அறிஞர்களால் கைகூடியது என்பது மறுக்க முடியாத உண்மை. கலிலியோ, கோபர்நிகஸ், லியோனார்டோ டாவின்சி, டெஸ்லா, தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள் என ஒவ்வொருவரும் மனிதகுலத்தின் பல்வேறு உயர்வுக்குக் காரணமாய் இருந்தார்கள். இதேபோல கிப்போகிரேட்ஸ் தொடங்கி, தமிழகத்தில் தோன்றிய உடற்கூற்று அறிஞர்கள் முதல் தற்காலத்தில் உறுப்புமாற்று சிகிச்சை மூலம் மனிதவாழ்க்கையை நீட்டித்துக் கொண்டிருக்கும் மருத்துவ மாமேதைகளின் பங்கினையும் நாம் மறக்கமுடியாது. ஜேம்ஸ் வாட், ஜார்ஜ் ஸ்டீபன்சன், ஹென்ரி போர்டு போன்றவர்கள் வாகனக் கண்டுபிடிப்புகள் மூலம் மனிதர்களின் பயணநேரத்தை விரைவாக்கித் தூரங்களைக் குறைவாக்கி உலகை வியக்க வைத்தார்கள். அலெக்சாண்டர் பிளம்மிங்கும், லூயி பாஸ்டரும், எட்வர்ட் ஜென்னரும், மேரி கியூ...
திரிசரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் ‘ கலிகாலக் கம்பர்’ என அழைக்கப்படுகின்ற கவிச்சக்கரவர்த்தி ஆவார். இவரது கற்பனையில் உதித்த தலபுராணங்களும், தனிப்பாடல்களும் கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ், தூது எனும் சிற்றிலக்கிய வகைகளும் இவரது கவிஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன இவர்; பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் படைத்துள்ளார் என இவரது மாணவராகிய தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் குறிப்பிடுகிறார். இவர் திருவாவடுதுறையின் ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் மற்றும் சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் ஆதரிக்கப்பெற்று அவ்ஆதீனத்தின் அவைக்களப்புலவராகவும் விளங்கினார். இவர் எழுதிய வாட்போக்கிக் கலம்பகம் மற்றும் சேக்கிழார் பிள்ளைத் தமிழ், திருநாகைக்காரோணப் புராணம் போன்ற நூல்கள் இவரின் தமிழ்ப்பணிக்குப் பெருமை சேர்த்து வருவன. அந்தக்காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்த சூழலில் அரிய நூல்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காகவே இவர் தன் வீட்டிலேயே...
‘உன் நடிப்பெல்லாம் எங்கிட்ட வேணாம்’ ‘அவன் பெரிய நடிகன்யா’ ‘இந்த நடிப்புத்தானே வேணாங்கிறது’ ‘எங்கிட்ட அப்பிடி நடிச்சு ஏமாத்திட்டாண்டா’ என்று பலரும் பலமுறை பலரைப் பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தச் சொற்கள் உண்மையான நடிகரைப் பற்றியோ, அவரது நடிப்பைப் பற்றியோ சொல்லப்படுவன அல்ல. வாழ்க்கையில் நடிக்கும் மனிதர்களைப் பற்றியே… நான் எங்க;ரில் எங்கள் வயதில் நாடகம் போட முயற்சித்ததையும், அதில் பட்ட சிரமங்களையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். எங்கள் ஊரின் மறுகரையில் இருந்த அக்கிரகாரத்துக் கிருஷ்ணன் கோவிலில் திருவிழா...
கருத்துகள்
கருத்துரையிடுக