இடுகைகள்

Thirukkalyanam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முருகப்பெருமான் திருக்கல்யாணம்

படம்
திருக்கல்யாணம்   திருக்கோவில்களில் கடவுளர்களுக்கு நிகழும் திருமணத்தைக் குறிப்பதாகும். இத்திருமணங்களை   மீனாட்சி திருக்கல்யாணம், ஸ்ரீநிவாசா திருக்கல்யாணம், முருகப்பெருமான் திருக்கல்யாணம்   என வகைப்படுத்தலாம். இவற்றுள் முருகனுக்குரிய திருக்கல்யாணம்   சூரசம்ஹாரத்துக்குப் பிறகு நிகழ்கிற மங்கல நிகழ்ச்சியாகும் . தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் சூரபத்மனும் அவன் உடன்பிறந்தவர்களும் துன்பம் இழைத்தபோது அவர்களை அழிப்பதற்குச் சிவனின் வடிவாகவே முருகப்பெருமான் தோன்றுகிறார். தனது வேலாயுதத்தால் அசுரகூட்டத்தை அழித்துச் சிறைப்பட்டிருந்த தேவர்களையும், தேவேந்திரனையும் விடுதலை செய்து காப்பாற்றுகிறார். இதனால் தேவர்கள் மனம் மகிழ்ந்தார்கள். தேவர்களுக்கு அதிபதியாகிய இந்திரனும் மகிழ்வோடு தனது மகளாகிய  தெய்வயானையை ( தெய்வானை)  முருகப்பெருமானுக்குத் திருமணம் செய்து கொடுக்க முன்வந்தான். இந்நிகழ்வே திருக்கல்யாணமாகும். இத்திருக்கல்யாணம்  ஆறுபடை  வீடுகளில்  ஒன்றாகிய  திருப்பரங்குன்றத்தில்  நிகழ்வதாக நக்கீரர் தனது  திருமுருகாற்றுப்படை  எனும் நூலில் விரிவா...