இடுகைகள்

ஏப்ரல் 23, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலக்கியங்கள் என்ன செய்யும்?…

படம்
ஒருநாள் கல்லூரியில் சிறப்புத்தமிழ் படிக்கின்ற மாணவர்களுக்காக வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னிடத்தில் கேட்கலாம் என்று சொன்னேன். யாரும் பேசவில்லை, வகுப்பில் மயான அமைதி நிலவியது.                பிறகு நான் அவர்களை நோக்கிப், பாடம் தொடர்பாக வேண்டாம். பொதுவான சந்தேகங்கள் எதுவானாலும் கேளுங்கள் என்று  சொன்னவுடன், ஒரு மாணவி எழுந்தாள்… “ஐயா, எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர் டாக்டர் ஆகிறான். பொறியியல் படிப்பவர்கள் இன்ஜினியர் ஆகிறார்கள். சட்டம் படிப்பவர்கள் நீதிபதியாக, வழக்கறிஞராக ஆகிறார்கள். தமிழ் படிப்பதால் என்ன லாபம், இலக்கியம் படித்தால் என்ன ஆகலாம்?” என்று அந்தப் பெண் கேட்டவுடன் வகுப்பே கலகலப்பானது. நான் சற்று அதிர்ச்சியடைந்தேன்.                ஏனென்றால் பொதுவாக எந்த வழியும் இல்லாதவர்கள் வேறு வழி இல்லாமல் கடைசி முயற்சியாக இலக்கியத்தில் வந்து சேருவது போலவும், மொழிப் பாடங்கள் படிப்பது பயன் அற்றது போலவும், ஒரு கரு...