பெண்ணரசியின் பேரருள்… (சித்திரைத் திருவிழா)
கல்லூரியில் முதுகலை வகுப்பில் ஒரு மாணவி எழுந்து, ‘ஐயா சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் ஏன் கொண்டாடுகிறோம்’ என்று கேட்டவுடன் பலர் சிரித்தார்கள். ‘சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் கொண்டாடம பிறகு என்ன செப்டம்பர் மாசத்துலய கொண்டாடுவாங்க’ என்று ஒரு பையன் சொல்ல, எல்லோரும் சத்தம்போட்டுச் சிரித்தார்கள். வகுப்பு நடத்திக்கொண்டிருந்த நான், கேள்வி கேட்ட அந்தப் பெண்ணைப் பாராட்டிவிட்டு, அந்தச் செப்டம்பர் மாத பையனைப் பார்த்து, ‘நீ சொல்லேன் சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் ஏன் கொண்டாடுகிறார்கள்?’ என்று நான் கேட்க, அந்தப் பையன் ‘இதான் நம்ம சிலபஸ்ல இல்லேல சார்’ என்றான். ‘இருந்தாலும் சாய்ஸ்ல விட்ருவோம்;’ என்றான் இன்னொருவன். அப்போது நான் சற்றே கடுமையாக, ‘மதுரையில் பிறந்து மதுரையில் வளர்கிற நீங்களே இப்படிப் பேசலாமா?’ என்று சொல்லிவிட்டு, இந்தச் சித்திரைத் திருவிழா கொண்டாடத் தொடங்கி எவ்வளவு ...