இடுகைகள்

மார்ச் 31, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதியன கற்போம்… புதுமைகள் செய்வோம்…!

படம்
               உலக வரலாற்றில் புதிய சிந்தனைகளையோ, அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளையோ உருவாக்கிய மேதைகளை இந்த உலகம் அவ்வளவாகப் பாராட்டியதில்லை. மாறாக அத்தகைய சிந்தனையாளர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறது.                ‘உன்னையே நீ அறிவாய்… அறிவுதான் நான் தரும் ஆயுதம்…. சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள்…. எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்விகளைக் கேளுங்கள்!’ என்று சொன்ன  கிரேக்கஞானி  சாக்ரடீஸ் , அன்றைய அரசாங்கத்தால் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். ‘உலகம் உருண்டையானது. சூரியன் நிலையானது. பூமிதான் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது’ என்ற அறிவியல் உண்மையை, தான் வாழ்ந்த 14ஆம் நூற்றாண்டில், தான் கண்டுபிடித்த சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் நிரூபித்துக்காட்டிய  கலிலியோ  பல துன்பங்களைச் சந்தித்து, அப்போதைய போப்பாண்டவர் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கும் நிலைக்கு ஆளானார்.             ‘உலக உயிர்...