புதுவை தந்த பூபாளம்… எழுத்தாளர் பிரபஞ்சன்
தமிழில், உரைநடையும் சிறுகதையும் தோன்றியபிறகு, இதழ்களின் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கின. மணிக்கொடி, எழுத்து, ழா, தீபம் போன்ற இலக்கியஇதழ்கள்ஒருபுறமும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகள் ஒருபுறமும், சிற்றிதழ்கள் ஒருபுறமும் சிறுகதை உலகின் வளர்ச்சிக்குப் பெரும் துணை நின்றன. எழுத்தாளர் கல்கி, சாண்டில்யன், தேவன், ரா. கி. ரங்கராஜன் போன்றவர்கள் சிறுகதைகளில் தங்கள் எழுத்துத் திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருந்த அதேநேரத்தில் புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன் போன்றவர்களும் தங்களுக்கெனத் தனிப்பார்வையோடும், இடதுசாரிச் சிந்தனையோடும் எளிய மக்களின் உலகத்தைத் தங்கள் எழுத்துக்களில் படைத்துக் காட்டினர். இந்நிலையில்தான் சாவி ( சா. விஸ்வநாதன் ) போன்ற பத்திரிக்கையாளர்கள் புதிய எழுத்தாளர் பட்டாளத்தைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினர். (திரையுலகில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா போல) எழுத்தாளர் சுஜாதா, மாலன், சுப்பிரமணிய...