உயர்தனிச் செம்மொழி
“சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா” என்றும், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” எனவும் பாடுகின்ற பாரதி , தமிழ்மொழி தவிர சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச் எனப் பல மொழிகளையும் கற்றுணர்ந்தவர். இத்தகைய பன்மொழி அறிவை உடைய பாரதி, தமிழ்மொழியின் பெருமையை உலகமொழிகளுக்கு ஈடாக, அதற்கும் மேலாகவும் கூறுவதைக் காண்கிறோம். உயர்தனிச் செம்மொழி என்ற தமிழ்ச்சொல்லை உலகுக்கு அறிவித்தவர், சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற் கலைஞர் ஆவார். இவர் நூறாண்டுகளுக்கு முன்பாகவே, தாம் வாழ்ந்த காலத்திலேயே செம்மொழி எனத் தமிழின் உயர்வினை உலகுக்கு அறிவித்தவர். 2004ஆம்ஆண்டு நம் இந்திய அரசாங்கம், இந்திய மொழிகளில் ஒன்றாகிய நம் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. தொல்காப்பியம் தொடங்கி மூவாயிரம் ஆண்டுப் பழைமை உடையது நம்மொழி. இத்தமிழ்மொழி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆட்பட்டாலும், கால வெள்ளத்தை எதிர்த்து இந்த விஞ்ஞான யுகத்திற்கு ஈடுகொடுத்துப் புகழோடு விளங்குவது பெருமைக்குரிய ஒன்றா...