இடுகைகள்

ஜனவரி 31, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலிகாலக் கம்பர்… மீனாட்சி சுந்தரம்பிள்ளை

படம்
திரிசரபுரம்  மீனாட்சி  சுந்தரம்  பிள்ளை  அவர்கள்  ‘ கலிகாலக்  கம்பர்’  என அழைக்கப்படுகின்ற கவிச்சக்கரவர்த்தி ஆவார். இவரது கற்பனையில் உதித்த தலபுராணங்களும், தனிப்பாடல்களும் கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ், தூது எனும் சிற்றிலக்கிய வகைகளும் இவரது கவிஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன இவர்; பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் படைத்துள்ளார்  என  இவரது  மாணவராகிய  தமிழ்த்தாத்தா  உ. வே.  சாமிநாத  ஐயர்    குறிப்பிடுகிறார். இவர் திருவாவடுதுறையின் ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் மற்றும் சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் ஆதரிக்கப்பெற்று அவ்ஆதீனத்தின் அவைக்களப்புலவராகவும் விளங்கினார். இவர் எழுதிய  வாட்போக்கிக்  கலம்பகம்  மற்றும்  சேக்கிழார்  பிள்ளைத்  தமிழ்,   திருநாகைக்காரோணப்  புராணம்  போன்ற நூல்கள் இவரின் தமிழ்ப்பணிக்குப் பெருமை சேர்த்து வருவன. அந்தக்காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்த சூழலில் அரிய நூல்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காகவே இவர் தன் வீட்டிலேயே...