இடுகைகள்

Typewriter machine லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விரல் நுனியில் உலகம்….

படம்
                மனிதகுல வரலாற்றில் மொழி எவ்வளவு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறதோ அதுபோல, எழுத்தும் அத்தகைய பெருமையுடையதாகவே விளங்குகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனிமொழி இருப்பதுபோல, எழுத்தும் அமைந்திருப்பது ஒரு சிறப்பு. பண்டைய காலத்தில் எழுத்துக்கள் களிமண் பலகைகளிலும், மரப்பலகைகளிலும் எழுதப்பட்டும் செதுக்கப்பட்டும் வந்தன.   பின்னர் கல்வெட்டுகளாய், தாமிரப்பட்டயங்களாய், முடிவில்  பனைஓலைகளிலும் எழுத்துக்கள் எழுதப்பட்டு வந்தன.                பதினைந்தாம் நூற்றாண்டுகளில் அச்சுக்கலை தோன்றியபிறகு, எழுத்து, எளிமையாயிற்று. ஓலைகளிலும், தாள்களிலும், எழுத்தாணி மற்றும் மயிலிறகால் எழுதிக்கொண்டிருந்தவர்கள் அச்சுவடிவம் வந்தபிறகு, எழுத்துக்களை அச்சிடத் தொடங்கினார்கள். நூல்கள் வெளிவரத்தொடங்கின. இந்தவளர்ச்சியில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது தட்டச்சு இயந்திரம்.      தட்டச்சு இயந்திரத்தில் உள்ள எழுத்துக்களை நாம் விரல்களில் அழுத்தும்போது அவை தாள்களில் பதிவாகத...