இடுகைகள்

Kaalamegappulavar லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கவி காளமேகம்

படம்
  தமிழ்க் கவிதை உலகில் திருவள்ளுவர் போல ஒரு நூலைப் படைத்து பெருமை பெற்றவர்கள் சிலருண்டு.   சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள், சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்கத் தேவர், இராமாயணம் பாடிய கம்பர்   போன்ற புலவர்கள், தாங்கள் படைத்த காப்பியங்களால் பெருமை பெற்றார்கள். ஆனால் காளமேகப் புலவர் போன்ற பிற்காலப் புலவர்கள் தாங்கள் படைத்த தனிப்பாடல்களால் மக்களின்மனதில்இடம்பிடித்தார்கள்.   காளமேகப்புலவர்   தமிழகத்தில்   திருக்குடந்தை  என்று அழைக்கப்படுகிற   கும்பகோணம்  நகரிலே பிறந்து, ஸ்ரீரங்கத்திலே பள்ளிகொண்ட பெருமாள் கோவிலிலே பரிசாரகனாக (சமையல் வேலை செய்பவர்) இருந்து, அருகிலிருந்த திருவானைக்காவல் என்னும் சிவதலத்தில் வாழ்ந்த மோகனாங்கி என்ற பெண்ணை விரும்பி அவளோடு வாழ்க்கை நடத்தியவர். பின்னர், தன் வாழ்நாள் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து, இடத்திற்கும், தான் சந்தித்த நபர்களுக்கும், தன் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் ஏற்றபடி கவிதைகளைப் பாடித் தந்தவர். இவரது காலம் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர். சேர, சோழ, பாண்டியப் பேரரசுகள் வீழ்ந்தபின், தமிழ...