பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
“தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” – பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் என்ற சிற்றூரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். தேவர் அவர்கள் ஆன்மிகவாதியாகவும், சாதிபாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரையே சாரும். 1927ஆம் ஆண்டு சென்னை சென்ற தேவர் அவர்கள் பிரபல காங்கிரஸ் பிரமுகரும், முன்னணி வழக்கறிஞருமான சீனிவாசனைச் சந்தித்தார். அப்போது அவர் சென்னையில் நடந்து கொண்டிருந்த அகில இந்திய காங்கிரஸ் காரியக் கூட்டத்திற்கு தேவர் அவர்களை அழைத்துச் சென்றார். அக்கூட்டத்தில் வழக்கற...