இடுகைகள்

மயிலை தந்த மாமேதை…

படம்
  தமிழக இலக்கிய உலகில் எழுத்தாளர்களும், கவிஞர்களும் அறியப்பட்ட அளவு ஆராய்ச்சியாளர்கள்அறியப்படவில்லை. புனைகதை எழுத்தாளர்களையும், திரைப்படக் கவிஞர்களையும்தான் கற்றவர் முதல் மற்றவர்வரை அறிந்திருந்தனர். தமிழகத்தின் ஆய்வுலகில் தனக்கென ஒரு தடம் பதித்தவர்   மயிலை  சீனி.  வேங்கடசாமி. இவர் சென்னை மயிலாப்பூர் பகுதியில் 1900ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சித்த மருத்துவர். இவருடைய இரண்டாவது அண்ணன்  சீனி.  கோவிந்தராஜன்  ஒரு தமிழறிஞர்.  திருக்குறள்  காமத்துப்பால்  நாட்கள்,  திருமயிலை  நான்மணி  மாலை  ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி அவர்கள் கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின்  மகாவித்வான்  சண்முகம்  பிள்ளை,  பண்டித  சற்குணர்  ஆகியோரிடம் தமிழ் படித்தார்.  பின்னர்  நீதிக்கட்சி  நடத்திய  திராவிடன்  இதழின்  ஆசிரியர் குழுவில் பணிக்குச் சேர்ந்தார். சிலகாலம் கழித்து, மயிலாப்பூரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த இவர், வி...

தமிழகக் காண்டேகர்… கா.ஸ்ரீ.ஸ்ரீ

படம்
  நான் பள்ளியில் படிக்கிற காலங்களிலும் (சோழவந்தான் – முள்ளிப்பள்ளம் அரசுப் பள்ளி) பின்னர் கல்லூரிக் காலங்களிலும் மொழிபெயர்ப்பு நூல்களை விரும்பிப் படிப்பேன். அவ்வாறு நான் படித்த இந்தியமொழி நாவல்களுள் மராத்திய எழுத்தாளரான காண்டேகர் அவர்களுடைய நாவல்களை நான் மட்டுமில்லை, அந்தக்காலத்தில் தமிழக வாசகர்களே மிக விரும்பிப் படித்தார்கள். அப்படி அனைவரையும் படிக்க வைத்த பெருமை   காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசன்   அவர்களையே சாரும். ஆம் இவர்தான்   கா.ஸ்ரீ.ஸ்ரீ .   இவர்   உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிருந்தாவன்   என்ற ஊரில் 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி பிறந்தார். தமிழ்நாட்டில் சென்னையில் இவர் வாழ்ந்தபோது, காந்தியடிகள் அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்னைக்கு வருகைதந்தாராம்.அப்போது  தமிழ்த்தாத்தா  என்றழைக்கப்படுகின்ற  உ. வே. சாமிநாதய்யர்  அவர்கள் காந்திஜி அவர்களுக்குத் தமிழில் வரவேற்புரை எழுதி வாசிக்க, அதை ஹிந்தியில் மொழிபெயர்த்து வாசித்த பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ.அவர்களுக்குத்தான் கிடைத்தது. அதன்மூலம்  உ. வே....

இவரும் எட்டயபுர பாரதிதான்…சோமசுந்தர பாரதியார்

படம்
  எட்டயபுரம்  தமிழுலகுக்குத்  தந்த  மற்றுமொரு  பாரதி  சோமசுந்தர  பாரதி . இவர் மகாகவிபாரதிக்கு மூன்றுஆண்டுகள் மூத்தவர்.   சத்தியானந்த  சோமசுந்தர  பாரதி   என்ற இவரது இயற்பெயரை   ‘ ச. சோ.  பாரதி’   எனத் தமிழக மக்கள் அன்போடு அழைப்பார்கள். மகாகவி பாரதியின் பால்யகால நண்பரான இவர் பாரதியோடு இணைந்து பாடல்கள் பலவற்றை இயற்றியிருக்கிறார். ஒருமுறை எட்டயபுர அரண்மனையில் வெண்பா போட்டி நடந்தது. ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச்சொன்னபோது மகாகவி பாரதியும், நம்முடைய சோமசுந்தர பாரதியும் அதில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றதால் இருவருக்கும்  ‘ பாரதி’  பட்டம் வழங்கப்பெற்றது. சுப்பையாவும் (சுப்பிரமணியன்) பாரதியானார், சோமசுந்தரமும் பாரதியானார். தமிழோடு வழக்கறிஞர் பட்டமும் பெற்ற இவர், அவ்வழக்கறிஞர் தொழிலில் பெரும் பணம் சம்பாதித்தபோதிலும், அதைவிடுத்து வ.உ.சிதம்பரனாரின்  ‘ இண்டியன்  நேவிகே ஷ ன்’  சுதேசி கப்பல் கம்பெனியில் 100ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தார் என்பது ஓர் அரிய செய்தி. வ.உ.சி.கூட கூறுவாராம்.  ‘ என்னிடம்  இ...

இதழியல் உலகின் தீபம் (நா. பார்த்தசாரதி)

படம்
தமிழக எழுத்தாளர்களுள் தனக்கென ஒரு மொழிநடையையும், இலக்கையும் தீர்மானித்துக்கொண்டு எழுதிய எழுத்தாளப் பெருமக்களுள் ஒருவர்   ‘ தீபம்’  நா. பார்த்தசாரதி   அவர்கள். நான் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்த காலத்தில் (1977) எங்களுக்குப்  ‘ பிறந்த  மண்’  என்கின்ற ஒரு குறுநாவல் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அதன்  ஆசிரியர்  நா. பார்த்தசாரதி  அவர்கள். அதில் அவர் சொல்லியிருந்த செய்தியானது இன்றைக்கு வரைக்குமான இளைய சமுதாயத்திற்கான செய்தியாக நாம் எடுத்துக்கொள்ளலாம். அந்தக் கதையில் வருகின்ற கதாநாயகன் வறுமையின் காரணமாகத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற அயல்நாடு சென்று அங்கு பல அவமானங்களைச் சந்தித்தபின், தன் சொந்தஊருக்கே திரும்பிவந்து, தண்ணீர் இல்லாததால்தான் ஊரில் விவசாயம் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்து, ஊராரோடு சேர்ந்து ஒரு வாய்க்காலை உருவாக்கி அதன் மூலம் விவசாயம் செய்து உயர்வதாக அந்தக் கதை அமைந்திருக்கும்.                ‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்       ...

ரஷ்ய எழுத்தாளர்…சிங்கிஸ் ஐத்மாத்தவ்

படம்
  நான் கல்லூரியில் படிக்கிறகாலத்தில் மொழிபெயர்ப்பு நாவல்கள் அதிகம் படிப்பேன். குறிப்பாக, இந்திய மொழிபெயர்ப்பாளர்களான   த.குமாரசாமி, ப.சேனாதிபதி மற்றும் க.ஸ்ரீ.ஸ்ரீ, மாயாவி, நாடோடி   போன்றோர் மொழிபெயர்த்த வங்க மொழியில் வெளிவந்த இலக்கியங்கள், மராட்டிய நாவல்கள், சிறுகதைகள் இவற்றைப் படிக்கிறபோது, புதுமையான பெயர்கள், புதுப்புது இடங்கள் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களின் உணவு, உடை பழக்கவழக்கங்கள் போன்றவற்றை இந்த மொழிபெயர்ப்பு நூல்கள் மூலமாக அறிந்து கொள்வேன். அக்காலத்தில்  நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில்  (NCBH) ரஷ்ய நூல்கள் அதிகம் கிடைக்கும்.  ர ஷ் ய எழுத்தாளர்களான லியோ டால்ஸ்டாய், தஸ்தாவஸ்கி, சிங்கிஸ் ஐத்மாத்தவ், ஆன்டன் செகாவ்  ஆகியோரது படைப்புகள் மிக உயரிய பதிப்பாகவும், வழவழப்பான தாள்களில் அச்சிடப்பட்டும் அதற்கேற்ற ஓவியங்களோடும் குறைந்த விலையில் கிடைக்கும். சோவியத் நாடு, சோவியத் ரஷ்யா போன்ற பத்திரிக்கைகளும்  ‘கூரியர்’  போன்ற இதழ்களும் அப்போது அங்கே கிடைக்கும். இந்நூல்களில் குறிப்பாக  லியோ டால்ஸ்டாயின்,   ‘புத்துயிர்ப்பு’  என்னும...

எட்டயபுரத்துக் கட்டபொம்மன் பாரதி…

படம்
  ‘எட்டயபுரத்துக்  கட்டபொம்மன்’   என்று மகாகவி பாரதியைக் கவிராஜன் கதையில் அவர் வரலாற்றை எழுதிய   கவிப்பேரரசு  வைரமுத்து   குறிப்பிடுவார். சின்னச்சாமி பெற்ற பெரியசாமி என்றும், லட்சுமி பெற்ற சரஸ்வதி  என்றும் கவியரங்கங்களில் பாரதியைப் போற்றிப் பாடுவர். மறைந்து நூறு ஆண்டுகள்   (1921 – 2021) சென்றபோதும் மறையாத புகழுடைய மகாகவிஞன் பாரதி. இவர் பலமொழிகளைக் கற்ற பன்முகத் தன்மையுடையவர். எட்டயபுரத்தில் பிறந்ததால் தமிழ், பாளையங்கோட்டையில் படித்ததால் ஆங்கிலம், காசியில் நான்கு ஆண்டுகள் இருந்ததால் ஹிந்தி, சமஸ்கிருதம், பாண்டிச்சேரியில் (1908 – 1918) பத்து ஆண்டுகள் வாழ்ந்ததால் பிரெஞ்சு மொழி என உள்௵ர் மொழிகள் முதல் உலகமொழிகள் வரை பாரதி பலமொழிகளைக் கற்று அறிந்திருந்தபோதிலும்,  “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”  என்று நெஞ்சை நிமிர்த்துப்பாடிய பெருமையை உடையவர் பாரதி. மதுரையில் ராஜா சேதுபதி பள்ளியில் 1901ஆம் ஆண்டில் நான்கு மாதம் தமிழாசிரியராகப் பணியாற்றிய காலம் மதுரைக்கு ஒரு இனிய காலம் . அப்போதுதான் அவர் காசியிலிருந்து தன் மனைவியா...

ஒரு மரணவியாபாரியின் மரணம்… ஆல்பிரட் நோபல்

படம்
  2019ஆம் ஆண்டு நார்வே நாட்டிலுள்ள தமிழ்ச்சங்கத்தின்அழைப்பின்பேரில் நான் என் குழுவினரோடு பட்டிமன்றம் பேசுவதற்காக அந்நாட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த நாட்டுக்கு   ‘நள்ளிரவுச் சூரியன் நாடு’   என்றொரு பெயரும் உண்டு. அந்த நாட்டில் நாங்கள் பார்த்த மற்றொரு அதிசயம் எது தெரியுமா? உலகப்புகழ் பெற்ற நோபல் பரிசு கொடுக்கும் அரங்கம்தான். அந்த அரங்கம்; அரண்மனை போன்று மிகப்பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. அங்குதான் நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெறும் என்று சொன்னார்கள். நாங்கள் அங்கு சென்று அந்த அரங்கைப் பார்த்ததோடு அதன் வாசலிலிருந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டோம். அப்போதுதான் ஆல்பிரட் நோபலைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். இவர் வெடிமருந்தின்   (டைனமைட்)  மூலமாக மலைகளைத் தகர்க்கவும், பூமியைப் பிளப்பதற்குமான ஒரு வேதியியல் பொருளைக் கண்டுபிடித்தவர். அதன்மூலம் பெரும் பொருளையும் சம்பாதித்தவர் என்று ஒரு நண்பர்  சொன்னார். அப்போது ஆல்பிரட் நோபலைப் பற்றி நான் படித்த செய்திகளை நண்பர்களுக்குச் சொன்னேன். பெரும் பணத்தைச் சம்பாதித்த இவர் ஒருநாள் வீட்டில் அமர்ந்திருந்தபோது செய்த...