இடுகைகள்

இரு பாவைகள்… ஓர் பார்வை…

படம்
  ‘ பாவை’   என்ற சொல், பழமையை, பெண்களை, பார்வை ஒளியைக் குறிக்கும் சொல்லாகும். பாவை விளக்குகளைக் கோயில் சிற்பங்களில் காண்கிறோம். ‘ என்  கண்ணின்  பாவையன்றோ’  என பாரதி பாடல் அமைகிறது.  ‘ பாவை  நோன்பு’  என்பது தமிழகத்தில் பெண்களுக்கேயுரிய பழமையான வழிபாட்டு முறை. சங்க இலக்கியங்களில், பரிபாடலில்  ‘ பாவை  வழிபாடு’  பற்றிய செய்தி கூறப்படுகிறது. தைப்பாவை என்று கண்ணதாசன் தை மாதத்தைப் பெண்ணாகப் பாவித்துப் பாடியுள்ளார். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவராகிய 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பெண்கள் பாவை நோன்பு நோற்க வேண்டிய அவசியத்தை 30 பாடல்களில் பாடி, அதற்குத்  ‘ திருப்பாவை’  எனப் பெயரிட்டுள்ளார். வைணவ மதத்தின் கடவுளான திருமாலை அடைவதற்கு இப்பாவை நோன்பு கன்னியர்க்குப் பயன்படும் என்பது ஆண்டாளின் கருத்து. இதேபோன்று சைவசமயக் குரவர்களில் ஒருவராகிய மாணிக்கவாசகர் தன்னைப் பெண்ணாகப் பாவித்து, சிவபெருமானை அடைவதற்குப் பெண்கள் பாவை நோன்பு இருக்கவேண்டும் என 20பாடல்கள் பாடி அதற்குத்  ‘ திருவெம்பாவை’  எனப் பெயரிட்டார். பத்...

ஜி.யூ.போப்

படம்
  சமயப்பணி செய்ய இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு வந்த அயல்நாட்டுக் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் பலரும் தமிழ்மொழியைக் கற்று, அதன் அருமையை உணர்ந்து சமயப் பணியோடு, தமிழ்ப் பணியையும் சிறப்பாகச் செய்தனர். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய  கால்டுவெல் , தமிழில் உரைநடையை அறிமுகம் செய்து  தேம்பாவணி  என்ற நூலை எழுதிய  வீரமாமுனிவர்.   ரேனீஸ் ஐயர்  இவர்களோடு நினைக்கத்தக்க தமிழ்ப்பணியைத் தமிழுக்குச் செய்து 42 ஆண்டுகள் தமிழகத்திலேயே வாழ்ந்தவர்  ஜி.யூ.போப்  என்று அழைக்கப்படுகின்ற  ஜார்ஜ் யூக்ளோ போப்  ஆவார். ஜி.யூ.போப் 1820ஆம் ஆண்டு  பிரின்ஸ்  எட்வர்ட்  தீவில்  பிறந்தார். இவருடைய தாய் தந்தையார் பெயர்  ஜான்  போப் –  கேதரின்  யூக்ளோ  என்பதாகும்.  ஜி.யூ.போப்பின் உடன் பிறந்தவர்கள் பத்துப் பேர்களாவர். இவர் தமது 6ஆவது வயதில் தம் தாய் தந்தையரோடு இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட்டார். சமயக்கல்வி அதிகம் போதிக்கப்பட்டது. சிறுவயதிலேயே கடவுளுக்குத் தொண்டு செய்யவேண்டும். சமயப்பணி ஆற்றவேண்டும் என்று விர...

ஆபிரகாம் லிங்கன்

படம்
  மனித வாழ்க்கையில் பொதுவாக ஒரு கேள்வி எழுவதுண்டு. நாம் வாழும் வாழ்க்கை புகழ் மிகுந்ததா? பொருள்தேடி அலைவதா? வரலாற்றில் இடம் பெறுவதா? வரலாற்றை உருவாக்கிக் காட்டுவதா?’ இந்தக் கேள்விகளில் பொருள் தேடுவதென்பது பெரும்பான்மையான மக்களின் நிலையாகிவிட்டது. ‘தேடிச் சோறு நிதம் தின்று’ எனப் பாரதி இவர்களைத்தான் குறிப்பிடுகிறார். வரலாற்றில் இடம்பெறுவது என்பது கூட புகழ்மிக்கதுதான். ஆனால் வரலாற்றைத் தங்களுக்காக உருவாக்கிக் கொள்பவர்களே Trend Setter என அழைக்கப்படுகிறார்கள். அவ்வாறு வரலாற்றை உருவாக்கிய நாயகர்களில் ஒருவர்தான்   அமெரிக்க  நாட்டில்  கென்டக்கி  மாநிலத்தில் 1809 ஆம்  ஆண்டில்  பிறந்த  ஆபிரகாம்  லிங்கன். வாழ்க்கையில் முன்னேறாதவர்கள் சில காரணங்களைச் சொல்வார்கள். நான் செல்வந்தர் வீட்டில் பிறந்திருக்க வேண்டும், ஐந்துவருடம் முந்திப் பிறந்திருந்தால் பெரிய சாதனைகள் செய்திருப்பேன், அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்திருந்தால் அறிவியல் அறிஞன் ஆகியிருப்பேன் என்று கிடைக்காததை எண்ணி  ‘ நல்ல  பொழுதையெல்லாம்  தூங்கிக்    கெடுத்துவிட்டு  நாட...

விவேகானந்தர்

படம்
  2003ஆம் ஆண்டு ஜுலை மாதம் அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான ‘Fetna’ (Federation of Tamil Association of North America) சார்பில் நியூஜெர்சிக்கு அருகில் நடைபெற்ற தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நியூயார்க்,  வா ஷி ங்டன்,  ஃபுளோரிடா,  அட்லாண்டா  போன்ற அமெரிக்க மாகாணங்களில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கங்களில், பல்வேறு தலைப்புகளில் பேச்சு, கலந்துரையாடல் ஆகியவற்றில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது சிகாகோ நகரில் நம்முடைய விவேகானந்தர் அவர்கள் 1863ஆம் ஆண்டு சர்வசமய மாநாட்டில் பங்கேற்ற சொற்பொழிவு குறித்து நான் பேசினேன். அச்சமயம் அங்கு வந்திருந்த தமிழ் அறிஞர் ஒருவர், சிகாகோவில் விவேகானந்தர் வந்து பேசிய இடத்திற்கு வெளியில் ஒரு கல்வெட்டு இருப்பதாகக் குறிப்பிட்டுச் சொன்னார். அந்தக் கல்வெட்டில் விவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,           ‘A light from the East’ “ கிழக்கிலிருந்து  வந்த  ஒளி”  எனக் குறிப்பதாகப் பெருமிதத்தோடு கூறினார். உண்மைதான். ...

சிலேடை விருந்து

படம்
தமிழ்மொழிக்கு இனிமை தருவன   உவமை, உருவகம், சொல்லடுக்கு, சந்தப்பாக்கள், உயர்வு நவிற்சி, சிலேடை   என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு மொழியும் இவ்வாறு தனக்கெனத் தனிச்சிறப்பைப் பெற்று விளங்கத்தான் செய்யும். தமிழில்  ‘இரட்டுற மொழிதல்’   அல்லது   ‘சிலேடை’  என்பது கேட்டுக் கொண்டிருப்பவர்களை, வாசிப்பவர்களைத் தன் வயப்படுத்தும் தன்மை உடையது எனச் சொல்லலாம். இச்சிலேடை, செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். இதில் செம்மொழிச் சிலேடை கற்றவர்க்கு மட்டும் எளிதில் விளங்குவது, மற்றது கல்லாதவரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு தெளிவாய் அமைவது. ஒருசொல், இருபொருள் தருமாறு வருவதே இரட்டுற மொழிதலாகும். மேடைக்கலையில் வல்லவர்களான  கி.வா.ஜெகந்நாதன், கிருபானந்த வாரியார்  போன்றோருடைய பேச்சில் மிகச் சரளமாகச் சிலேடைச் சொற்கள் புகுந்துவரும். ஒருமுறை கி.வா.ஜெகந்நாதன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்னையிலிருந்து கிளம்பி அதிகாலை நேரத்தில் தான் பேசவேண்டிய ஊருக்கு வந்து சேர்ந்தார். ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க வந்தவர்கள், அழகிய பூமாலை ஒன்றை அவருக்கு அணிவித்...

தமிழகத்தின் முதல் விடுதலைப்பெண் குரல்… வேலு நாச்சியார்

படம்
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தியபோது நமக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு நம்மை அவர்கள் வீழ்த்தினர். அதனால்தான் பிற்காலத்தில் மகாகவி பாரதியார்கூட,  ‘ ஆயிரம்   உண்டிங்கு   ஜாதி  –  எனில்   அந்நியர்   வந்து   புகல்   என்ன   நீதி ? –  ஓர்   தாயின்   வயிற்றில்   பிறந்தோர் ,  தம்முள்   சண்டைசெய்   தாலும்   சகோதரர்   அன்றோ ’ என்று நம் நிலை குறித்துப் பாடியுள்ளார். இந்தியாவிலேயே விடுதலைக்கான முதல் வீரக்குரல்  நெற்கட்டான் செவ்வலை  ஆண்ட  பூலித்தேவனுடைய  குரல்  என்றால், அதேபோல அதற்குப்பின் வந்த  தென்னரசியாம்  வீரமங்கை  வேலுநாச்சியும்  வீரக்குரல்  எழுப்பினார்.  ஆங்கிலேயரை எதிர்த்து இழந்த தன்னுடைய சிவகங்கை பகுதியை மீட்டு அரசியானார். தன் கணவரான  முத்து  வடுகநாதரைக்  காளையார்கோவிலில் சூழ்ச்சி செய்து ஆங்கிலேயர்கள் கொன்றதை அறிந்து, அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், இழந்த தன் நாட்டைமீ...

எட்டாவது வள்ளல்… எம்.ஜி.ஆர்…

படம்
சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் இலங்கை சென்றிருந்தபோது   ‘ கண்டி’   என்ற ஊருக்கு அருகில் காரில் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று அந்த ஓட்டுநர், ‘ஐயா அந்தப் பக்கம் கையெடுத்துக் கும்பிட்டுக்கோங்க’ என்று நெகிழ்வாகக் கூறினார். நானும் கையெடுத்து வணங்கிவிட்டு, ‘அருகில் ஏதேனும் கோவில் இருக்கிறதா?’ என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘இந்த ஊருக்கு அருகில்தான்   புரட்சித்தலைவர்  மக்கள்  திலகம்  திரு. எம். ஜி. ஆர்   அவர்கள் பிறந்த வீடு இருக்கிறது’ என்று சொன்னவுடன் நான் வியந்து போனேன். ஆம்,  மருதூர்  கோபால  மேனன்  ராமச்சந்திரன்  என்று அழைக்கப்படுகின்ற திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் தந்தை கேரளாவிலிருந்து குடும்பத்தோடு இலங்கைக்கு வேலை தேடிச்சென்றபோது அங்குதான் எம்.ஜி.ஆர் பிறந்திருக்கிறார். பின்னர் தந்தையாருடைய மறைவுக்குப் பிறகு, எம்.ஜி.ஆரையும், அவரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியையும் கூட்டிக்கொண்டு தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு வந்தார் எம்.ஜி.ஆரின் தாயாராகிய  சத்யபாமா  அம்மையார். அங்கு மூன்றாம் வகுப்புவரை எம்.ஜி.ஆரும் அவருடைய சகோத...