இடுகைகள்

புதிய பார்வை

படம்
                   பார்வை என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தவிரவும், கண்ணின் பயன்பாடு கல்விக்கான வழி எனவும் காலங்காலமாகக் கூறப்பட்டு வருகின்றது. ஆயினும் பார்வையற்ற மனிதர்கள் இவ்வுலகத்தில் வாழமுடியாதா என்றால் முடியும். இன்னும் சொல்வதாக இருந்தால் ஐம்புலன்களில் ஏதேனும் ஒரு புலன் குறைவாக உள்ளவர்கள் கூட எத்தனையோ சாதனைகள் படைத்திருப்பதை நாம் வரலாற்றில் காண்கிறோம்.                மிகப்பெரிய சாதனைகளைச் செய்த ஹெலன் ஹெல்லர், ஒன்றரை வயதுக் குழந்தையாக இருந்தபோது மிகக் கொடுமையான விஷஜுரத்தால் தாக்கப்பட்டு பார்க்கவும், கேட்கவும், பேசவும் முடியாத நிலைக்கு ஆளானார். பெண்குழந்தையாக இருந்தபோதும்; இடைவிடாத முயற்சியின் காரணமாக எழுத்தாளராக, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பவராகப் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.    ஒருமுறை திண்டுக்கல்லுக்கு அருகேயுள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பாக ஒரு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு சிறப்ப...

கிராமியப் பொருளாதாரம் நாட்டின் எதிர்காலம் – ஜே.சி. குமரப்பா

படம்
  இந்தியப் பொருளாதாரம் கிராமங்களைச் சார்ந்ததே என்பது அறிஞர்களின் கருத்து.   சர்தார் வல்லபாய் பட்டேல்   அவர்களிடத்தில் ஒரு ஆங்கிலேயர் , ‘வாட் இஸ் யுவர் கல்ச்சர்?’  என்று   கேட்டபோது, அவர் சட்டென்று,   ‘ அக்ரிகல்ச்சர் இஸ் அவர் கல்ச்சர்’ என்று பெருமையோடு கூறினாராம். காந்தியடிகளின்,  கிராமப்பொருளாதாரக் கொள்கைகளின் தளபதி என்று அழைக்கப்பட்டவர் திரு.ஜே.சி. குமரப்பா அவர்கள் .  அவர் தமிழகத்திலே பிறந்து அமெரிக்காவிலே பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தபோதும், இந்திய மண்ணையும், சுற்றுப்புறச் சூழலையும், மனிதர்களையும் பெரிதும் நேசித்தார்.  இன்னும் சொல்லப்போனால் அவர் அன்றே இரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும், இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் குரல் எழுப்பினார். வளம்மிகுந்த நம் மண்ணுக்கு இயற்கை உரங்களே தாய்ப்பால் போல வலிமை தரும் என்றார். அதை வலியுறுத்தும் விதமாக, ஒருமுறை பார்லிமெண்டுக்கு மாட்டுவண்டியில் வந்தாராம் ஜே.சி. குமரப்பா. அப்போது அவரைப் பார்த்துச் சிரித்த அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் சிரித்துக்கொண்டே   ‘நிலங்களை டிராக்டர்கள் கொ...

புலவர் பாட்டுக்கு உரைஎழுதிய உழவர்

படம்
                         தமிழ் இலக்கிய வரலாற்றில் அரிய பணிகள் செய்திருந்தும்கூட, அவர்கள் அறியப்படாத அறிஞர்களாகவே வாழ்ந்து மறைந்திருப்பது வருந்தத்தக்க செய்தியாகும்.   சோழவந்தானூர்  அரசஞ்சண்முகனார்   போன்ற அறிஞர்களின் தமிழ்ப்பணியை இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான், என் தந்தையார்   புலவர்   கு. குருநாதன்   அவர்கள்   ‘ சோழவந்தானூர்  அரசஞ்சண்முகனாரின்  தமிழ்ப்பணி’   என்ற தலைப்பில் என்னை மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வினை (பி.ஹெச்.டி) மேற்கொள்ளப் பணித்தார். நானும் அவ்வாறே பல்லாண்டுக்காலம் (1983 – 1989, ஆறாண்டுகள்) அவரது மறக்கப்பட்ட நூல்களைத் தேடி ஆய்வுசெய்து முனைவர்ப்பட்டமும் பெற்று தற்போது   காவ்யா  பதிப்பகத்தில்   நூலாகவும் வெளியிட்டுள்ளேன்.                இதேபோன்று எனது மேற்பார்வையில் முனைவர்ப்பட்ட ஆய்வினை மேற்கொண்ட எனது மாணவ, மாணவியருக்கும் கூடியமட்டும...

வரலாற்றுத் தொலைநோக்கி… தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்

படம்
நான் அயல்நாடுகளுக்குச் செல்லுகிறபோதெல்லாம் அங்குள்ள பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் இவற்றையெல்லாம் பார்த்து அவற்றுக்கான காலப்பின்னணியைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். அமெரிக்காவுக்கு முதன்முதலில் பயணப்பட்டபோது (2003ஆம் ஆண்டு) அங்கு அவர்கள் சுற்றிக்காட்டிய பழமையான கட்டிடங்கள் எல்லாம் ஐநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவையாகவே இருந்தன. அப்போது நான், ‘எங்கள்  தமிழ்நாட்டுக்கு வாருங்கள், ஈராயிரம் ஆண்டுப் பழமையுடைய கோயில்களும், கட்டிடங்களும் எவ்வளவோ உண்டு’ என்று பெருமையாகச் சொல்லுவேன். பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே சரித்திரக் கதைகள் மீது எனக்கு அளவற்ற விருப்பம் உண்டு. அதிலும் குறிப்பாகப்  பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்  போன்ற வரலாற்று நாவல்களை எழுதிய  எழுத்தாளர் கல்கி  அவர்களுடைய எழுத்தைப் படிப்பதென்றால், எனக்கு நேரங்காலம் போவது தெரியாது. கல்கியைத் தொடர்ந்து  சாண்டில்யன், ஜெகசிற்பியன், நா.பார்;த்தசாரதி, அகிலன்  ஆகியோரின் வரலாற்றுப் படைப்புகளும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில...

புத்தாண்டு வாழ்த்துகள்… மார்கழியின் பெருமை

படம்
  ‘மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன்’   என்பது பகவத்கீதையில் கண்ணபெருமான் சொன்ன வார்த்தை.                 ‘ காலங்களில்  அவள்  வசந்தம்                 கலைகளிலே  அவள்  ஓவியம்’ என்று சொன்ன  கவியரசு  கண்ணதாசனும்,                 ‘ மாதங்களில்  அவள்  மார்கழி                 மலர்களிலே  அவள்  மல்லிகை’ என்று மார்கழி மாதத்தைப் பாராட்டுகின்றார். அப்படி என்ன அந்த மார்கழியின் சிறப்பு என்று யோசித்துப் பார்த்தேன். இந்த மார்கழி மாதத்தில்தான் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சைவப் பெருமக்களுக்குரிய  ‘ திருஆதிரை’ த் திருநாள் வருகிறது. திருமாலை மட்டும் போற்றி வணங்கும் வைணவ அடியார்களுக்குரிய  ‘ வைகுண்ட  ஏகாதசி ’த் திருநாளும் இம...

சுதந்திரப் போராட்டத்தில் முருகப்பெருமான்

படம்
  அது சுதந்திரப்போராட்டக் காலம். நாட்டு விடுதலைக்காகத் தலைவர்களும், இளைஞர்களும், பெண்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அச்சமயத்தில் நாடகக் கலைஞர்களும், திரைக் கலைஞர்களும் தங்களுக்குரிய பங்கை ஆங்கிலேய எதிர்ப்பைத் தாங்கள் கற்ற கலைகள் மூலமாக வெளிப்படுத்தி வந்தனர். ஒரு சமயம்  சங்கரதாஸ்  சுவாமிகள்  எழுதிய  ‘ வள்ளி  திருமணம்’  நாடகம் மேடையில் நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இறைபக்தியோடும், தேசபக்தியோடும் அந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது முருகன் வேடமிட்ட நடிகர் நாடகத்திற்குரிய புராணப் பாடல்களோடு ஆங்கிலேய எதிர்ப்புப் பாடல்களையும் பாடத் தொடங்கினார். இதை எதிர்பார்த்துக் காத்திருந்த போலீஸ் அதிகாரிகள் மேடையிலேயே அவரைக் கைது செய்வதற்கு வந்தார்கள். உடனே அவர் சற்றும் தயங்காது, ‘பரமசிவன் மகனைப் பழனி ஆண்டியாகிய முருகப்பெருமானையா கைதுசெய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டவுடன் அதிகாரிகள் தயங்கி நின்றனர். மக்களும் ஆவேசமாக எழுந்து கோபக்குரல் எழுப்பினர். உடனே போலீஸ் அதிகாரிகள் நாடகக் கொட்டைகைக்கு வெளிப்புறம் வந்து காத்திருந்தனர். நாடகம்...

இரு பாவைகள்… ஓர் பார்வை…

படம்
  ‘ பாவை’   என்ற சொல், பழமையை, பெண்களை, பார்வை ஒளியைக் குறிக்கும் சொல்லாகும். பாவை விளக்குகளைக் கோயில் சிற்பங்களில் காண்கிறோம். ‘ என்  கண்ணின்  பாவையன்றோ’  என பாரதி பாடல் அமைகிறது.  ‘ பாவை  நோன்பு’  என்பது தமிழகத்தில் பெண்களுக்கேயுரிய பழமையான வழிபாட்டு முறை. சங்க இலக்கியங்களில், பரிபாடலில்  ‘ பாவை  வழிபாடு’  பற்றிய செய்தி கூறப்படுகிறது. தைப்பாவை என்று கண்ணதாசன் தை மாதத்தைப் பெண்ணாகப் பாவித்துப் பாடியுள்ளார். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவராகிய 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பெண்கள் பாவை நோன்பு நோற்க வேண்டிய அவசியத்தை 30 பாடல்களில் பாடி, அதற்குத்  ‘ திருப்பாவை’  எனப் பெயரிட்டுள்ளார். வைணவ மதத்தின் கடவுளான திருமாலை அடைவதற்கு இப்பாவை நோன்பு கன்னியர்க்குப் பயன்படும் என்பது ஆண்டாளின் கருத்து. இதேபோன்று சைவசமயக் குரவர்களில் ஒருவராகிய மாணிக்கவாசகர் தன்னைப் பெண்ணாகப் பாவித்து, சிவபெருமானை அடைவதற்குப் பெண்கள் பாவை நோன்பு இருக்கவேண்டும் என 20பாடல்கள் பாடி அதற்குத்  ‘ திருவெம்பாவை’  எனப் பெயரிட்டார். பத்...