நன்னெறிக் கதைகள்
ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையையும், அவர்கள் வாழ்க்கையில் பெறுகிற வெற்றியையும் தீர்மானிப்பது அவர்களின் குழந்தைப்பருவமும், இளமைப்பருவமும்தான் என்று மனோதத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். மகிழ்ச்சியும், குதூகலமும் உடையதாகக் குழந்தைப் பருவம் அமைந்திருந்தாலும் அங்கு அச்சமும், அறியாமையும் சூழ்ந்துதான் இருக்கும். அதனால் குழந்தைகளை வீட்டில் வளர்க்கிறபோதும், ஆரம்பப் பள்ளிகளில் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்போதும் எளிமையான, இனிமையான கதைகள், பாடல்கள், மனங்கவரும் சிறிய நாடகங்கள் இவற்றின்மூலம் நல்ல செய்திகளைக் கற்பித்தால், நிச்சயமாக இத்தகைய குழந்தைகள் சாதனையாளர்களாக வருவார்கள் என்பதில் ஐயமில்லை. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக இருந்தவர் மகாத்மா காந்தியாக மாறுவதற்கு அவருடைய தாயாராகிய புத்திலிபாயும் ஒரு காரணம் எனக் காந்தியடிகள் தம் சுயசரிதையில் குறிப்பிட...