மர்மப்பெண்…அகதா கிறிஸ்டி…
உலகஇலக்கியங்களில் புராணம், இதிகாசம், வரலாறு, சமூகம் என எத்தனையோ பிரிவுகளில் இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்தாலும், மர்மக்கதைகளுக்கு என்று தனியான இடம் ஒன்று உண்டு. தமிழ் இலக்கிய உலகில் உரைநடையும், சிறுகதையும், புதினங்களும் (நாவல்) தோன்றியபிறகு, மர்மக்கதைகளும் தோன்ற ஆரம்பித்தன. பொதுவான மர்மக்கதைகளாகவும், புலன்விசாரணைகளோடு கூடிய மர்மக்கதைகளாகவும் எழுதியபெருமக்களான வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், கே. ரெங்கராஜு, மேதாவி போன்றவர்கள் இத்தகைய கதைகளுக்கானத் தொடக்கக்காலப் பிதாமகர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்தே பிற்காலத்தில் ரா. கி. ரங்கராஜன், தமிழ்வாணன், ரங்கராஜன் என்கின்ற சுஜாதா, ஸ்ரீவேணுகோபாலன் என்கின்ற பு ஷ் பா தங்கதுரை, பி. துரைசாமி என்ற பி. டி. சாமி என இவர்களைக் குறிப்பிடலாம். இதேபாணியில் எழுதுகின்ற எழுத்தாளர்களாக இன்றைக்கும் நம்மோடு வாழ்ந்துகொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கின்ற மர்மக்கதைமன்னர்களான...