இடுகைகள்

கண்டு மகிழவும்… உண்டுமகிழவும்…

படம்
              தைப்பொங்கலின் மூன்றாம்நாளைக் காணும்பொங்கலாக நாம் கொண்டாடுகின்றோம். நன்றித் திருநாளாக, திருவள்ளுவர் தினமாக முதல் இரண்டு நாட்களைக் கொண்டாடியபின் தை மூன்றாம் நாளைக்  காணும்பொங்கல்,  சிறுவீட்டுப்  பொங்கல்,  கன்னிப்பொங்கல்  என்னும் பலபெயர்களோடு இதனை  அழைத்து கொண்டாடுகின்றோம்.                இந்தநாளைப் பொறுத்தஅளவில் பொழுது சாயும் மாலைநேரத்தில் வீட்டில் உள்ள உறுப்பினர்களோடும், உறவினர்களோடும் நண்பர்களோடும் நீர்நிலைகளை நோக்கிச் சென்று அதன் கரைகளில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டுசென்ற பல்வகையான உணவுப்பொருள்களை (சித்ரான்னங்களை) ஊரோடும் கூடி உண்ணும் அழகான திருநாள்தான் காணும் பொங்கல் திருநாள்.                இதில் உணவுப் பதார்த்தங்களைக் கரையிலே வைத்துவிட்டு, ஆற்றுநீர், குளத்துநீர், கண்மாய் நீர், கடல்நீர் என எதுவாக இருந்தாலும் அதனை முதலில் வணங்குவது மகளிர் வழக்கம். பின்னர் வழிபாடு தொடங...

தைப்பொங்கல்…தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

படம்
                தைபிறந்தால்  வழி  பிறக்கும்  தங்கமே  தங்கம்                 தங்கச்  சம்பா  நெல்விளையும்  தங்கமே  தங்கம்… என்பது  ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’  என்ற திரைப்படத்தில் வருகின்ற பாடல். உலகெங்கும் அறுவடைத்திருநாள் என்பது மிக்க மகிழ்வோடும், நன்றியோடும் கொண்டாடப்படுகின்ற திருவிழா. அவ்வகையில் ஆடிப்பட்டம் தேடி விதைத்த நம்நாட்டு உழவர் பெருமக்கள் முதல்போக நெல்லை அறுவடை செய்தபின்பு, இரண்டாம்போக நெல்லை அறுவடை செய்கின்ற காலம் முன்பனிக்காலமான தை மாதமாகும்.    இவ்வாறு அறுவடை செய்த நெல் ஆண்டு முழுவதற்குமான உணவுப்பொருளாக நெற்களஞ்சியத்தில் நிறைந்திருக்கும். அறுவடை செய்யும்போது கிடைக்கின்ற வைக்கோல்கள், வைக்கோல்போர்களாக உழவர்களின் உடன் உழைக்கும் தோழர்களான மாடுகளுக்கு உணவாக எங்கும் நிறைந்திருக்கும்.           “அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு ...

அல்லவை போக்கி, நல்லவை ஏற்போம்… போகிப்பண்டிகை

படம்
“பழையன கழிதலும் புதியன புகுதலும்   வழுவல கால வகையினானே”                                                                    நன்னூல் – பவணந்தி முனிவர்.           தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி, பங்குனி வரையில் பனிரெண்டு மாதங்களை ஆறுபருவங்களாக நம்முடைய முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். இதற்குப் ‘பெரும்பொழுது’ எனப் பெயரிட்டுள்ளனர். இதேபோல, ஒருநாளின் பொழுதுகளை ஆறுபகுதிகளாகப் பிரித்து அதனைச் ‘சிறுபொழுது’ எனவும் வகுத்துள்ளனர். பெரும்பொழுது எனப் பார்க்கும்பொழுது:- சித்திரை வைகாசி                  –              இளவேனில் ஆனி ஆடி                      ...

மர்மப்பெண்…அகதா கிறிஸ்டி…

படம்
  உலகஇலக்கியங்களில் புராணம், இதிகாசம், வரலாறு, சமூகம் என எத்தனையோ பிரிவுகளில் இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்தாலும், மர்மக்கதைகளுக்கு என்று தனியான இடம் ஒன்று உண்டு. தமிழ் இலக்கிய உலகில் உரைநடையும், சிறுகதையும், புதினங்களும் (நாவல்) தோன்றியபிறகு, மர்மக்கதைகளும் தோன்ற ஆரம்பித்தன. பொதுவான மர்மக்கதைகளாகவும், புலன்விசாரணைகளோடு கூடிய மர்மக்கதைகளாகவும் எழுதியபெருமக்களான  வடுவூர்  துரைசாமி  ஐயங்கார்,  ஆரணி  குப்புசாமி  முதலியார்,  கே. ரெங்கராஜு,  மேதாவி  போன்றவர்கள் இத்தகைய கதைகளுக்கானத்  தொடக்கக்காலப்  பிதாமகர்கள்  என அழைக்கப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்தே பிற்காலத்தில்  ரா. கி. ரங்கராஜன்,  தமிழ்வாணன்,  ரங்கராஜன்  என்கின்ற  சுஜாதா,  ஸ்ரீவேணுகோபாலன்  என்கின்ற  பு ஷ் பா  தங்கதுரை,  பி.  துரைசாமி  என்ற  பி. டி. சாமி  என இவர்களைக் குறிப்பிடலாம். இதேபாணியில் எழுதுகின்ற எழுத்தாளர்களாக இன்றைக்கும் நம்மோடு வாழ்ந்துகொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கின்ற மர்மக்கதைமன்னர்களான...

நன்னெறிக் கதைகள்

படம்
                  ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையையும், அவர்கள் வாழ்க்கையில் பெறுகிற வெற்றியையும் தீர்மானிப்பது அவர்களின் குழந்தைப்பருவமும், இளமைப்பருவமும்தான் என்று மனோதத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.                மகிழ்ச்சியும், குதூகலமும் உடையதாகக் குழந்தைப் பருவம் அமைந்திருந்தாலும் அங்கு அச்சமும், அறியாமையும் சூழ்ந்துதான் இருக்கும். அதனால் குழந்தைகளை வீட்டில் வளர்க்கிறபோதும், ஆரம்பப் பள்ளிகளில் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்போதும் எளிமையான, இனிமையான கதைகள், பாடல்கள், மனங்கவரும் சிறிய நாடகங்கள் இவற்றின்மூலம் நல்ல செய்திகளைக் கற்பித்தால், நிச்சயமாக இத்தகைய குழந்தைகள் சாதனையாளர்களாக வருவார்கள் என்பதில் ஐயமில்லை.           மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக  இருந்தவர்  மகாத்மா காந்தியாக  மாறுவதற்கு அவருடைய தாயாராகிய  புத்திலிபாயும்  ஒரு காரணம் எனக் காந்தியடிகள் தம்  சுயசரிதையில்  குறிப்பிட...

தந்தையும் மகனும்

படம்
                இந்தக் காலக்குடும்பச் சூழலில் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அத்தை, மாமா, தாத்தா, பாட்டி போன்ற உறவுகள் நிறைந்த கூட்டுக்குடும்பங்களை நாம் காண்பது அரிதாக இருக்கிறது.                பெரும்பாலும் தாத்தா, பாட்டி போன்ற முதியவர்களிடத்தில் அடுத்த தலைமுறையினர் பேசுவதை, பழகுவதைக் குறைத்துக் கொண்டுள்ளனர். அப்பா மகனிடம், அம்மா மகளிடம் நேரிடையாகப் பேசுவதைக் காட்டிலும், தொலைபேசி மற்றும் செல்போனில் இருந்துதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.                ஒரு வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல்:- தந்தை:             உன்னைத் தவமிருந்து பெத்தேன்டா? மகன்:               உங்களை யாரு பெறச் சொன்னா? நாங்க என்ன அப்ளிகேசனா     போட்டோம்? தந்தை:...

இராமச்சந்திரன் என்றாலே வெற்றிதான் (டி.ஆர்.இராமச்சந்திரன்)

படம்
              தமிழ்த்திரைப்பட உலகில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி, பின்னர் காமெடியன் வேடம், குணச்சித்திர வேடம் எனப் பலவேடங்களில்ஜொலித்தவர்   டி.ஆர்.இராமச்சந்திரன் .   ‘சபாபதி’     படத்தில் காமெடி கலந்த கதாநாயகனாக இவர் அறிமுகமாகிப் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகக் கதாநாயகனை அப்படியே கண்முன் கொண்டுவந்து திரையில் நிறுத்தினார் டி.ஆர்.இராமச்சந்திரன்.      இதேபோல் ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த பிற்காலத்தில் லேடி சூப்பர்ஸ்டாராகவும் மிகச்சிறந்த பரதநாட்டியக் கலைஞராகவும் விளங்கிய  வைஜெயந்தி மாலாவுடன்  இவர்  ‘வாழ்க்கை’  படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படமும் பெருவெற்றியைப் பெற்றது.    வழக்கமாகக் கதாநாயகனின் தோழனாக ஒரு காமெடி நடிகர் வருவார். ஆனால்  ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’  என்ற படத்தில் டி.ஆர்.இராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க அவருக்குக் காமெடி நண்பனாக சிவாஜி கணேசன் நடித்திருப்பார் என்பது ஆச்சர்யமான செய்தி. பலபடங்களில் கதாநாயகனாக நடித்த இவர், தனக்கு ஏற்ற நகைச்சுவைக் கதைகளைத் தயாரித்...