இடுகைகள்

குடி… செயல்… வகைகள்

படம்
                                             இதென்ன?… திருக்குறளின் ஒரு அதிகாரம் போல இருக்கிறதே என்று பயப்பட வேண்டாம்.                கிராமங்களைப் பொறுத்தவரையில் ‘குடிகாரர்கள்’ இருக்கிறார்களே அவர்கள் தனி அந்தஸ்து பெற்ற ‘குடிமக்கள்’. அவர்களின் செயல்கள், அற்புதமான தத்துவக் கருத்துக்கள், பிரமாதமான ஆங்கிலம் இவைகளை எல்லாம் நேரில் பார்த்தவர்களுக்குத்தான் அவர்களின் அருமை தெரியும்.                இப்போது அப்படிப் புகழ்பெற்ற குடிகாரர்களில்… ஒருவரை அவரின் செயல்களைப் பார்த்தே தீருவது நல்லது.         குடிகாரர்களில் பலர் கெட்டவர்களாக இருக்கலாம். சிலர் கோமாளிகளாகவும் காட்சியளிப்பார்கள். ஆனால் பொதுவாக, ஒன்று அதிகம் பேசுவார்கள், அல்லது ஒன்றும் பேசாமல் கோபமாக அலைவார்கள்.      ...

கிராமத்து மனிதர்கள்

படம்
                               எங்கள் கிராமத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே, இந்த வீரம்மாவைப் பார்த்திருக்கிறேன்.  ‘ விளக்குமாற்று  வீரம்மாள்’  என்ற பெயர் சுற்றுப்பட்டிகளில்கூடப் பிரபலம். அநேகமாக இவள் பிறவியிலேயே விதவை என்பது ஒரு சாரார் கருத்து. பெரும்பாலும் சடையாகவும் இல்லாமல், மொட்டையாகவும் இல்லாமல் ஒரு மாதிரியாகத் தொங்கும் முடி. அதைப் பார்த்தாலே ‘சடாமுடி’ நினைவிற்கு வரும். ஐம்பது வயதைத் தாண்டிய உடம்பு. தான் எதையும் சட்டை செய்யாதவள் என்பதைக் காட்டுவதுபோலச் சட்டையே போடாத உடம்பு. சேலையைக் கட்டி அதனையும் இடுப்பில் இழுத்துச் சொருகி, ஆடுகால் தசை ‘தடங் தடங்’ என்று அதிர, வலது கையில் விளக்குமாற்றையும், இடதுகையில் வாளியும் பிடித்துச் சிலர் வீட்டு வாசலைப் பெருக்குபவள்.                பெரும்பாலும் காலையில் மட்டுமே காட்சி தருபவள். ஒருநாள் காலையில் பார்க்காவிட்டால் இனி அடுத்த நாள் காலையில்தான் ப...

வீரத்திற்கும்… ஞானத்திற்குமான நாள்… (மாட்டுப்பொங்கல்… திருவள்ளுவர் தினம்)

படம்
               தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் நாம் இந்த நாட்களைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றோம். முதலில் மாடுகளுக்கு நன்றி செலுத்தவேண்டிய அவசியம் என்னவென்றால் மனிதர்களோடு குடும்பத்தில் ஒரு நபராக இருப்பது கிராமங்களில் இன்றைக்கும் மாடுகள்தான்.                இந்த மாடுகள், காளைமாடுகளாக இருந்தால், அவை நிலம் உழுக உழவுக்கும், நீர் இறைக்க சாலுக்கும், பயணம் செய்ய வண்டிகளை இழுக்கவும் எனப் பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதஇனக்குழு வேளாண்மைச் சமுதாயத்தைத் தொடங்கிய காலத்திலிருந்து உடனிருப்பவை.                இதேபோல பசுக்கள், வீட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படை. நாம் பசுக்களுக்கு என்ன கொடுக்கிறோம்? பதிலுக்கு பசுக்கள் நமக்கு என்ன கொடுக்கின்றன? என்பதைச் சற்றே எண்ணிப்பாருங்கள் நிலத்தை அறுவடை செய்கிறோம். நெல்மணிகளை நாம் எடுத்துக்கொண்டு கழிவுப்பொருளாகிய வைக்கோலை மாட்டுக...

திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள்

படம்
        இந்தியத் திரைப்பட வரலாற்றில் தமிழ்த் திரையுலகிற்கு ஒரு தனியிடம் உண்டு. அமெரிக்காவில்  ஹாலிவுட் , பம்பாயில்  பாலிவுட்,  தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தை  கோலிவுட்  என்று வேடிக்கையாகப் பத்திரிக்கையாளர்கள் குறிப்பிடுவது உண்டு.                1931இல் தமிழ் சினிமா பேசவும், பாடவும் தொடங்கியது. அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும் இத்திரையுலகில் புகழும், பணமும், பதவியும் பெற்று உயர்ந்தோர் பலர். அதைப்போலத் தங்கள் நடிப்பால் இசையால், கவிதைகளால் தமிழ்த்திரைக்குப் பெரும்புகழை உலக அரங்கில் எடுத்துச் சொல்லுமளவிற்குப் பெருமை சேர்த்தவர்களும் உண்டு.                இத்தகு புகழ்மிக்க தமிழ்த் திரைப்பட உலகில் காலம்காலமாகத் தங்களது நகைச்சுவை நடிப்பால் வாழ்ந்த காலத்திலும், மறைந்தபோதிலும் மக்களை மகிழ்வித்து, தற்போதும் மகிழ்வித்துக் கொண்டிருக்கின்ற நகைச்சுவை நடிகர்கள் ஒரு தனியிடத்தைப் பெறுகிறார்கள்.    திரு.  கா...

கண்டு மகிழவும்… உண்டுமகிழவும்…

படம்
              தைப்பொங்கலின் மூன்றாம்நாளைக் காணும்பொங்கலாக நாம் கொண்டாடுகின்றோம். நன்றித் திருநாளாக, திருவள்ளுவர் தினமாக முதல் இரண்டு நாட்களைக் கொண்டாடியபின் தை மூன்றாம் நாளைக்  காணும்பொங்கல்,  சிறுவீட்டுப்  பொங்கல்,  கன்னிப்பொங்கல்  என்னும் பலபெயர்களோடு இதனை  அழைத்து கொண்டாடுகின்றோம்.                இந்தநாளைப் பொறுத்தஅளவில் பொழுது சாயும் மாலைநேரத்தில் வீட்டில் உள்ள உறுப்பினர்களோடும், உறவினர்களோடும் நண்பர்களோடும் நீர்நிலைகளை நோக்கிச் சென்று அதன் கரைகளில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டுசென்ற பல்வகையான உணவுப்பொருள்களை (சித்ரான்னங்களை) ஊரோடும் கூடி உண்ணும் அழகான திருநாள்தான் காணும் பொங்கல் திருநாள்.                இதில் உணவுப் பதார்த்தங்களைக் கரையிலே வைத்துவிட்டு, ஆற்றுநீர், குளத்துநீர், கண்மாய் நீர், கடல்நீர் என எதுவாக இருந்தாலும் அதனை முதலில் வணங்குவது மகளிர் வழக்கம். பின்னர் வழிபாடு தொடங...

தைப்பொங்கல்…தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

படம்
                தைபிறந்தால்  வழி  பிறக்கும்  தங்கமே  தங்கம்                 தங்கச்  சம்பா  நெல்விளையும்  தங்கமே  தங்கம்… என்பது  ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’  என்ற திரைப்படத்தில் வருகின்ற பாடல். உலகெங்கும் அறுவடைத்திருநாள் என்பது மிக்க மகிழ்வோடும், நன்றியோடும் கொண்டாடப்படுகின்ற திருவிழா. அவ்வகையில் ஆடிப்பட்டம் தேடி விதைத்த நம்நாட்டு உழவர் பெருமக்கள் முதல்போக நெல்லை அறுவடை செய்தபின்பு, இரண்டாம்போக நெல்லை அறுவடை செய்கின்ற காலம் முன்பனிக்காலமான தை மாதமாகும்.    இவ்வாறு அறுவடை செய்த நெல் ஆண்டு முழுவதற்குமான உணவுப்பொருளாக நெற்களஞ்சியத்தில் நிறைந்திருக்கும். அறுவடை செய்யும்போது கிடைக்கின்ற வைக்கோல்கள், வைக்கோல்போர்களாக உழவர்களின் உடன் உழைக்கும் தோழர்களான மாடுகளுக்கு உணவாக எங்கும் நிறைந்திருக்கும்.           “அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு ...

அல்லவை போக்கி, நல்லவை ஏற்போம்… போகிப்பண்டிகை

படம்
“பழையன கழிதலும் புதியன புகுதலும்   வழுவல கால வகையினானே”                                                                    நன்னூல் – பவணந்தி முனிவர்.           தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி, பங்குனி வரையில் பனிரெண்டு மாதங்களை ஆறுபருவங்களாக நம்முடைய முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். இதற்குப் ‘பெரும்பொழுது’ எனப் பெயரிட்டுள்ளனர். இதேபோல, ஒருநாளின் பொழுதுகளை ஆறுபகுதிகளாகப் பிரித்து அதனைச் ‘சிறுபொழுது’ எனவும் வகுத்துள்ளனர். பெரும்பொழுது எனப் பார்க்கும்பொழுது:- சித்திரை வைகாசி                  –              இளவேனில் ஆனி ஆடி                      ...