குடி… செயல்… வகைகள்
இதென்ன?… திருக்குறளின் ஒரு அதிகாரம் போல இருக்கிறதே என்று பயப்பட வேண்டாம். கிராமங்களைப் பொறுத்தவரையில் ‘குடிகாரர்கள்’ இருக்கிறார்களே அவர்கள் தனி அந்தஸ்து பெற்ற ‘குடிமக்கள்’. அவர்களின் செயல்கள், அற்புதமான தத்துவக் கருத்துக்கள், பிரமாதமான ஆங்கிலம் இவைகளை எல்லாம் நேரில் பார்த்தவர்களுக்குத்தான் அவர்களின் அருமை தெரியும். இப்போது அப்படிப் புகழ்பெற்ற குடிகாரர்களில்… ஒருவரை அவரின் செயல்களைப் பார்த்தே தீருவது நல்லது. குடிகாரர்களில் பலர் கெட்டவர்களாக இருக்கலாம். சிலர் கோமாளிகளாகவும் காட்சியளிப்பார்கள். ஆனால் பொதுவாக, ஒன்று அதிகம் பேசுவார்கள், அல்லது ஒன்றும் பேசாமல் கோபமாக அலைவார்கள். ...