நாங்கள் போட்ட நாடகங்கள் – பகுதி 2
சகுனி வேடம் போட்ட நான் வஞ்சமாகச் சிரிக்கும்போதெல்லாம் மூக்கிற்குள் ஒட்டு மீசை போக… அதை நான் தாயம் போடுவதற்கு வைத்திருந்த சிறுகட்டையால் சமாளித்தேன். (சகுனி தாயக் கட்டையோடு இருக்கக் காரணம் இதுதான்) துரியோதனன் அடிக்கடி என்னிடம் வந்து …. ‘ மாமா நான் என்ன செய்யட்டும் மாமா…. என்ன செய்யட்டும்’ என்று புலம்புவார். நாடகத்தைப் பார்த்த பலர் உருகிப் போனார்கள். எனக்குத்தான் உண்மை தெரியும். அவர் வசனத்தை மறந்த போதெல்லாம் பேசுகிற ஒரே வசனம் ‘மாமா… நான் என்ன செய்யட்டும் மாமா… என்ன செய்யட்டும்’ என்பதுதான். பாஞ்சாலி துயிலை உரியும் ‘ சீனுக்காக’ மாணவர்கள் ஆவலாகக் காத்திருக்க நாங்கள் அதைப் புதுமுறையில் திரைபோட்டு மறைத்துக் காண்பித்தோம். கோபத்தில் மாணவர்கள் பெஞ்சுகளை உடைக்க, கடைசியில் சபதக் காட்சி… ...