இடுகைகள்

பள்ளிப்பருவத்திலே…

படம்
          அன்று உலகமே சந்தோசத்தில் ஆழ்ந்திருக்கச், சூரியன் கிழக்கே உதிக்க, எங்கள் வீட்டில் எல்லோரும் அவசரமாகக் காரியங்களில் ஈடுபட, நான் காலையில் எழுப்பப்பட்டேன், குளுப்பாட்டப்பட்டேன். வெளுத்த உடைகள் எனக்கு அணிவிக்கப்பட்டன. கழுத்தில் மாலை போடாத ஆடுமாதிரி நான் முழிக்க என்னைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள். அநேகமாக இழுத்துச் சென்றார்கள்.           பள்ளிக்கூட வாசலில் ஒரு சிறுவனை யாரோ அடிக்க அவன் ‘குய்யோ முறையோ’ என்று அலறிக்கொண்டிருந்தான். எனக்கு அப்போதே காய்ச்சல் வந்தது. அது ஒரு கிறிஸ்தவப் பள்ளி. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் எனக்கு உயிரே போய்விட்டது.                யாரோ ஒழுங்காகப் பள்ளிக்கு வராத பையன் என்று நினைத்தேன். என்கூட வந்த ஒருவனும் அதை ஆமோதித்தான். அப்போது எனக்கு வயது ஆறு.                என் அப்பா என்னை விட்டுவிட்டு ‘ஒழுங்கா இரு, பள்ளிக்கூடம் விட்டதும்தான் வரணும்’ என்று...

நாங்கள் போட்ட நாடகங்கள் – பகுதி 2

படம்
                சகுனி வேடம் போட்ட நான் வஞ்சமாகச் சிரிக்கும்போதெல்லாம்  மூக்கிற்குள் ஒட்டு மீசை போக… அதை நான் தாயம் போடுவதற்கு வைத்திருந்த சிறுகட்டையால் சமாளித்தேன். (சகுனி தாயக் கட்டையோடு இருக்கக் காரணம் இதுதான்)  துரியோதனன் அடிக்கடி என்னிடம் வந்து …. ‘ மாமா  நான்  என்ன  செய்யட்டும்  மாமா….  என்ன  செய்யட்டும்’  என்று புலம்புவார். நாடகத்தைப் பார்த்த பலர் உருகிப் போனார்கள். எனக்குத்தான் உண்மை தெரியும். அவர் வசனத்தை மறந்த போதெல்லாம் பேசுகிற ஒரே வசனம் ‘மாமா… நான் என்ன செய்யட்டும் மாமா… என்ன செய்யட்டும்’ என்பதுதான்.                பாஞ்சாலி துயிலை உரியும்  ‘ சீனுக்காக’  மாணவர்கள் ஆவலாகக் காத்திருக்க நாங்கள் அதைப் புதுமுறையில் திரைபோட்டு மறைத்துக் காண்பித்தோம். கோபத்தில் மாணவர்கள் பெஞ்சுகளை உடைக்க,                கடைசியில் சபதக் காட்சி…     ...

நாங்கள் போட்ட நாடகங்கள்…

படம்
               ‘உன் நடிப்பெல்லாம் எங்கிட்ட வேணாம்’                ‘அவன் பெரிய நடிகன்யா’                ‘இந்த நடிப்புத்தானே வேணாங்கிறது’                ‘எங்கிட்ட அப்பிடி நடிச்சு ஏமாத்திட்டாண்டா’ என்று பலரும் பலமுறை பலரைப் பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தச் சொற்கள் உண்மையான நடிகரைப் பற்றியோ, அவரது நடிப்பைப் பற்றியோ சொல்லப்படுவன அல்ல. வாழ்க்கையில் நடிக்கும் மனிதர்களைப் பற்றியே…                நான் எங்க;ரில் எங்கள் வயதில் நாடகம் போட முயற்சித்ததையும், அதில் பட்ட சிரமங்களையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.                எங்கள் ஊரின் மறுகரையில் இருந்த அக்கிரகாரத்துக் கிருஷ்ணன் கோவிலில் திருவிழா...

எலி வேட்டை

படம்
                யானைக்கொரு காலம் வந்தால்                 பூனைக்  கொரு  காலம்  வரும்” இது பழமொழி. புதுமொழி சொல்ல வேண்டுமென்றால்,                 ‘ புலிக்குப்  பயந்த  காலம்  போய்                  எலிக்குப்  பயந்த  காலமாகி  விட்டது’  எனக் கூறலாம்.                அப்படி என்ன எலிகளுக்குப் பலம் வந்து விட்டது என நினைக்கிறீர்களா? எலியால் விளைந்த துயரையும், அதனால் விளைந்த பலனையும் உங்களுக்குக் கூறட்டுமா?                அப்போது நாங்கள் கிராமத்தில் இருந்தோம். மிகப்பெரிய பழைய வீடு. பெரும்பாலும் பகலில்கூட, கீழே படுத்திருப்பவரை மிதித்துக் கொண்டு போகும்பட...

கிராமத்து இராத்திரிகள்

படம்
நான் சொல்லப்போவது நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது. அப்போது எனக்குப் பத்து வயது. எங்க அப்பாவுக்கு கிராமத்திற்கு மாற்றலாகி, அந்தப் பெரிய தெருவிற்கு அப்போதுதான் குடி வந்திருந்தோம்.                தெருப்பையன்கள் எல்லோரும் என்னை ஒரு வினோதப் பொருளாகப் பார்த்தார்கள். பக்கத்திலேயே பள்ளிக்கூடம். நான் முதன்முதலாக அப்பள்ளிக்கூடம் போனபோது மீசை தாடி, நீண்ட முடியோடு ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். யாரோ சாமியார் என்று நினைத்தேன். அவர்தான் தலைமை ஆசிரியர். என்னைப் பார்த்ததும்….                “ஏண்டா நேத்து வர்லே? மண்டிக்கால் போடு” சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார்.                எனக்குப் பயத்தில் தொண்டை அடைத்தது. முழங்கால் போட்டேன்.                ‘இவன் இன்னிக்குத்தான் சார் சேர்ந்திருக்கான்’ ஒருவன் கத்தினான். ஹும் சர...

கிராமப் பேருந்து

படம்
சான்றோர்களே! நீங்கள் அனைவரும் டவுன் பஸ்ஸைப் பார்த்து, அதில் பிரயாணம் செய்து சுகப்பட்டிருப்பீர்கள். ஆதலால் அதுபற்றி, அதன் உருவம் பற்றி அதிகமாக இங்கு பேசப்படவில்லை. முதன்முதலில் இந்தியாவில் இரயிலைப் பார்த்தவர்கள் பலர் இப்போது இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். பஸ்ஸைக் கண்டவர்கள் இருக்கிறார்கள். நான் எங்கள் ஊருக்கு முதன்முதலில் வந்த டவுன் பஸ்ஸையும், பிறகு அது கிராமிய பஸ் ஆனதையும் சொல்லப்போகிறேன். அதுதவிர டவுன் பஸ்ஸில் செய்யும் பிரயாணம் நாளுக்கு நாள் வசதிக் குறைவில் அடைந்து வரும் முன்னேற்றத்தையும் நாம் காணப்போகிறோம்.                முதலில்  1. முதல்  டவுன்  பஸ்  அனுபவம், 2.  டவுன்  பஸ்களில்  ஏறும்  முறைகள், 3.  உட்கார  இடம்  பிடிக்கும்  முறை, 4.  பஸ்ஸில்  தூக்கமும்,  அதன்  பயனும், 5.  பல  முக்கியத்  தலங்களில்  டவுன்  பஸ்ஸின்  அற்புதங்கள்  ஆகியவை பற்றி இங்கு பார்த்துக்கொள்ளலாம். பயணச்சீட்டு (டிக்கெட்) வாங்காமல...

குடி… செயல்… வகைகள்

படம்
                                             இதென்ன?… திருக்குறளின் ஒரு அதிகாரம் போல இருக்கிறதே என்று பயப்பட வேண்டாம்.                கிராமங்களைப் பொறுத்தவரையில் ‘குடிகாரர்கள்’ இருக்கிறார்களே அவர்கள் தனி அந்தஸ்து பெற்ற ‘குடிமக்கள்’. அவர்களின் செயல்கள், அற்புதமான தத்துவக் கருத்துக்கள், பிரமாதமான ஆங்கிலம் இவைகளை எல்லாம் நேரில் பார்த்தவர்களுக்குத்தான் அவர்களின் அருமை தெரியும்.                இப்போது அப்படிப் புகழ்பெற்ற குடிகாரர்களில்… ஒருவரை அவரின் செயல்களைப் பார்த்தே தீருவது நல்லது.         குடிகாரர்களில் பலர் கெட்டவர்களாக இருக்கலாம். சிலர் கோமாளிகளாகவும் காட்சியளிப்பார்கள். ஆனால் பொதுவாக, ஒன்று அதிகம் பேசுவார்கள், அல்லது ஒன்றும் பேசாமல் கோபமாக அலைவார்கள்.      ...