கற்றார்கள்…. வென்றார்கள்…
படித்தால் உலகை வெல்ல முடியுமா? என்ற கேள்வி இன்றைய இளையதலைமுறையிடம் இருக்கிறது. இதற்குக் கவியரசு கண்ணதாசன் அவர்களுடைய பாணியில் விடைசொல்வதாக இருந்தால், ‘ மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னைத் தானும் அறிந்துகொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்….’ என்று புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் .அவர்கள் நடித்த ‘ வேட்டைக்காரன்’ படப் பாடலைச் சொல்லலாம். இதற்கு இரண்டு ஆத...