இடுகைகள்

தமிழ்போன்ற இளங்குமரனார்…

படம்
தமிழ் இலக்கண இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுத்த சான்றோர் பலரைப் பற்றி படித்திருக்கிறோம். அத்தகைய பெருமக்களுள் ஒருவரோடு வாழ்ந்த காலத்தை எண்ணி மகிழ்கிறோம். ஆம், சமீபத்தில் நம்மைவிட்டு மறைந்த  திரு. இரா. இளங்குமரனார்  அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குக் கிடைத்தப் பெருமை. மதுரை அருகே அமைந்துள்ள  திருநகர்  முத்துத்தேவர்  முக்குலத்தோர்  பள்ளியில்  அவர் பணிபுரிந்த காலத்தில்  என்  தந்தையார்  புலவர்  கு. குருநாதன்  அவர்களுக்கு நெருங்கிய நண்பராய்த் திகழ்ந்தார். நான் பள்ளியில் படிக்கிற காலங்களிலேயே அவரின் அருந்தமிழைக் கேட்டு வியந்திருக்கிறேன். திரு. வி. கல்யாணசுந்தரனார்,  மறைமலையடிகள்,  பேரறிஞர்  அண்ணா,  மொழிஞாயிறு  தேவநேயப்  பாவாணர்,  கலைஞர்  கருணாநிதி   போன்றோரின் எழுத்துநடையும், பேச்சுநடையும் அழகுமிகு இலக்கியத் தமிழிலேயே அமைந்திருக்கும். அவர்களைப்போன்றே எழுத்துநடையும், பேச்சுநடையும் கொண்டவர் நம் இளங்குமரனார் அவர்கள். 1983ஆம் ஆண்டில் நான் இளங்கலை (எம்.ஃபில்.,) பட்டம் ...

உலகச் சிறுகதை மன்னர் ஆன்டன் செக்கோவ்

படம்
ரஷ்ய எழுத்தாளர்களுள் மிகவும் உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்  ஆன்டன்  செக்கோவ்.   சிறுகதைகளின்  தந்தை  என்று அழைக்கப்படுகின்ற அளவிற்கு இவருடைய கதைகளின் வடிவம் ரஷ்யர்களை மட்டுமல்லாமல் மொழிபெயர்க்கப்பட்ட அத்தனை நாட்டு மக்களையும் ஈர்த்தது. அதிலும் குறிப்பாக சிறுநாடகங்கள் மற்றும் சிறுகதைகள் ரஷ்யாவின் அதிகாரவர்க்கத்தை நையாண்டி செய்ததோடு எளியமக்களின் மனநிலையை, ஆளும் வர்க்கத்தார் உணர்ந்து கொள்ளுமாறு செய்த பெருமையும் இவர் கதைகளுக்கே உண்டு. சான்றாக,  ‘ பச்சோந்தி’  என்ற சிறுகதை இது நாடக வடிவிலும் உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு எல்லா நாட்டு அதிகாரவர்க்கத்தையும் ஒரு அசைப்பு அசைத்துப் பார்த்தது. அந்தக் கதை இப்படி ஆரம்பிக்கும். சந்தைக்கு வந்த ஏழை விவசாயி ஒருவனை ஒரு நாய் கடித்துவிடும். உடனே அவன் காவல்நிலையத்திற்குச் சென்று அந்த நாய் வைத்திருப்பவனைத் தண்டிக்குமாறு வேண்டுவான். அப்போது அந்த காவலர்களுக்குள் நடக்கும் உரையாடல்தான் இந்த நாடகத்தின் உயிர்நாடி. முதல் காவலன்: ‘இந்த நாயை வைத்திருந்தவனை உடனடியாகக் கைது          ...

கற்றார்கள்…. வென்றார்கள்…

படம்
படித்தால் உலகை வெல்ல முடியுமா? என்ற கேள்வி இன்றைய இளையதலைமுறையிடம் இருக்கிறது. இதற்குக்  கவியரசு கண்ணதாசன்  அவர்களுடைய பாணியில் விடைசொல்வதாக இருந்தால்,                 ‘ மானம்  பெரியதென்று  வாழும்  மனிதர்களை                 மான்  என்று  சொல்வதில்லையா                 தன்னைத்  தானும்  அறிந்துகொண்டு                 ஊருக்கும்  சொல்பவர்கள்  தலைவர்கள்  ஆவதில்லையா               அறிந்தால் நீ உன்னை அறிந்தால்              உலகத்தில் போராடலாம்….’ என்று  புரட்சித்தலைவர்  எம். ஜி. ஆர் .அவர்கள் நடித்த  ‘ வேட்டைக்காரன்’  படப் பாடலைச் சொல்லலாம். இதற்கு இரண்டு ஆத...

பம்மல் முதல் கோமல் வரை

படம்
தமிழ்த் திரையுலகில், இலக்கிய உலகில், எழுத்துலகில் என்று சுடர்விட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்;. அவர்களில் ஒருவர்தான்  திரு. கோமல்  சுவாமிநாதன் . ஒரு திரைப்படம் ஒரு சிறுகதை, ஒரு மேடைப்பேச்சு, ஒரு கவிதை, ஒரு நாவல் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஏற்படுத்தும். சான்றாகத்,  ‘ தண்ணீர்  தண்ணீர்’  என்ற படம் நாடக எழுத்தாளர் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்களால் எழுதப்பட்டுப் பன்முறை மேடைநாடகமாக வெற்றிபெற்ற பெருமையை உடையது. அந்த நாடகத்தை அப்படியே வாங்கி, திரைக்கதை மட்டும் எழுதி, வசனத்தைக் கோமல் அவர்களை எழுதவைத்துத் தேசிய விருது பெறும் படமாக மாற்றிக் காட்டினார்  இயக்குநர்  சிகரம்  கே. பாலச்சந்தர்  அவர்கள். இந்தப் படத்தில் ஒரு ஊரே தேர்தலில் வாக்களிக்க மறுத்தால் அரசாங்கமே அவர்களை நோக்கி வரும் என்பதைப் படத்தில் மிகச் சிறப்பான காட்சியாக வைத்திருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் எல்லாத் தேவைகளுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்த்து நிற்காமல் நமக்கு நாமே என்பதை மனதில்கொண்டு ஊர் கூடித் தேர் இழுத்தால் தண்ணீர் ஏரியே ஊருக்குள் வரும் எ...

டிஸ்கோ…1982…

படம்
உலகத்திலேயே எனக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று  எண்ணெய் தேய்த்துக் குளிப்பது. அடுத்தது முடிவெட்டுவது, அதாவது வெட்டிக்கொள்வது. குறிப்பாக முடிவெட்டிக்கொள்வதென்றால் மரண பயம்தான். இதற்குக் காரணம் சொல்ல வேண்டுமென்றால் சில பூர்வ புண்ணியக் கதைகளை நீங்கள் தெரிந்துதான் ஆகவேண்டும். சிறுவயதில் நான் முடிவெட்டிக் கொள்ளத் தனியாகச் செல்லக்கூடாது. உலகமே மாறினாலும் என் அப்பா கம்பீரமாக உடன் வந்தே தீருவார்.  எங்களுக்கு முடிவெட்ட ஒரு ஆஸ்தான முடித்திருத்தாளர் இருந்தார். அவரைத் தவிர யாரிடமும் நான் முடிவெட்டக்கூடாது. பெரும்பாலும் அவர் எங்கள் வீட்டிற்கே வந்துவிடுவார். ‘சாமி கிராப் வெட்டி விடட்டுமா?’ என்று அன்பாகக் கேட்டபடி எனக்கு முடிவெட்டத் தொடங்குவார், என் அப்பாவின் முன்னால். அந்த முறையை நினைத்தால் உடம்பே நடுங்கும். எல்லா முடிகளையும் ஒன்றாக்கி ஒரு கையில் கொத்தாகப் பிடித்து மறுகையில் கத்தரியால் வெட்டிச் சாய்ப்பார். பின் மண்டையில் மிஷின் ஒன்றால் ஒரு தேய்… தேய்ப்பார். முடிந்தது, அப்போது பார்த்தால் அநேகமாக ஏதாவது ஒரு ஆதினத்தின் இளைய சந்நிதானம் போல இருப்பேன். ஒரே கோபமும், அழுகையுமாய் வரும், ஒன்ற...

பள்ளிப்பருவத்திலே…

படம்
          அன்று உலகமே சந்தோசத்தில் ஆழ்ந்திருக்கச், சூரியன் கிழக்கே உதிக்க, எங்கள் வீட்டில் எல்லோரும் அவசரமாகக் காரியங்களில் ஈடுபட, நான் காலையில் எழுப்பப்பட்டேன், குளுப்பாட்டப்பட்டேன். வெளுத்த உடைகள் எனக்கு அணிவிக்கப்பட்டன. கழுத்தில் மாலை போடாத ஆடுமாதிரி நான் முழிக்க என்னைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள். அநேகமாக இழுத்துச் சென்றார்கள்.           பள்ளிக்கூட வாசலில் ஒரு சிறுவனை யாரோ அடிக்க அவன் ‘குய்யோ முறையோ’ என்று அலறிக்கொண்டிருந்தான். எனக்கு அப்போதே காய்ச்சல் வந்தது. அது ஒரு கிறிஸ்தவப் பள்ளி. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் எனக்கு உயிரே போய்விட்டது.                யாரோ ஒழுங்காகப் பள்ளிக்கு வராத பையன் என்று நினைத்தேன். என்கூட வந்த ஒருவனும் அதை ஆமோதித்தான். அப்போது எனக்கு வயது ஆறு.                என் அப்பா என்னை விட்டுவிட்டு ‘ஒழுங்கா இரு, பள்ளிக்கூடம் விட்டதும்தான் வரணும்’ என்று...

நாங்கள் போட்ட நாடகங்கள் – பகுதி 2

படம்
                சகுனி வேடம் போட்ட நான் வஞ்சமாகச் சிரிக்கும்போதெல்லாம்  மூக்கிற்குள் ஒட்டு மீசை போக… அதை நான் தாயம் போடுவதற்கு வைத்திருந்த சிறுகட்டையால் சமாளித்தேன். (சகுனி தாயக் கட்டையோடு இருக்கக் காரணம் இதுதான்)  துரியோதனன் அடிக்கடி என்னிடம் வந்து …. ‘ மாமா  நான்  என்ன  செய்யட்டும்  மாமா….  என்ன  செய்யட்டும்’  என்று புலம்புவார். நாடகத்தைப் பார்த்த பலர் உருகிப் போனார்கள். எனக்குத்தான் உண்மை தெரியும். அவர் வசனத்தை மறந்த போதெல்லாம் பேசுகிற ஒரே வசனம் ‘மாமா… நான் என்ன செய்யட்டும் மாமா… என்ன செய்யட்டும்’ என்பதுதான்.                பாஞ்சாலி துயிலை உரியும்  ‘ சீனுக்காக’  மாணவர்கள் ஆவலாகக் காத்திருக்க நாங்கள் அதைப் புதுமுறையில் திரைபோட்டு மறைத்துக் காண்பித்தோம். கோபத்தில் மாணவர்கள் பெஞ்சுகளை உடைக்க,                கடைசியில் சபதக் காட்சி…     ...