இடுகைகள்

மனக்கவலை மாற்றலாம்…

படம்
                ‘ சிரிப்பு  அதன்  சிறப்பைச்  சீர்; தூக்கிப்  பார்ப்பதே  நமது  பொறுப்பு’                                                                                                                           -மருதகாசி      கலைவாணர் என்.எஸ்.கிரு ஷ் ணன்  அவர்கள்  டி.ஏ.மதுரத்தோடு  இணைந்து சிரிப்புப் பொங்கப் பொங்கப் பாடிய பாட்டு சிரிப்புப் பாட்டு.  ‘ராஜாராணி’  என்ற இந்தத் திரைப்படம் வந்து 60 ஆண்டுகள் சென்றுவிட்டாலும் நம்மை மயக்கும் அந்தக் குரல்கள், பாடல் வரிகள்.                மனிதன் மகிழ்ச்சியை அனுபவிக்கப் பிறந்...

சிரிப்பும்…. சிறப்பும்…

படம்
                  “உலகின் முதல் பெண்மணி யார்?”                “ஏவாள்… சார்”                “அவளோட சிறப்பும் பெருமையும் எது?”                “கடவுளால் படைக்கப்பட்டது சிறப்பு சார்”                “பெருமை?”                “அவளுக்கு மாமியார் கிடையாது சார்”                ஒரு வகுப்பறையில் நடைபெற்ற உரையாடல் இது.                ‘இராமன் காடு சென்றபோது சீதையும் உடன் சென்றாளே…. ஏன் தெரியுமா?’              ...

அகராதியின் தந்தை… வீரமாமுனிவர்…

படம்
பழைமையும் பெருமையும் மிக்க இந்தியப் பெருநாட்டின் செல்வவளத்தை, இயற்கை வளத்தைக் கேள்வியுற்ற போர்ச்சுக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஆர்மீனியர்கள் போன்றோர் இந்நாட்டுக்கு முதலில் வியாபாரம் செய்யத்தான் வந்தனர். வந்த இடத்தில், இந்தியாவின் ஒற்றுமையின்மையைக் கண்டபின்பு, அவர்களெல்லாம் தங்களது துப்பாக்கி, பீரங்கி பலத்தால் இந்தியாவின் பல பகுதிகளை ஆளத் தொடங்கினார்கள். இப்போட்டியில் வென்றவர்கள் ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும்தான். (வந்தவாசி என்ற இடத்தில் நடந்த போர்தான் இந்த அதிகாரப் போட்டியைத் தீர்மானித்தது) பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரி, காரைக்கால், கோவா, ஆகிய பகுதிகளைக் கைப்பற்ற, இந்தியா முழுமையும் ஆங்கிலேயரின் ஆளுகைக்குக் கீழ் வந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சியைப் பிடித்ததோடு இந்தியாவில் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காகவும் இந்தியமக்களைத் தங்களது கிறித்தவ மதத்திற்கு மதம் மாற்றம் செய்வதற்காகவும் தங்கள் நாட்டுப் பாதிரிமார்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். அப்படி வந்தவர்கள்தான்  கால்டுவெல்,  ஜி. யு. போப்,  கான்ஸ்டன்டைன்  ஜோசப்  ...

கந்தர்வ(ன்) கானம்…

படம்
நாளும்  கிழமையும்  நலிந்தோர்க்கு  இல்லை ஞாயிற்றுக்கிழமையும்  பெண்களுக்கு  இல்லை                                                                                                                                                                         – கந்தர்வன் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதை எனும் புதிய காற்று  ‘ வானம்பாடி’  இயக்கமாகத் தமிழகத்தில் மெல்ல வீசத் தொடங்கியது. அதை தோற்றுவித்த பெருமக்கள் என்று பட்டியலிட்டால்  அப்துல்  ரகுமான்,  புவிஅரசு,  ஈரோடு  தமிழன்பன்  கங்கை  கொண்டான்,  சிற்பி, ...

நம்பிக்கையே நலம் தரும்…

படம்
                சின்ன வயசில எதைப் பார்த்தாலும் பயமாகத்தான் இருக்கும். பகல்ல நாய் பயம். இரவுல பேய் பயம்.                தமிழ்சினிமாப் பேய்கள் பாட்டுப்பாடி, ரொம்பச் சுத்தமாப் புடவைகட்டி, ஷாம்பு போட்டுக் குளிச்சு வரும்.                டி.வி- யில வர்ற பேய்கள் அப்பிடி இல்ல. அதப் பார்;த்தாலே பயமா இருக்கு.               இப்ப இருக்கிற சின்னக்குழந்தைகள் பகல் நேரத்துலகூட, பயத்தில லைட்டைப் போட்டுகிட்டுத்தான் பாத்ரூம் போறாங்க. இந்த பயத்தைப் போக்க என்ன வழி?             முதல்ல தன்னம்பிக்கை, அடுத்தது கடவுள் நம்பிக்கை, தேவையில்லாதது மூடநம்பிக்கை. தன்னம்பிக்கைக்கும், ஆணவத்துக்கும் என்ன வேறுபாடு?             படகோட்டின்னு’  பழைய எம்.ஜி.ஆர்;. படம் ஒண்ணு பார்த்திருப்பீங்க. அதுல ஒரு காட்சி…             ...

கலிகாலக் கம்பர்… மீனாட்சி சுந்தரம்பிள்ளை

படம்
திரிசரபுரம்  மீனாட்சி  சுந்தரம்  பிள்ளை  அவர்கள்  ‘ கலிகாலக்  கம்பர்’  என அழைக்கப்படுகின்ற கவிச்சக்கரவர்த்தி ஆவார். இவரது கற்பனையில் உதித்த தலபுராணங்களும், தனிப்பாடல்களும் கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ், தூது எனும் சிற்றிலக்கிய வகைகளும் இவரது கவிஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன இவர்; பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் படைத்துள்ளார்  என  இவரது  மாணவராகிய  தமிழ்த்தாத்தா  உ. வே.  சாமிநாத  ஐயர்    குறிப்பிடுகிறார். இவர் திருவாவடுதுறையின் ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் மற்றும் சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் ஆதரிக்கப்பெற்று அவ்ஆதீனத்தின் அவைக்களப்புலவராகவும் விளங்கினார். இவர் எழுதிய  வாட்போக்கிக்  கலம்பகம்  மற்றும்  சேக்கிழார்  பிள்ளைத்  தமிழ்,   திருநாகைக்காரோணப்  புராணம்  போன்ற நூல்கள் இவரின் தமிழ்ப்பணிக்குப் பெருமை சேர்த்து வருவன. அந்தக்காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்த சூழலில் அரிய நூல்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காகவே இவர் தன் வீட்டிலேயே...

வெற்றிப் படிக்கட்டுகள்…

படம்
வகுப்பறை…. அறிவுக்கான இடம் மட்டுமில்லை. கேலி, கிண்டல், மகிழ்ச்சி ஆகியவை நிறைந்த இடமும் வகுப்பறைதான். ‘நாளைக்குப் பரீட்சை’ என்றேன் மாணவர்களிடம். ‘முக்கியமான கேள்விகளையெல்லாம் சொல்லுங்க சார்’ ஒரு பையன் எழுந்து துணிவாகக் கேட்டான். எனக்குக் கோபம் வந்துவிட்டது. ‘முக்கியமான கேள்விகளைச் சொல்லவா? கேள்வித்தாளை அவுட் பண்ண நினைக்கிறியா? உட்கார்’. இன்னொரு பையன் எழுந்தான். ‘அவன் கிடக்கிறான் சார். நீங்க முக்கியமில்லாத கேள்வியைச் சொல்லுங்க’ என்றான். இரண்டுபேர் கேட்டதும் ஒன்றுதான். ஆசிரியரை ஏமாற்ற மாணவர்கள் செய்யும் வித்தைகள் இவையெல்லாம். சிலர், ஆசிரியர் சொன்னா எதையும் கேட்கக் கூடாதுங்கிறதுக்காகவே பள்ளிக்கூடம் வர்றது வழக்கம். நல்லது சொன்னாக் கேட்டுக்கணும். கெட்டது சொன்னா விட்டுடணும். காந்தியடிகள் ஒருமுறை ஆசிரியர் சொன்னதைச் செய்யவில்லை தெரியுமா உங்களுக்கு? மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி… பள்ளிக்கூடத்துல அப்படி ஒண்ணும் முதல் மாணவன் கிடையாது. சுமார் அல்லது ரொம்ப சுமார். ஒருநாள் அவங்க பள்ளிக்கூடத்துக்குக் கல்வி அதிகாரி (டி.ஈ.ஓ) வரப்போறதாச் சொல்லி ஒரே பரபரப்பு. வாத்தியார்கள் எல்லாம் எல்லாப் பையன்களையும் தயார்ப...