பகீரதனும்… கங்கையும்…
மனித வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவை முயற்சி, விடாமுயற்சி, இடைவிடா முயற்சி. இந்த மூன்றையும் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு முன்னேற வேண்டும். முயற்சி செய்தவர்களுக்கெல்லாம் வெற்றி கிடைத்துவிடுமா? என்று ஒரு கேள்வியைச் சிலர் கேட்பார்கள். இதற்குத் திருவள்ளுவர் விடைசொல்லும்போது தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். இறைவனின் அருள் இல்லாவிட்டாலும்கூட, ஒருவருடைய முயற்சி அந்த முயற்சிக்கு ஏற்ற பலனைக் கொடுக்கும். அது தெய்வத்தால் கூட முடியாததாக இருக்கலாம். ஆனால் முயற்சி செய்தால் எவரும் வெற்றிபெறலாம். இதற்கு ஆதாரமாகப் புராணத்தில் சொல்லப்படுகின்ற பகீரதனுடைய கதையைச் சான்றாகக் காணலாம். தம் முன்னோர்களின் சாபத்தைப் போக்குவதற்காக ஆகாயத்தில் ஓடுகின்ற கங்கைநதியை (பாகீரதி) பூமிக்குக் கொண்டுவரும் முயற்சியாகச் சிவபெருமானை நோக்க...