அறிவே ஆயுதம்…
‘ எடுத்த காரியம் யாவினும் வெற்றி’ – நம்முடைய மகாகவி பாரதியின் உற்சாகமான பாடல் வரி. படிக்கும்போதே நமக்கு உற்சாகத்தையும், மன எழுச்சியையும் உண்டாக்குகிறது. எல்லாக் காரியங்களிலும் எல்லோராலும் வெற்றிபெற முடியுமா? அப்படியானால் ஓட்டப்பந்தயங்களில் சிலர் மட்டுமே வெற்றிக்கோப்பையைப் பெறுகிறார்களே! மற்றவர்கள் தோல்வியடைகிறார்களே இதற்குக் காரணம் என்ன? முல்லா நஸ்ருதீன் ஒருமுறை தன் வீரப்பிரதாபங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார். ‘ஒருதடவை நான் என் எதிரிகளை ஓட வைத்தேன் தெரியுமா?’ ‘அப்படியா, எப்படி முல்லா இதைச் செய்தீர்கள்?’ – ஒருவன் ஆர்வத்தோடு கேட்டான். ‘அவர்களைப் பார்த்தவுடன் நான் ஓட ஆரம்பித்தேன். அவர்களும் என்னை விரட்டிக்கொண்டு ஓடி வந...