என் வழி தனி வழி….
நம் நாட்டில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எதனையும் ஆச்சரியத்தோடு பார்ப்பது. நம்புவது, அதனை மற்றவர் ஆச்சரியப்படும்படி சொல்வது. நான் சொல்வதுகூட உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஒருவர் சோதிடம் பார்க்க விரும்பினார். தன் குடும்ப ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சோதிடரிடம் சென்றார். சோதிடரிடம் கொடுத்துவிட்டு முன்னால் அமர்ந்தார். சோதிடர் ஆரம்பித்தார். ‘உங்கள் வீட்டு எண் 7ஆம் நம்பரா?’ வந்தவர் ஆச்சரியத்தோடு “ஆமாம் ஐயா” ‘கூடப்பிறந்தவர்கள் 5 பேர். பெண் 2, ஆண் 3, மூத்தவன் பெயர் மாணிக்கம். கடைசிப்பெண் பெயர் சீதாலட்சுமி….’ கடகடவென சொல்லிக்கொண்டே போனார். ‘சாமி நீங்க தெய்வந்தான் எப்படி இவ்வளவு துல்லியாமாச் சொல்றீங்க?’ ...