இடுகைகள்

குருவே வழிகாட்டி…. வாழ்வின் ஒளிகாட்டி…

படம்
                    கற்றது  கைம்மண்  அளவு…..  கல்லாதது  உலகளவு…’                இது பழங்காலத்தில் நம்முடைய ஒளவைப் பாட்டி சொன்ன வார்த்தை.                ‘அப்ப எவ்வளவு நாள் படிக்கிறது?’                ‘இதுல சந்தேகம் என்ன?’                ‘அதுக்கப்புறம் படிக்க வேண்டாமா?’                இப்படிப் பலபேர் பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம். ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம் பெருமையாகச் சொன்னார். ‘எம் பையன் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்!’                ‘அடடே அப்படியா? அப்புறம் என்ன செய்யப்...

மனிதக் கணினி செய்குத்தம்பி பாவலர்…

படம்
'அவதானம்’  என்பது ஒரே நேரத்தில் பல செயல்களை  ‘ அவதானித்தல்’  எனப் பொருள்படும். எட்டுவேலைகளை ஒரே நேரத்தில் செய்கின்ற ஆற்றலுடையவரை  ‘ அ ஷ் டாவதானி’  என்றும், பத்து வேலைகளைச் செய்பவரை  ‘ தசாவதானி’  என்றும், பதினாறு வேலைகளை ஒரேநேரத்தில் செய்பவரை  ‘ சோட ஷ   அவதானி’  என்றும் அழைப்பது வழக்கம். இந்த  ‘ அவதானி’  என்ற வடசொல்லுக்குத் தமிழில்  ‘ கவனகர்’  என்று பொருள். இதேபோல, நூறு வேலைகளை ஒரேநேரத்தில் செய்பவர்களை  ‘ சதாவதானி’  என அழைப்பார்கள். அத்தகைய சதாவதானிகளில் ஒருவர்தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  சதாவதானி  செய்குத்தம்பி  பாவலர் . இவர் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றலைப் பெற்றதோடு ஏக சந்தக் கிராதியாகவும் திகழ்ந்தார்.  ‘ ஏக  சந்தக்  கிராதி’  என்ற வடசொல்லுக்குப் பொருள் ஒருமுறை ஒரு சொல்லைச் சொன்னால் அதனை அப்படியே உள்வாங்கிக்கொண்டு திரும்பச் சொல்லுகிற திறமை. அத்திறமை உள்ளவர்களை  ‘ ஏக  சந்தக்  கிராதி’  என அழைப்பது வழக்கம். சதாவதானி செய்குத்தம்பி பா...

குரங்கும்… குழந்தையும்…

படம்
                    ஒரு ஊருக்கு ராமாயணக் கதையைக்  ‘ கதா  காலட்சேபம்’  செய்ய ஒரு முதியவர் வந்திருந்தார்.        ஊர்ப்பெரியவர்கள் அவரை வரவேற்று மகிழ்ந்தார்கள். கதை சொல்பவர் ஆர்வத்தோடு கேட்டார். ‘பெரியோர்களே, இராமனின் கதையை, ராமாயணத்தை உங்கள் ஊரில் காலட்சேபம் செய்ய வந்துள்ளேன்…. சம்மதம்தானே!’                ‘சந்தோஷம்…. சம்மதம்…’ என்றார்கள் ஊர்ப்பெரியவர்கள்.                ‘ஒருமாதம் முழுவதும் சொல்லட்டுமா?’                ‘ஒரு மாதமா…’இழுத்தபடி கேட்டார்கள் ஊரார்.                ‘சரி 15 நாட்கள் கதை சொல்லவா?’               ...

என் வழி தனி வழி….

படம்
        நம் நாட்டில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எதனையும் ஆச்சரியத்தோடு பார்ப்பது. நம்புவது, அதனை மற்றவர் ஆச்சரியப்படும்படி சொல்வது. நான் சொல்வதுகூட உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.     ஒருவர் சோதிடம் பார்க்க விரும்பினார். தன் குடும்ப ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சோதிடரிடம் சென்றார். சோதிடரிடம் கொடுத்துவிட்டு முன்னால் அமர்ந்தார்.                சோதிடர் ஆரம்பித்தார். ‘உங்கள் வீட்டு எண் 7ஆம் நம்பரா?’                வந்தவர் ஆச்சரியத்தோடு “ஆமாம் ஐயா”                ‘கூடப்பிறந்தவர்கள் 5 பேர். பெண் 2, ஆண் 3, மூத்தவன் பெயர் மாணிக்கம். கடைசிப்பெண் பெயர் சீதாலட்சுமி….’ கடகடவென சொல்லிக்கொண்டே போனார்.                ‘சாமி நீங்க தெய்வந்தான் எப்படி இவ்வளவு துல்லியாமாச் சொல்றீங்க?’     ...

அறிவே ஆயுதம்…

படம்
  ‘ எடுத்த  காரியம்  யாவினும்  வெற்றி’  – நம்முடைய  மகாகவி  பாரதியின்  உற்சாகமான பாடல் வரி. படிக்கும்போதே நமக்கு உற்சாகத்தையும், மன எழுச்சியையும் உண்டாக்குகிறது.       எல்லாக் காரியங்களிலும் எல்லோராலும் வெற்றிபெற முடியுமா?  அப்படியானால் ஓட்டப்பந்தயங்களில் சிலர் மட்டுமே வெற்றிக்கோப்பையைப் பெறுகிறார்களே! மற்றவர்கள் தோல்வியடைகிறார்களே இதற்குக் காரணம் என்ன?                 முல்லா  நஸ்ருதீன்  ஒருமுறை தன் வீரப்பிரதாபங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்.                ‘ஒருதடவை நான் என் எதிரிகளை ஓட வைத்தேன் தெரியுமா?’                ‘அப்படியா, எப்படி முல்லா இதைச் செய்தீர்கள்?’ – ஒருவன் ஆர்வத்தோடு கேட்டான்.        ‘அவர்களைப் பார்த்தவுடன் நான் ஓட ஆரம்பித்தேன். அவர்களும் என்னை விரட்டிக்கொண்டு ஓடி வந...

நகைச்சுவை என்னும் சாவி…

படம்
திரையுலகில் புதுமுகங்களை அறிமுகம் செய்த இயக்குநர்கள் என்று பார்க்கும்போது இயக்குநர்  ஸ்ரீதர்,  கே. பாலச்சந்தர்,  பாரதிராஜா,  இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதுபோல எழுத்துலகில் புதியவர்களைத், தான் பணியாற்றிய பத்திரிக்கையில் அறிமுகப்படுத்தியதோடு அவர்களுக்குப் பெரும் புகழையும்வாங்கித்தந்தவர்  எழுத்தாளர்  பத்திரிக்கையாளர்   சா. விசுவநாதன்  என்ற  சாவி   அவர்கள்தான். நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்களான  கல்கி,  புதுமைப்பித்தன்,  தேவன்  இவர்களையடுத்துச் சாவி அவர்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவரது மேடைப்பேச்சும் மிகுந்த நகைச்சுவையாய் இருக்கும். புரட்சித்தலைவர்  எம். ஜி. ஆர்,  சரோஜாதேவி  அவர்கள் நடித்து ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த  ‘ அன்பே  வா’  படம் நூறுநாட்கள் ஓடி வெற்றிகண்டது. அந்தப் படத்தினுடைய வெற்றிவிழாவில் திரு.சாவி அவர்கள் பேசும்போது, ‘இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் இந்தப் படத்தைத் தயாரித்த ஏ.வி.எம்.நிறுவனம்தான் என்று நினைப்பீர்கள். இல்லை’ என்றவுடன் மேடையில் இர...

கே.எம்.முன்ஷியின் ஜெய் சோம்நாத்….

படம்
      இந்தியா ஒரு பண்டைய தேசம் என்பதும், அறிஞர்களும் ஞானிகளும் நிறைந்த தேசம் இதுவென்பதும் உலகோர் ஏற்றுக்கொண்ட உண்மை. இதை மகாகவி பாரதி தன்னுடைய பாடலிலே சொல்லும்போது                ஞானத்திலே பர மோனத்திலே – உயர்                மானத்திலே அன்ன தானத்திலே              கானத்திலே அமுதாக நிறைந்த                கவிதையிலே உயர்நாடு……… என்று கூறுவார்.                தென்னாடாகிய தமிழகத்திற்கு மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறு உண்டு. இதேபோன்று வடஇந்தியாவிலும் வேதகால நாகரீகம் தொடங்கி, இதிகாசங்களைத்  தோ ற்றுவித்த  வால்மீகி,  வியாசர்,  காளிதாசர்,  பாரவி   போன்ற படைப்பாளப் பெருமக்களை கொண்ட வரலாறு அங்கும் உண்டு.                இன்றைக்கும்கூட  வி. ச. காண்டேகரை,  சரத்ச...