ஏட்டில் இருந்ததை நாட்டுக்குத் தந்தவர்… உ.வே.சா…
என்னுடைய வாழ்க்கையில் பல ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது, ‘உங்களுக்குப் பிடித்தப் புத்தகம் எது? யாருடைய எழுத்தை மீண்டும் மீண்டும் படிப்பீர்கள்?’ என்று கேட்கப்படும் கேள்விக்கு நான் சொல்கின்ற பதில் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களுடைய ‘ என் சரித்திரம்’ என்ற புத்தகம்தான் என்று குறிப்பிடுவேன். ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் என்னுடைய பிறந்த தினம் 1955 அக்டோபர் 19. சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் உ.வே.சா. அதிலும் குறிப்பாக 1855 பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அவர் உத்தமதானபுரம் என்ற ஊரில் வேங்கடராமன் என்பவரின் மகனாகப் பிறக்கிறார். இந்த மகிழ்ச்சியை நான் நெகிழ்ச்சியோடு பல நிகழ்ச்சிகளில் சொல்லுவேன். அவருடைய வரலாற்றைப் படிக்கத் தொடங்கும் அனைவருக்கும் நான் சொல்லுவது இதுதான். எழுத்துநடை எவ்வளவு எளிமையாக இனிமையாக இருக்கவேண்டும் என்பதற்கு உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரமே ஒரு சான்று. உ.வே.சா. தம் ஆசிரியராகிய மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்க...