இடுகைகள்

மதுரைத் தலங்களும் தேவாரமும்

படம்
                           ஒருமுறை முதுகலை வகுப்பில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்களுக்குப் பொருள் கூறிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன்.                அப்போது ஒரு மாணவர் எழுந்து ‘ஐயா, திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது ஏழாம்நூற்றாண்டு என்று கூறினீர்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாழ்ந்ததற்கானச் சான்றாதாரங்கள் ஏதாவது உண்டா?” எனக் கேட்டார். எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.                ‘தம்பி நல்ல கேள்வி கேட்டாய். அவர் வாழ்ந்தார் என்பதற்குப் பல சான்றாதாரங்கள் உண்டு.                அவர் செய்த அருஞ்செயல்கள்                நிகழ்த்திய சாதனைகள்           ...

ஆப்பிரிக்க நாட்டில் உயிர்நீத்த அதிசயச் சிறுமி…

படம்
ஆங்கிலேயர்கள் துப்பாக்கியை உன்னை நோக்கி குறிவைத்தபோது உனக்குப் பயம் ஏற்படவில்லையா?’ என்று அவர் கேட்க, அதற்கு அந்தப் பதினைந்து வயதுச் சிறுமி, ‘இல்லை, பயம் இல்லை, அவன் சுட்டாலும் என் உயிர் நாட்டுக்காகத்தான் போகப்போகிறது அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்’ என்று நோயுற்று மரணத்தருவாயில் இருந்த அவள் சொன்னாள். என் தேசம் விரைவில் சுதந்திரம் அடையும் என்று மகிழ்ந்தார் அந்தப் பெரியவர். இவ்வாறு அந்தச் சிறுமியிடம் பேசியவர்தான்  மோகன்தாஸ்  கரம்சந்த்  காந்தி.   அவருக்குப் பெருமையோடும் உரிமையோடும் பதிலளித்த அந்தச் சிறுமிதான் தமிழகத்தின் கடற்கரை நகரமான தில்லையாடி பகுதியைச் சார்ந்த  வள்ளியம்மை. ஆம், தில்லையாடி வள்ளியம்மையின் மரணத்தருவாயில் காந்தியடிகளோடு பேசுகிற வாய்ப்பையும் அந்தச் சிறுமிக்காகத் தேசப்பிதா கண்கலங்கியதும் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பெர்க் நகரில்தான் நடந்தவை. இந்த உரையாடலுக்குப்பின் அந்தச் சிறுமி சிலநாட்களில் மரணமடைந்து விட்டார். இந்நிகழ்ச்சி நடந்த ஆண்டு 1914. அதன்பின்னர் 33ஆண்டுகள் கழித்துதான் 1947இல் நாம் சுதந்திரம் பெற்றோம். தமிழக மண்ணில் பூலித்தேவன் தொடங்க...

மீனுக்கும் ஆயுள் கம்மி…

படம்
                ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் நமக்கு வழங்கும். சிறுபிள்ளைகளாக இருக்கும்போது, எங்காவது சுற்றுலா செல்கிறோம் என்று சொன்னால் இரவெல்லாம் தூங்கமாட்டோம். பஸ்ஸிலோ, ரயிலிலோ ஜன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டு ஓடிக்கொண்டிருக்கின்ற மரங்களை, எதிர்த்துச் செல்லும் வாகனங்களை, கூடவே வரும் நிலாவை, மேகத்தை ரசித்து மகிழ்வது எப்போதும் எல்லோருக்கும் பிடிக்கும்.            திருவனந்தபுரத்திலிருந்து செங்கோட்டை வரும் வழியில்  ‘ புனலூர்’  என்ற ஊருள்ளது. அந்த ஊர் தமிழ்ச்சங்கத்திற்கு ஒருமுறை நான் பேசப் போயிருந்தேன். கூட்டம் முடிந்ததும் நண்பர்கள் அந்த ஊரிலிருந்த ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். மிகப்பெரிய ஆறு. ஆற்றினையொட்டிய மலைமீது சாலை, மலைச்சரிவில் வீடுகளும் கட்டிடங்களும் அதில் அந்த உணவு விடுதி அமைந்திருந்தது.                மழை எப்போது வரும். எப்போது நிற்கும் என்று சொல்லமுடியாதபடி வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. நா...

வென்றார்கள்…. தந்தார்கள்….

படம்
          பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எவையாக இருந்தாலும் வகுப்பறைகள் சிறப்படையத் தேவை – நல்ல ஆசிரியர், சிறந்த மாணவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திட்டம். இவை சரியாக அமைந்தால் அத்தகைய கல்விக்கூடங்கள் சிந்தனைக் கூடங்களாக மாறும்.                எனக்கொரு ஆசிரியர் இருந்தார், அவர் பாடவேளை முடியும் மட்டும் பாடம் நடத்தமாட்டார். ஒரு அரைமணி நேரம் நடத்திவிட்டுக் கேள்விகள் கேட்கச் சொல்லுவார் அல்லது வகுப்பு மாணவர்களை இரண்டு அணிகளாக்கி ஒரு அணி மற்றொரு அணியைக் கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் தூண்டுவார். சிலநேரங்களில், தான் சிந்தித்ததைக் கேள்வியாக மாணவர்களிடத்திலே கேட்டுவிட்டுக், கடைசியில் அவரே விடையும் சொல்லுவார்.                ஒருமுறை எங்களுக்குத் திருக்குறள் நடத்திவிட்டுப் பொதுவாக ஒரு கேள்வி கேட்டார். ‘எங்க யாராவது சொல்லுங்க பார்க்கலாம். உடம்பு, உயிர் இந்த ரெண்டுல உடம்ப வளர்க்கறதுக்குச் சாப்பாடு சாப்பிடுகிறோம். தண்ணி குடிக்கிறோம் அது ...

ஏட்டில் இருந்ததை நாட்டுக்குத் தந்தவர்… உ.வே.சா…

படம்
             என்னுடைய வாழ்க்கையில் பல ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது, ‘உங்களுக்குப் பிடித்தப் புத்தகம் எது? யாருடைய எழுத்தை மீண்டும் மீண்டும் படிப்பீர்கள்?’ என்று கேட்கப்படும் கேள்விக்கு நான் சொல்கின்ற பதில் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களுடைய  ‘ என்  சரித்திரம்’  என்ற புத்தகம்தான் என்று குறிப்பிடுவேன். ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் என்னுடைய பிறந்த தினம் 1955 அக்டோபர் 19. சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் உ.வே.சா. அதிலும் குறிப்பாக 1855 பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அவர் உத்தமதானபுரம் என்ற ஊரில் வேங்கடராமன் என்பவரின் மகனாகப் பிறக்கிறார். இந்த மகிழ்ச்சியை நான் நெகிழ்ச்சியோடு பல நிகழ்ச்சிகளில் சொல்லுவேன்.               அவருடைய வரலாற்றைப் படிக்கத் தொடங்கும் அனைவருக்கும் நான் சொல்லுவது இதுதான். எழுத்துநடை எவ்வளவு எளிமையாக இனிமையாக இருக்கவேண்டும் என்பதற்கு உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரமே ஒரு சான்று.            உ.வே.சா. தம் ஆசிரியராகிய மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்க...

தமிழ்வேந்தர்…துணைவேந்தர்… வ.அய்.சுப்பிரமணியம்

படம்
தஞ்சை மண்ணின் புகழுக்கு நஞ்சை வயல்கள் மட்டும் காரணமல்ல, கொஞ்சு தமிழும்தான் காரணமாக இருக்கவேண்டுமென்று அன்றைய  தமிழக  முதல்வர்  புரட்சித்தலைவர்  எம். ஜி. ஆர்.  அவர்கள் தமிழுக்கென ஒரு பல்கலைக்கழகத்தை 1981ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். கரந்தைத்தமிழ்ச்சங்கத்தைஉருவாக்கிய   உமாமகேஸ்வரனார்,   வேங்கடசாமி நாட்டார்  போன்றோர்களின் கனவு தமிழுக்கெனத் தனிப்பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்பது. அக்கனவு நனவானது. இத்தகைய பெருமைமிகுந்த பல்கலைக்கழகத்திற்குத் தகுதியும், தமிழாய்ந்த பெருமகனுமாகிய ஒருவர்தான் துணைவேந்தராய் நியமிக்கப்படவேண்டுமென்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நினைத்தார். இத்தமிழ்ப் பல்லைக்கழகம் தொடங்கப்பட்டபோது புதிய வளாகத்தில் தொடங்கப்படவில்லை. சரபோஜி மன்னர்களின் அரண்மனையின் ஒரு பகுதியில்தான் பல்கலைக்கழகமும், நூலுகக் கட்டிடங்களும் இயங்கத் தொடங்கின. பல்கலைக்கழகம் கட்டுவதற்கு எவ்வளவு இடம் வேண்டுமென எம்.ஜி.ஆர் அவர்கள் அதிகாரிகளை அழைத்துக் கேட்டபோது அவர்கள் நூறு ஏக்கர் இடம் வேண்டும் என்று கேட்டதாகவும், எம்.ஜி.ஆர் அவர்கள...

வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பணி….

படம்
தமிழ் இலக்கிய உலகில் அச்சுக்கலையின் வருகைக்குப்பிறகு, ஏடுகளைப் பதிப்பித்தபெருமை  சி. வை. தாமோதரம்  பிள்ளை,  தமிழ்த்தாத்தா  உ. வே. சாமிநாத  ஐயர்,  பின்னத்தூர்  நாராயணசாமிஐயர்  போன்றோருடைய பணி குறிப்பிடத்தக்கது. இவர்களை அடுத்த நிலையில் காண்கிறபோது பதிப்பாசிரியராகத், தமிழ், மலையாள சொற்களஞ்சியங்களை உருவாக்கியவராக இலக்கியங்களின், அது எழுதிய புலவர்களின் காலங்களைக் கணித்த பெருமை  திரு. வையாபுரிப்பிள்ளை  அவர்களுக்கே உண்டு. தமிழகத்தின் தென்கோடியில் பிறந்த இவர் திருவனந்தபுரத்திலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ஆற்றிய தமிழ்ப்பணிக்கு ஈடுஇணை இல்லை. இலக்கியங்களின் காலத்தை இவர் நிர்ணயித்ததில் முரண்பாடுகள் உண்டு என  மொழிஞாயிறு  தேவநேயப்  பாவாணர்  போன்றவர்கள் மாற்றுக் கருத்தும் தெரிவித்தனர். எவ்வாறு இருப்பினும் வையாபுரிப் பிள்ளை அவர்களினுடைய கூர்த்த அறிவும், நுண்மாண் நுழைபுலத்தோடு கூடிய ஆராய்ச்சி முயற்சியும் அனைவராலும் போற்றத்தகுந்த ஒன்று. இத்தகைய பெருமைமிகுந்த தமிழுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வையாபுரிப்பிள்ளை அவர்களைப் பற்றிய விரி...