இடுகைகள்

பாம்புப் படுக்கையில்…

படம்
                பேச்சாளராக வாழ்க்கையைத் தொடங்குபவர்களுக்கு சோதனைகளும், வேதனைகளும் எப்போதும் அதிகம் காத்திருக்கும். தலைநகரத்தில் குளிரூட்டப்பட்ட அரங்கில், குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த நேரத்தில் முடிக்கும் சான்றோர்களும், உயர்அதிகாரிகளும் கலந்து கொள்ளும் கூட்டங்கள் ஒரு பேச்சாளருக்கு எப்பபோதும் கிடைக்கும் என்று நினைக்கக்கூடாது.                பல ஆண்டுகளுக்கு முன், நாங்கள் குழுவோடு தேனி, கம்பம் பகுதியில் ஒரு ஊருக்குப் பட்டிமன்றம் பேசச் சென்றோம். அந்த ஊரின் பெயர் பெருச்சாளிபட்டி. இந்த ஊரைத் தமிழகத்தின் வரைபடத்தில்கூடக் காணமுடியாது. நாங்கள் ஒருவழியாகத் தேடிப் பலரிடம் பேட்டி கண்டு இரவு 11மணிக்கு அந்த ஊரைக் கண்டுபிடித்துக் காரோடு ஊருக்குள் நுழைந்தோம்.                எங்கள் காரைப் பார்த்தவுடன் பெரிய மக்கள் கூட்டம் ஆரவாரமாக ஓடி வந்தது. “வந்தாச்சு வந்தாச்சு!” என்று சினிமாப் படப் பெட்டியைக் கண்ட தியேட்டர்காரர்கள் மாத...

பெருமைக்குரிய பெண்ணினம்…. மகளிர் தினம்…

படம்
                 மங்கைய  ராகப்  பிறப்பதற்கே –  நல்ல மாதவஞ்  செய்திட  வேண்டும்  அம்மா!                 பங்கயக்  கைந்நலம்  பார்த்தலவோ –  இந்தப் பாரில்  அறங்கள்  வளரும்  அம்மா!    எனப் பெண்களின் பெருமையை அழகாகப் பாடுகின்றார்  கவிமணி  தேசிய  விநாயகம்பிள்ளை.      மனிதகுலத்தின் தலைமைப்பொறுப்பு பெண்களிடமே இருந்தது. சொத்துடைமை காலத்துக்குப்பின்தான் அது தந்தைவழியாக மாறி ஆண் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தொடங்கினான் என எழுதுகிறார்  ராகுல சாங்கிருத்யாயன்.       நமதுநாட்டைப் பொறுத்தளவில் பூமிக்குப் பெயரும் பெண்தான். புண்ணிய நதிகளுக்குப் பெயர்களும் பெண்ணின் பெயர்கள்தான் (சிந்து, கங்கை, கோதாவரி, யமுனை, காவேரி). நமது புராண மரபுகளிலும் பெண்தெய்வங்களுக்குத் தனிஇடம் உண்டு. இந்தியாவின் அறுவகை மதங்களான  சைவம்,  வைணவம்,  சாக்தம்,...

மதுரையும்…பழைய புத்தகக் கடைகளும்…

படம்
          மதுரைக்குள்ளேயே மஹால் இருக்கு, தெப்பக்குளம் இருக்கு, ஏகப்பட்ட கோயில்கள் இருக்கு, புதுசா வந்த ஷாப்பிங் மால் நாலஞ்சு இருக்கு. அதெல்லாம் விட்டுட்டு பழைய புத்தகக் கடையைப் பார்க்கலாம்னு கூட்டிட்டுப் போறாரே, இது சாமிக்கே அடுக்குமா?’ என்று என்னோடு வந்த மாணவர்களில் ஒருவர் புலம்பியது என் காதில் விழுந்தது.                கல்லூரி முடித்து மாணவர்களை அழைத்துக்கொண்டு மதுரையின் புகழ்பெற்ற தெற்கு சித்திரை வீதியில் பழைய புத்தகக் கடைகளை நோக்கி நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது நான் என்னோடு வந்த மாணவரின் கவலைக்குரல் அவ்வாறு ஒலித்தது. என்னிடத்தில் எம்.ஏ., தமிழ் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் அவர்கள். தொன்மையான மதுரையின் பெருமைகளில் இந்தப் பழைய புத்தகக்கடைகளும் ஒன்று.                பழைய புத்தகக் கடைகளுக்கே சில அமைப்புகள் உண்டு. பத்துக்குப் பத்து இடத்தில் ஒரு நபர் மட்டுமே உட்காரக்கூடிய ஒரு சிறிய அறை. பழைய புத்தகங்களைப் போலவே முதிர்ந்த ...

மாமதுரை போற்றுவோம்…

படம்
          மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்ட நாளாகிய இன்று மதுரையைப் பற்றி கொஞ்சம் யோசிப்போமே….                “மதுர மதுரன்னு பெருமை பேசுறாங்களே…. அப்படி என்ன மதுரையில் இருக்கு?” என்று வகுப்பறையில் மாணவர் ஒருவர் எழுந்து கேள்விகேட்டார். அவர் கோவைப் பகுதியிலிருந்து முதுகலை படிக்க வந்தவர். ‘மாமதுரை போற்றுவோம்’ என்று மதுரையில் 3 நாட்கள் நடந்த விழாவின் பெருமைகளைப் பேசியபோதுதான் அம்மாணவர் அப்படிக் கேட்டார்.                இதற்கு நான் பதில் சொல்வதற்கு முன்பாக, ‘எங்க மதுரையில் பழமையான வைகை ஆறு இருக்கு’ என ஒரு மாணவரும்,                ‘ரெண்டாயிரம் வருசத்துக்கு முந்திய தமிழுக்கு முச்சங்கம் வச்சது எங்க மதுரதான் தெரியுமா?’ என்று ஒரு மாணவியும் சொல்ல,                 “ பாண்டியர்  குதிரை  குள...

வல்லமை தாராயோ…!

படம்
              வாழ்க்கை என்பது மிகுந்த ஓட்டத்தில் இருக்கிறது. நேற்றைக்கு வந்ததை இன்றைக்குப் பழையது என்கிறோம்.                முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஒரு திரையரங்கம் இருக்கும். அதற்கு நடந்துபோய்த் திரைப்படம் பார்ப்போம். போகிற வழியில் குடும்பமே மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டு போகும். திரும்ப வரும்போது, பார்த்த திரைப்படம் குறித்தோ அல்லது வேறு விஷயங்களைப் பற்றியோ பேசிக்கொண்டு வருவோம். உறங்கும் வரைக்கும் பேசிக்கொண்டிருப்போம். உறங்கி எழுந்தவுடன் பேசுவோம். இதெல்லாம் இப்போது இல்லை.                சமீபத்தில் எனது சொந்த ஊருக்கு அருகிலிருந்தத் திரையரங்கினை இடித்து விட்டார்கள். எனக்குக் கண்கள் கலங்கி விட்டன. அது ஏதோ நம்முடன் இருக்கும் உறவு போலத் தெரிந்தது. காரணம் என்னவென்றால் பழசு என்பது நன்றாக இருக்கும்.                உலகில் பழையதாகாதது என்று கடவுள், உறவு...

மதுரைத் தலங்களும் தேவாரமும்

படம்
                           ஒருமுறை முதுகலை வகுப்பில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்களுக்குப் பொருள் கூறிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன்.                அப்போது ஒரு மாணவர் எழுந்து ‘ஐயா, திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது ஏழாம்நூற்றாண்டு என்று கூறினீர்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாழ்ந்ததற்கானச் சான்றாதாரங்கள் ஏதாவது உண்டா?” எனக் கேட்டார். எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.                ‘தம்பி நல்ல கேள்வி கேட்டாய். அவர் வாழ்ந்தார் என்பதற்குப் பல சான்றாதாரங்கள் உண்டு.                அவர் செய்த அருஞ்செயல்கள்                நிகழ்த்திய சாதனைகள்           ...

ஆப்பிரிக்க நாட்டில் உயிர்நீத்த அதிசயச் சிறுமி…

படம்
ஆங்கிலேயர்கள் துப்பாக்கியை உன்னை நோக்கி குறிவைத்தபோது உனக்குப் பயம் ஏற்படவில்லையா?’ என்று அவர் கேட்க, அதற்கு அந்தப் பதினைந்து வயதுச் சிறுமி, ‘இல்லை, பயம் இல்லை, அவன் சுட்டாலும் என் உயிர் நாட்டுக்காகத்தான் போகப்போகிறது அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்’ என்று நோயுற்று மரணத்தருவாயில் இருந்த அவள் சொன்னாள். என் தேசம் விரைவில் சுதந்திரம் அடையும் என்று மகிழ்ந்தார் அந்தப் பெரியவர். இவ்வாறு அந்தச் சிறுமியிடம் பேசியவர்தான்  மோகன்தாஸ்  கரம்சந்த்  காந்தி.   அவருக்குப் பெருமையோடும் உரிமையோடும் பதிலளித்த அந்தச் சிறுமிதான் தமிழகத்தின் கடற்கரை நகரமான தில்லையாடி பகுதியைச் சார்ந்த  வள்ளியம்மை. ஆம், தில்லையாடி வள்ளியம்மையின் மரணத்தருவாயில் காந்தியடிகளோடு பேசுகிற வாய்ப்பையும் அந்தச் சிறுமிக்காகத் தேசப்பிதா கண்கலங்கியதும் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பெர்க் நகரில்தான் நடந்தவை. இந்த உரையாடலுக்குப்பின் அந்தச் சிறுமி சிலநாட்களில் மரணமடைந்து விட்டார். இந்நிகழ்ச்சி நடந்த ஆண்டு 1914. அதன்பின்னர் 33ஆண்டுகள் கழித்துதான் 1947இல் நாம் சுதந்திரம் பெற்றோம். தமிழக மண்ணில் பூலித்தேவன் தொடங்க...