இடுகைகள்

சந்தேகப் பேய்…

படம்
          ஒருமுறை நண்பர்களுடன் கொடைக்கானல் கிளம்பினோம். என்னைச் சேர்த்து ஐந்து பேர். இருக்கிற காசை வைத்துக்கொண்டு, சங்கடங்களைக் கூட, சந்தோஷமாக எடுத்துக்கொள்ளும் வயது அப்போது. நாங்கள் ஐந்து பேருமே, கொடைக்கானலை அப்போதுதான் பார்க்கிறோம்.                நாங்கள் பேருந்தில் இருந்து இறங்கியதும், அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் எங்கள் தோற்றத்தைப் பார்த்தவுடன், சடாரென்று கைடாக மாறி, எங்களுக்கு வழிகாட்ட, தங்க, உணவு ஏற்பாடு செய்யத் தயாராகி விட்டார். தங்குவதற்கு ஊருக்கு நடுவிலிருந்தால் அதிக வாடகை ஆகுமென்று மரங்களடர்ந்த தோப்புக்கு நடுவே, ஏற்பாடு செய்து கொடுத்தார்.                அது  ‘ நெஞ்சம்  மறப்பதில்லை’  வீடு போல் இருந்தது. மாடியறையில் தங்குதற்கு ஏற்பாடு செய்துவிட்டு, ஒரு திடுக்கிடும் செய்தியையும் சொன்னார். அந்த அறையில் ஒரு பெண் தூக்கு மாட்டிச் செத்ததாகவும், அந்த உடலைப் புதைக்காமல் எரித்துவிட்டதால் பேய் வருவதற்கான சாத்...

அரிமளத்தில் ஒரு அதிசயம்….

படம்
      பயணிப்பது என்பது எப்போதும் எனக்குப் பிடித்தமான ஒன்று. பயணப்படும்போது நாம் செல்லுகின்ற வாகனத்தின் வேகத்திற்கேற்ப நம்முடைய மனம் சிறகடித்துப் பறக்கும் என்பது உண்மை.  அப்படிப் பயணிக்கும்போது சிலர் நம்மைத் திகைக்க வைப்பார்கள், சிலர் நம்மை நகைக்க வைப்பார்கள். நகைத்தான சம்பவம் ஒன்று…       அப்போது பெருங்கூட்டத்தோடு வந்த பஸ் எங்கள் அருகிலே நிற்க, படியில் தொங்கிக்கொண்டு வந்த கண்டக்டர், ‘சில்லரை இல்லாதவங்க எல்லாரும் மரியாதையா இறங்குங்க…’ என்று கத்தினார். அவரோடு தொங்கிக்கொண்டு வந்த இன்னொருவர், ‘உன்கிட்ட இருக்கா?’ என்று கண்டக்டரைப் பார்த்துக் கேட்டார்.                ‘இல்லை’ என்று கண்டக்டர் எரிச்சலாகச் சொல்ல, ‘அப்ப நீயும் இறங்கு, பேசிக்கிட்டே போவோம்’ என்று சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். எங்கள் பயணமும் தொடங்கியது…        எந்த ஊருக்கு, எந்த நாட்டுக்கு நான் சென்றாலும் அந்த ஊரின், நாட்டின் பழைமை மிகுந்த கோயில்கள், நூலகங்கள், கோட்டைகள், அரண்மனைகள் போன்றவற்றைச் சுற்றிப...

நீ குளிச்சதே இல்லையா…..?

படம்
                பயணம் என்றாலே மகிழ்ச்சிதான். அதிலும் ஒத்த சிந்தனையும், ஒத்த வயதும் உள்ள நண்பர்களோடு பயணம் செய்யும்போது, அந்தப் பயணத்துக்கு ஈடில்லை. இணையில்லை. கேலி, கிண்டல் எத்தனை அலுப்பிலும் வெளிப்படும் நகைச்சுவை, பூலோக சொர்க்கமாக அமையும் நேரம்.                இப்படிப்பட்ட பயணத்தைக்கூட, குழப்பி விடுகிற நபர்களும் (?) சில சமயம் கூட வருவார்கள். ஒருமுறை நாங்கள் குற்றாலத்துக்கு வழக்கமான நண்பர்களோடு சென்றோம். அப்போது ஆறாவது விரல்போல், அதிகப்படியாய் ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் என் நண்பனுக்கு… நண்பனுக்கு… நண்பனுக்கு… நண்பனாம். அந்த நபர் எங்களைப் படுத்தியபாடு…. குற்றாலக் குரங்குகள் கூட அப்படி படுத்தி இருக்காது.                குற்றாலத்தில் இறங்கித், தங்கும் விடுதியில் பொருட்களை வைத்துவிட்டுப் பேரருவிக்கு (தமிழில் ‘மெயின் பால்ஸ்’) குளிக்கச் சென்றோம். பிறகு, அங்கிருந்து ஐந்தருவிக்கு நடந்தே செல்வது என்று திட்டமிட்டோம்....

கும்பிடப்போன தெய்வம்…

படம்
            சிறுவயதில் பள்ளிக்கூடம் படிக்கும் காலத்திலிருந்தே இரயிலில் பஸ்ஸில், சைக்கிளில், நடந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டே பிரயாணம் செய்வதில் எனக்கு எப்போதும் விருப்பம் அதிகம்.                புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய உணவு வகை இவற்றால் வரும் புதிய அனுபவங்கள் இவைதான் வாழ்க்கையை எப்போதும் புதுமையாக்குகின்றன என நினைப்பவன் நான்.                எனது பல்வகை உயர்வுகளுக்கு வழிகாட்டிய பேராசிரியர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்  டாக்டர்  நா. ஜெயராமன்  அவர்கள் ஆவார்.                மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் என்னுடைய எம்ஃபில் பட்டத்திற்கும், பி.எச்.டி பட்டத்திற்கும் வாய்ப்புக் கொடுத்து வழிகாட்டியவர் அவர்தான். நான் மேடைப் பேச்சாளராக இன்று விளங்கக் காரணமானவரும் அவர்தான். சிறந்த நகைச்சுவையாளர், அரிய மனிதர்.     ...

பாம்புப் படுக்கையில்…

படம்
                பேச்சாளராக வாழ்க்கையைத் தொடங்குபவர்களுக்கு சோதனைகளும், வேதனைகளும் எப்போதும் அதிகம் காத்திருக்கும். தலைநகரத்தில் குளிரூட்டப்பட்ட அரங்கில், குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த நேரத்தில் முடிக்கும் சான்றோர்களும், உயர்அதிகாரிகளும் கலந்து கொள்ளும் கூட்டங்கள் ஒரு பேச்சாளருக்கு எப்பபோதும் கிடைக்கும் என்று நினைக்கக்கூடாது.                பல ஆண்டுகளுக்கு முன், நாங்கள் குழுவோடு தேனி, கம்பம் பகுதியில் ஒரு ஊருக்குப் பட்டிமன்றம் பேசச் சென்றோம். அந்த ஊரின் பெயர் பெருச்சாளிபட்டி. இந்த ஊரைத் தமிழகத்தின் வரைபடத்தில்கூடக் காணமுடியாது. நாங்கள் ஒருவழியாகத் தேடிப் பலரிடம் பேட்டி கண்டு இரவு 11மணிக்கு அந்த ஊரைக் கண்டுபிடித்துக் காரோடு ஊருக்குள் நுழைந்தோம்.                எங்கள் காரைப் பார்த்தவுடன் பெரிய மக்கள் கூட்டம் ஆரவாரமாக ஓடி வந்தது. “வந்தாச்சு வந்தாச்சு!” என்று சினிமாப் படப் பெட்டியைக் கண்ட தியேட்டர்காரர்கள் மாத...

பெருமைக்குரிய பெண்ணினம்…. மகளிர் தினம்…

படம்
                 மங்கைய  ராகப்  பிறப்பதற்கே –  நல்ல மாதவஞ்  செய்திட  வேண்டும்  அம்மா!                 பங்கயக்  கைந்நலம்  பார்த்தலவோ –  இந்தப் பாரில்  அறங்கள்  வளரும்  அம்மா!    எனப் பெண்களின் பெருமையை அழகாகப் பாடுகின்றார்  கவிமணி  தேசிய  விநாயகம்பிள்ளை.      மனிதகுலத்தின் தலைமைப்பொறுப்பு பெண்களிடமே இருந்தது. சொத்துடைமை காலத்துக்குப்பின்தான் அது தந்தைவழியாக மாறி ஆண் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தொடங்கினான் என எழுதுகிறார்  ராகுல சாங்கிருத்யாயன்.       நமதுநாட்டைப் பொறுத்தளவில் பூமிக்குப் பெயரும் பெண்தான். புண்ணிய நதிகளுக்குப் பெயர்களும் பெண்ணின் பெயர்கள்தான் (சிந்து, கங்கை, கோதாவரி, யமுனை, காவேரி). நமது புராண மரபுகளிலும் பெண்தெய்வங்களுக்குத் தனிஇடம் உண்டு. இந்தியாவின் அறுவகை மதங்களான  சைவம்,  வைணவம்,  சாக்தம்,...

மதுரையும்…பழைய புத்தகக் கடைகளும்…

படம்
          மதுரைக்குள்ளேயே மஹால் இருக்கு, தெப்பக்குளம் இருக்கு, ஏகப்பட்ட கோயில்கள் இருக்கு, புதுசா வந்த ஷாப்பிங் மால் நாலஞ்சு இருக்கு. அதெல்லாம் விட்டுட்டு பழைய புத்தகக் கடையைப் பார்க்கலாம்னு கூட்டிட்டுப் போறாரே, இது சாமிக்கே அடுக்குமா?’ என்று என்னோடு வந்த மாணவர்களில் ஒருவர் புலம்பியது என் காதில் விழுந்தது.                கல்லூரி முடித்து மாணவர்களை அழைத்துக்கொண்டு மதுரையின் புகழ்பெற்ற தெற்கு சித்திரை வீதியில் பழைய புத்தகக் கடைகளை நோக்கி நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது நான் என்னோடு வந்த மாணவரின் கவலைக்குரல் அவ்வாறு ஒலித்தது. என்னிடத்தில் எம்.ஏ., தமிழ் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் அவர்கள். தொன்மையான மதுரையின் பெருமைகளில் இந்தப் பழைய புத்தகக்கடைகளும் ஒன்று.                பழைய புத்தகக் கடைகளுக்கே சில அமைப்புகள் உண்டு. பத்துக்குப் பத்து இடத்தில் ஒரு நபர் மட்டுமே உட்காரக்கூடிய ஒரு சிறிய அறை. பழைய புத்தகங்களைப் போலவே முதிர்ந்த ...