இடுகைகள்

அழ(கு)வள்ளியப்பா

படம்
                                                                        வட்டமான தட்டு                                தட்டு  நிறைய  லட்டு                                லட்டு  மொத்தம்  எட்டு…                இப்படிப்பட்ட பாட்டுக்கள்தான் குழந்தைகளின் உள்ளங்களில் எளிதில் பதியும். பொருளும் புரியும். குழந்தைகளுக்கான இலக்கியம் என்பது தமிழில்  ஆத்திசூடி,  கொன்றைவேந்தன்,  வெற்றிவேற்கை  எனத் தொடங்குகிறது. ...

இந்தோனேசியா சோழர் கோவில்…

படம்
            இந்தோனேசியாவில் முதல்நாள் கூட்டத்தை முடித்துக் கொண்டு நானும் என் துணைவியாரும் நாங்கள் தங்கியிருந்த 60மாடிகள் கொண்ட பிரம்மாண்டமான ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தபோது இரவு மணி 12. ஆனால், அந்நகரமோ நமது மதுரையைப் போலவே தூங்கா நகரமாகச் சுறுசுறுப்பாக அந்த நேரத்திலும் இயங்கிக் கொண்டிருந்தது.                ‘காலை 7மணிக்கு விமானம். நாம் 6 மணிக்கு அங்கே இருக்க வேண்டும். 5மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு விடலாம். நான்கு மணிக்கு எழுந்து தயாராகி விடுங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தமிழ்ச்சங்கத் தலைவர் விசாகன் சென்றபோது, நாங்கள் திகைத்துப் போனோம். நாங்கள் தங்கியிருந்த அறை 50வது மாடியில் இருந்தது. அங்கிருந்து அந்த நகரத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.                மிகப்பெரிய சாலைகளில் மல்லிகைப் பூ போன்றும், கனகாம்பரப் பூ போன்றும் கார்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தன. ஆமாம்! வந்துகொண்டிருக்கும் கார்களின் முன்வி...

ஹரித்துவாரில் ஞானசம்பந்தன்….

படம்
          நூற்றாண்டுகள் கண்ட பழமையும் பெருமையும் மிக்க தமிழ்ச் சங்கம்.  நான்காம்  தமிழ்ச்  சங்கம்  எனும் பெயரால் அழைக்கப்படும் மதுரைத் தமிழ்ச்சங்கம் (தற்போதுசெந்தமிழ்க்கல்லூரி).  பாலவநத்தம்  ஜமீன்தார்  பாண்டித்துரைத்    தேவர்  அ வர்களால் நிறுவப்பெற்ற புகழுடையது. காலஞ்சென்ற  என்  தந்தையார்  புலவர்  கு. குருநாதன் , 1933ஆம் ஆண்டு முதல் 1942ஆம் ஆண்டு வரை  பால  பண்டிதம்,  பண்டிதம்,  புலவர்  பட்டங்களை இத்தமிழ்ச் சங்கத்தில் பயின்றுதான் பெற்றுத் தேர்ந்தார்.                 திரு. நாராயண  அய்யங்கார்,  மு.  இராகவ  அய்யங்கார்,  இரா.  இராகவ  அய்யங்கார்  போன்ற தமிழ்ச் சான்றோர்களிடத்தில் பாடம் பயின்ற பெருமை தனக்கு உண்டு என அடிக்கடி கூறுவார் என் தந்தையார். தவிரவும், அக்காலத்தில் தேர்வில் வெற்றிபெறுவது மிகக் கடினம் என்பதைச் சொல்லி ஓர் உதாரணமும் எனக்குச் சொன்னார்.  ...

சந்தேகப் பேய்…

படம்
          ஒருமுறை நண்பர்களுடன் கொடைக்கானல் கிளம்பினோம். என்னைச் சேர்த்து ஐந்து பேர். இருக்கிற காசை வைத்துக்கொண்டு, சங்கடங்களைக் கூட, சந்தோஷமாக எடுத்துக்கொள்ளும் வயது அப்போது. நாங்கள் ஐந்து பேருமே, கொடைக்கானலை அப்போதுதான் பார்க்கிறோம்.                நாங்கள் பேருந்தில் இருந்து இறங்கியதும், அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் எங்கள் தோற்றத்தைப் பார்த்தவுடன், சடாரென்று கைடாக மாறி, எங்களுக்கு வழிகாட்ட, தங்க, உணவு ஏற்பாடு செய்யத் தயாராகி விட்டார். தங்குவதற்கு ஊருக்கு நடுவிலிருந்தால் அதிக வாடகை ஆகுமென்று மரங்களடர்ந்த தோப்புக்கு நடுவே, ஏற்பாடு செய்து கொடுத்தார்.                அது  ‘ நெஞ்சம்  மறப்பதில்லை’  வீடு போல் இருந்தது. மாடியறையில் தங்குதற்கு ஏற்பாடு செய்துவிட்டு, ஒரு திடுக்கிடும் செய்தியையும் சொன்னார். அந்த அறையில் ஒரு பெண் தூக்கு மாட்டிச் செத்ததாகவும், அந்த உடலைப் புதைக்காமல் எரித்துவிட்டதால் பேய் வருவதற்கான சாத்...

அரிமளத்தில் ஒரு அதிசயம்….

படம்
      பயணிப்பது என்பது எப்போதும் எனக்குப் பிடித்தமான ஒன்று. பயணப்படும்போது நாம் செல்லுகின்ற வாகனத்தின் வேகத்திற்கேற்ப நம்முடைய மனம் சிறகடித்துப் பறக்கும் என்பது உண்மை.  அப்படிப் பயணிக்கும்போது சிலர் நம்மைத் திகைக்க வைப்பார்கள், சிலர் நம்மை நகைக்க வைப்பார்கள். நகைத்தான சம்பவம் ஒன்று…       அப்போது பெருங்கூட்டத்தோடு வந்த பஸ் எங்கள் அருகிலே நிற்க, படியில் தொங்கிக்கொண்டு வந்த கண்டக்டர், ‘சில்லரை இல்லாதவங்க எல்லாரும் மரியாதையா இறங்குங்க…’ என்று கத்தினார். அவரோடு தொங்கிக்கொண்டு வந்த இன்னொருவர், ‘உன்கிட்ட இருக்கா?’ என்று கண்டக்டரைப் பார்த்துக் கேட்டார்.                ‘இல்லை’ என்று கண்டக்டர் எரிச்சலாகச் சொல்ல, ‘அப்ப நீயும் இறங்கு, பேசிக்கிட்டே போவோம்’ என்று சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். எங்கள் பயணமும் தொடங்கியது…        எந்த ஊருக்கு, எந்த நாட்டுக்கு நான் சென்றாலும் அந்த ஊரின், நாட்டின் பழைமை மிகுந்த கோயில்கள், நூலகங்கள், கோட்டைகள், அரண்மனைகள் போன்றவற்றைச் சுற்றிப...

நீ குளிச்சதே இல்லையா…..?

படம்
                பயணம் என்றாலே மகிழ்ச்சிதான். அதிலும் ஒத்த சிந்தனையும், ஒத்த வயதும் உள்ள நண்பர்களோடு பயணம் செய்யும்போது, அந்தப் பயணத்துக்கு ஈடில்லை. இணையில்லை. கேலி, கிண்டல் எத்தனை அலுப்பிலும் வெளிப்படும் நகைச்சுவை, பூலோக சொர்க்கமாக அமையும் நேரம்.                இப்படிப்பட்ட பயணத்தைக்கூட, குழப்பி விடுகிற நபர்களும் (?) சில சமயம் கூட வருவார்கள். ஒருமுறை நாங்கள் குற்றாலத்துக்கு வழக்கமான நண்பர்களோடு சென்றோம். அப்போது ஆறாவது விரல்போல், அதிகப்படியாய் ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் என் நண்பனுக்கு… நண்பனுக்கு… நண்பனுக்கு… நண்பனாம். அந்த நபர் எங்களைப் படுத்தியபாடு…. குற்றாலக் குரங்குகள் கூட அப்படி படுத்தி இருக்காது.                குற்றாலத்தில் இறங்கித், தங்கும் விடுதியில் பொருட்களை வைத்துவிட்டுப் பேரருவிக்கு (தமிழில் ‘மெயின் பால்ஸ்’) குளிக்கச் சென்றோம். பிறகு, அங்கிருந்து ஐந்தருவிக்கு நடந்தே செல்வது என்று திட்டமிட்டோம்....

கும்பிடப்போன தெய்வம்…

படம்
            சிறுவயதில் பள்ளிக்கூடம் படிக்கும் காலத்திலிருந்தே இரயிலில் பஸ்ஸில், சைக்கிளில், நடந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டே பிரயாணம் செய்வதில் எனக்கு எப்போதும் விருப்பம் அதிகம்.                புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய உணவு வகை இவற்றால் வரும் புதிய அனுபவங்கள் இவைதான் வாழ்க்கையை எப்போதும் புதுமையாக்குகின்றன என நினைப்பவன் நான்.                எனது பல்வகை உயர்வுகளுக்கு வழிகாட்டிய பேராசிரியர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்  டாக்டர்  நா. ஜெயராமன்  அவர்கள் ஆவார்.                மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் என்னுடைய எம்ஃபில் பட்டத்திற்கும், பி.எச்.டி பட்டத்திற்கும் வாய்ப்புக் கொடுத்து வழிகாட்டியவர் அவர்தான். நான் மேடைப் பேச்சாளராக இன்று விளங்கக் காரணமானவரும் அவர்தான். சிறந்த நகைச்சுவையாளர், அரிய மனிதர்.     ...