ஆண்டவன்கட்டளையும்… அடிமைப்பெண்ணும்…கே.சங்கர்
தமிழ்த்திரையுலகின் வரலாற்றின் தொடக்கத்தில் இயக்குநர்கள்தான் முடிசூடா மன்னர்களைப்போல திரைப்பட உலகில் ஆளுமை செலுத்தி வந்தார்கள். ராஜா சாண்டோ, சுந்தர்ராவ் நட்கர்ணி, தாதா மிராசி, எஸ்.எஸ்.வாசன் இவர்கள் காலத்தை அடுத்து வந்த ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், தற்போதுள்ள சங்கர் எனவும் இவர்களைத் தொடர்ந்து இளையதலைமுறையைச் சார்ந்த வினோத், லோகே ஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்றவருடைய தனித்தன்மைகளையும் சொல்லிக்கொண்டே செல்லலாம். இத்தகைய இயக்குநர்கள் வரிசையில் தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்த புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் , என நான்கு தலைமுறைநடிகர்களையும் என். டி. ராமாராவ், எம். ஜி. ஆர், செல்வி. ஜெயலலிதா என மூன்று முதல்வர்களையும் இயக்கிய பெருமைக்குரியவர் ஒருவர் உண்டென்றால் அவர்தான் டைரக்டர் கே. சங்கர்....