அடாது மழை பெய்தாலும்…. விடாது பட்டிமன்றம்…
பட்டிமன்ற நடுவராக நான் பேசத் தொடங்கிய காலங்களில் எனது குழுவினரோடு நான் சென்று, பற்பல அனுபவங்களைப் பயணங்களில், மேடைகளில் மாறுபட்ட சூழ்நிலைகளுக்கேற்ப அனுபவித்ததுண்டு. ஒருமுறை இராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் சேர்ந்து, தங்கள் சங்கத்தின் சார்பாக ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்திருந்தார்கள். இராமநாதபுரத்தில் அரண்மனைக்கு எதிர்ப்புறத்தில் நான்கு வீதிகள் சந்திக்கிறபொதுஇடத்தில்மேடையமைத்திருந்தார்கள். “ சமுதாயநலக் கருத்துக்களைப் பெரிதும் வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமா? கவியரசு கண்ணதாசனா?” என்பது தலைப்பு. இரவு ஒன்பது மணிக்குப் பட்டிமன்றம் தொடங்கியது. லேசான வாடைக்காற்றும், மிதமான மழையும் தொடங்கிற்று. கூடியிருந்த கூட்டம் சற்றும் அயராமல், எங்களுடைய பேச்சுக்கு வரவேற்பையும், ஆர்வத்தையுமும் காட்டி சிரித்து, மகிழ்ந்து கைதட்டியபடி இருந்தனர். ...