இடுகைகள்

காலத்தை வென்ற வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ்.

படம்
       இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் பெயர் பெற்றது பாண்டியர்கள் அரசாண்ட தென்பாண்டி மண்டலத்தின் தலைநகராகிய மதுரை.     இம்மதுரையில் இசையை வளர்த்தெடுக்கவே இசைக்கு இடையூறு ஏற்பட்டபோது அதனை மாற்றிக்காட்டவே எம்பெருமானாகிய சொக்கநாதப்பெருமான் பலமுறை மதுரைக்கு வந்து மதுரையில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். தங்கள் குரலால் பெருமைபெற்ற  மதுரை மணி ஐயர், மதுரை சண்முக வடிவு சுப்புலெட்சுமி (எம்.எஸ்.சுப்புலெட்சுமி) மதுரை சோமு  போன்றோர் தங்களுடைய இன்குரலால் தமிழுக்கும் தமிழிசைக்கும் பெருமை சேர்த்தனர்.       என்.பி.என்.சேதுராமன் பொன்னுச்சாமி சகோதரர்கள்  தங்கள் விரலால் நாதஸ்வரத்தால் இசைக்கு மெருகூட்டினர்.  சங்கரதாஸ் சுவாமிகள்  போன்றவர்கள் நாடகக் கலைக்கு உயிரூட்டினர். இன்றைக்கும் மதுரையிலே சங்கரதாஸ் சுவாமி சிலையாக அமர்ந்து அரு௵ட்டுகின்றார். இத்தகைய பெருமைமிகுந்த மதுரை மாநகரின் பெருமைக்குத் தன் குரலால் பெருமை சேர்த்த கலைஞர்தான்  டி.எம்.சௌந்தரராஜன்  அவர்கள்.        அவரது...

நீரே…. தெய்வம்….!

படம்
நீர்இன்று  அமையாது  உலகெனின்  யார்யார்க்கும்                              வான்இன்று  அமையாது  ஒழுக்கு.” என்பது வள்ளுவர் வாக்கு. இந்த உலகம் நீரால் சூழப்பட்டது. முந்நீராகிய உப்புக் கடல்நீரும், நன்னீராகிய குடிநீராரும்தான் இந்த உலகத்து உயிர்களை வாழ வைக்கின்றன. கடல்நீர் முக்கால் பகுதி பூமியிலிருந்தாலும், குடிநீராகிய நன்னீர் இருந்தால்தான் மனிதர்களும், மற்ற உயிர்களும் தாவரங்களும் வாழமுடியும். நன்னீரின் பெருமையைப் பற்றிக் கூறும்போது,                 மடல்பெரிது  தாழை  மகிழினிது  கந்தம்;                 உடல்சிறிய  ரென்றிருக்க  வேண்டா –  கடல்பெரிது                 மண்ணீரு  மாகா  ததனருகே  சிற்றூறல்       ...

காடு… கடவுளின் வீடு…

படம்
                “ மணிநீரும்  மண்ணும்  மலையும்  அணிநிழற்                 காடும்  உடைய  தரண்.”                பூமியில் மனிதஇனம் தோன்றுவதற்கு முன்பு தோன்றியவை மரங்கள் சூழ்ந்த வனம். மரங்களைத் தொடர்ந்தே உலக உயிரினங்களும் பின்னர் மனித உயிர்களும் தோன்றியிருக்கலாம் என்பது அறிவியல் கூறும் செய்தி. உலகெங்கும் காடுகள் இருந்தன என்பதற்குச் சான்றாதாரங்கள் அந்தந்த நாட்டில் தோன்றிய இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் போன்றவையே.  இந்திய பரத கண்டத்தில் தோன்றிய ஆதி காவியமான  வால்மீகியால்  எழுதப்பட்ட  இராமாயணத்தில்  இராமன் 14வருடங்கள் காட்டுக்குச் செல்ல வேண்டுமென்று கைகேயி வரம் கேட்பதாகக் காட்டப்படுகிறது. இதை அடுத்துத் தோன்றிய மகாபாரதத்திலும் பாண்டவர்களும் பாஞ்சாலியும் 12ஆண்டுகள் காட்டில் வசிக்கவேண்டுமென்று துரியோதனன் கட்டளையிட்டதாக அக்காப்பியம் எடுத்துக்கூறுகிறது.    ...

ஏ! குருவி! சிட்டுக்குருவி!

படம்
                 "விட்டு  விடுதலை  யாகிநிற்  பாயிந்தச்                 சிட்டுக்  குருவியைப்  போலே…” என மகாகவிபாரதியும்,                 “ சிட்டுக்குருவி  சிட்டுக்குருவி  சேதி  தெரியுமா?                 என்னை  விட்டுப்பிரிஞ்சு  போன  கணவன்  வீடுதிரும்பல…” என்று  ‘ டவுன்பஸ்’  படத்தில் கவிஞர் க.மு.ெஷரிப்பும்,                                “ ஏ!  குருவி!  சிட்டுக்குருவி….  என்று  ‘ முதல்  மரியாதை’  படத்தில்  கவிஞர்    வைரமுத்துவும்,  சிட்டுக்குருவியை பரவசத்தோடு பாடி மகிழ்ந்திருப்பார்கள்.        ...

அடாது மழை பெய்தாலும்…. விடாது பட்டிமன்றம்…

படம்
              பட்டிமன்ற நடுவராக நான் பேசத் தொடங்கிய காலங்களில் எனது குழுவினரோடு நான் சென்று, பற்பல அனுபவங்களைப் பயணங்களில், மேடைகளில் மாறுபட்ட சூழ்நிலைகளுக்கேற்ப அனுபவித்ததுண்டு. ஒருமுறை இராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் சேர்ந்து, தங்கள் சங்கத்தின் சார்பாக ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.                இராமநாதபுரத்தில் அரண்மனைக்கு எதிர்ப்புறத்தில் நான்கு வீதிகள் சந்திக்கிறபொதுஇடத்தில்மேடையமைத்திருந்தார்கள்.  “ சமுதாயநலக்  கருத்துக்களைப்  பெரிதும்  வலியுறுத்திப்  பாடியவர்  பட்டுக்கோட்டை  கல்யாண  சுந்தரமா?  கவியரசு    கண்ணதாசனா?”  என்பது தலைப்பு. இரவு ஒன்பது மணிக்குப் பட்டிமன்றம் தொடங்கியது. லேசான வாடைக்காற்றும், மிதமான மழையும் தொடங்கிற்று. கூடியிருந்த கூட்டம் சற்றும் அயராமல், எங்களுடைய பேச்சுக்கு வரவேற்பையும், ஆர்வத்தையுமும் காட்டி சிரித்து, மகிழ்ந்து கைதட்டியபடி இருந்தனர்.    ...

வா! வா! முருகா! வடிவேல் அழகா!

படம்
         தமிழர்கள் வாழ்வில் தேரும் திருவிழாவும் பிரிக்கமுடியாத ஒன்று. அதிலும் குறிப்பாகச், சித்திரை தொடங்கி பங்குனி வரையிலும் உள்ள நிலாக் காலம் முழுவதும் விழாக்காலங்கள்தான்.           பங்குனி உத்திரத் திருநாளில் முருகப்பெருமானைக் காண்பதற்கு ஆறுபடை வீடுகளையும் நோக்கி, பக்தர்கள் படையெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தப் பங்குனி உத்திரத் திருநாளில்தான் முருகப்பெருமான்; சூரபத்மனையும் அவன் தம்பியரையும் வதம் செய்து அந்த வெற்றியின் பரிசாகத் தெய்வானையை மணக்கின்றார். இத்திருநாளை நாம் பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகின்றோம் என்று நான் எழுதிக்கொண்டிருக்கும்போது நண்பர் பரமசாமி என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்தார்.                ‘வாங்க! வாங்க! பங்குனி உத்திரத்தன்று பரமசாமியைப் பார்ப்பதில் பரமதிருப்தி’ என்றேன் நான் மகிழ்ச்சியோடு. அவரும் மிக மகிழ்ந்து எல்லா நல்ல நாட்களுக்கும் வாழ்த்துச் சொல்லுவதுபோல, ‘உங்களுக்குப் பங்குனி உத்திரத் திருநாள் வாழ்த்துகள்’ என்று ஆனந்தம் பொ...

ஆண்டவன்கட்டளையும்… அடிமைப்பெண்ணும்…கே.சங்கர்

படம்
தமிழ்த்திரையுலகின் வரலாற்றின் தொடக்கத்தில் இயக்குநர்கள்தான் முடிசூடா மன்னர்களைப்போல திரைப்பட உலகில் ஆளுமை செலுத்தி வந்தார்கள்.  ராஜா சாண்டோ, சுந்தர்ராவ் நட்கர்ணி, தாதா மிராசி, எஸ்.எஸ்.வாசன்  இவர்கள் காலத்தை அடுத்து வந்த  ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம்,  தற்போதுள்ள  சங்கர்  எனவும் இவர்களைத் தொடர்ந்து இளையதலைமுறையைச் சார்ந்த  வினோத், லோகே ஷ்  கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ்  போன்றவருடைய தனித்தன்மைகளையும் சொல்லிக்கொண்டே செல்லலாம். இத்தகைய இயக்குநர்கள் வரிசையில் தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்த  புரட்சித்தலைவர்  எம். ஜி. ஆர்,  நடிகர்  திலகம்  சிவாஜி கணேசன்,  காதல்  மன்னன்  ஜெமினி  கணேசன்,  ஜெய்சங்கர்,  முத்துராமன் , என நான்கு தலைமுறைநடிகர்களையும்  என். டி. ராமாராவ்,  எம். ஜி. ஆர்,  செல்வி. ஜெயலலிதா  என    மூன்று  முதல்வர்களையும்  இயக்கிய பெருமைக்குரியவர் ஒருவர் உண்டென்றால் அவர்தான்  டைரக்டர்  கே. சங்கர்....