எந்தக் கூட்டணியும் வேண்டாம்…!
‘ பாலைக் கொடுத்துத் திருஞானசம்பந்தரையும் சூலைக் கொடுத்துத் திருநாவுக்கரசரையும் ஓலை கொடுத்துச் சுந்தரமூர்த்தி நாயனாரையும் சிவபெருமான் ஆட்கொண்டார்’ எனத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பல்லாண்டுகளுக்கு முன் மதுரை ஆடி வீதியில் பேசியதை, சிறுபையனாக இருந்து கேட்டு ரசித்திருக்கிறேன். என் தந்தையார் இதற்கு அருமையாக விளக்கமும் சொன்னார். ‘திருஞானசம்பந்தப் பெருமானுக்கு இறைவன் இறைவிமூல...