இடுகைகள்

பூக்குட்டிகளும்…புத்தகங்களும்…

படம்
            புத்தகங்களும்…  குழந்தைகளும்…  என்றே கவிதை எழுதலாம். புத்தகங்களைப் படித்தால் நம் அறிவு வளர்கிறது. நம் கேள்விகளுக்கு விடையளிக்கிறது புத்தகம். குழந்தைகள் கேள்விகளாலேயே வளர்கின்றன. புத்தகத்தைப் பிரிக்கும்போது மகிழ்ச்சி. குழந்தையைப் பார்த்தாலும் பேசினாலும் தூக்கினாலும் மகிழ்ச்சி. இத்தகைய குழந்தைகள் நம்மிடமிருந்து செய்திகளைத் தெரிந்துகொள்வதைப்போல சிறுவயதிலேயே புத்தகங்களோடு பழகுவார்களேயானால் அவர்கள் வாழ்க்கை ஒளிமயமாகும். புத்தகத்தையும் குழந்தையையும் விரும்பாத மனிதர் யார்?            இரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு… அவர் செல்வம்மிகுந்த பிரபு குடும்பத்தைச் சார்ந்தவர்;. சிறுவயதாக இருந்தபோது அவருடைய பிறந்தநாள் வந்தது. அந்தப் பிறந்தநாளில் தாகூரின் சகோதரர் தன் தம்பிக்குப் பரிசளிக்க விரும்பி நள்ளிரவில் அவருடைய அறையைச் சத்தமின்றி திறந்து அவருடைய படுக்கையில் அந்தப் பரிசை வைக்கப்போனவர் வியந்துபோனார்.           காரணம், அந்தப் பட்டுமெத்தையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த...

புதியன கற்போம்… புதுமைகள் செய்வோம்…!

படம்
               உலக வரலாற்றில் புதிய சிந்தனைகளையோ, அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளையோ உருவாக்கிய மேதைகளை இந்த உலகம் அவ்வளவாகப் பாராட்டியதில்லை. மாறாக அத்தகைய சிந்தனையாளர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறது.                ‘உன்னையே நீ அறிவாய்… அறிவுதான் நான் தரும் ஆயுதம்…. சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள்…. எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்விகளைக் கேளுங்கள்!’ என்று சொன்ன  கிரேக்கஞானி  சாக்ரடீஸ் , அன்றைய அரசாங்கத்தால் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். ‘உலகம் உருண்டையானது. சூரியன் நிலையானது. பூமிதான் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது’ என்ற அறிவியல் உண்மையை, தான் வாழ்ந்த 14ஆம் நூற்றாண்டில், தான் கண்டுபிடித்த சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் நிரூபித்துக்காட்டிய  கலிலியோ  பல துன்பங்களைச் சந்தித்து, அப்போதைய போப்பாண்டவர் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கும் நிலைக்கு ஆளானார்.             ‘உலக உயிர்...

இப்போது இது அவசியம்…. அவசரம்….

படம்
               பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, பள்ளிகள் கல்லூரிகள் தொடங்கி மாணவ மாணவியரும் பள்ளி, கல்லூரி செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். மீண்டும் கல்விக்கான எந்திரம் சுழலத் தொடங்கிவிட்டது என்பதில் நமக்கு மகிழ்ச்சியே.              ஆனால் சமீப காலங்களில் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆசிரியர்கள் குறிப்பாகப் பெண் ஆசிரியைகள் மாணவர்களால் தாக்கப்படுகிறார்கள் என்பதும் மாணவ மாணவியர்களுள் சிலர் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கின்ற செய்திகளும் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன.                மாதா பிதா குரு தெய்வம் எனச் சொல்லும்போது, ஆசிரியர் தந்தைக்கு அடுத்தபடியாகவும் தெய்வத்திற்கு இணையாகவும் போற்றப்படக்கூடிய பெருமையை உடையவர் என்பது நம்முடைய மரபு. கல்வியின் பெருமையை ஆசிரியர் இல்லாமல் நாம் அறிந்துகொள்ள முடியாது.             ...

பேசுவதற்குத் தூண்டுங்கள்…

படம்
                          சிலவீடுகளில் வினோதமாக இருக்கும். ஒரே வீட்டில் இருப்பார்கள், பக்கத்திலேயே இருந்தும் சரிவரப் பேசிக்கொள்ளாமல், மௌனமாகவே இருப்பார்கள். இது ஒருவகை என்றால் – பேச்சினிடையே திடீரென்று அமைதியாகி விடுவது இன்னும் ஆபத்து.                ஒருவிழா மேடையில், வி.ஐ.பி.க்களைச் சுட்டிக் காட்டியபடி, ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். ‘இவர்கள் அனைவரும் பொறுக்கி…’ என்று சொல்லிவிட்டு, சோடா குடிக்க ஆரம்பித்து விட்டார். மேடையில் இருந்தவர்கள் வெலவெலத்துப் போயினர். சோடாவைக் குடித்துவிட்டு ‘எடுத்த முத்துக்கள்’ என்று பேச்சைத் தொடர்ந்தார்.                நம் வீட்டிற்குப் புதிதாக உறவினர்களோ, நண்பர்களோ வரும்போது, குழந்தைகள் ஆர்வமாகக் கவனிப்பார்கள். ‘யார் இவரு?’ என்று கேட்கும் குழந்தைகளை அலட்சியமாக விரட்டுவார்கள். அப்படியில்லாமல் வந்திருக்கிறவரை, உறவுமுறை சொல்லி, குழந்தைகளிடம் அறிமுகப்ப...

தமிழ் கற்போம்…தரணியை வெல்ல….!

படம்
கண்ணுதற்  பெருங்கடவுள்  கழகமோடமர்ந்து                 பண்ணுறத்  தெளிந்து  ஆய்ந்த  இப்பசுந்  தமிழ்’                                                                                                           – திருவிளையாடல்   புராணம்                உலகில் தோன்றிய பழைய மொழிகளுள் செம்மொழி...

இந்தோனேசியா தமிழ்ச்சங்கத்தில் கமல்ஹாசன்…!

படம்
       இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள தமிழ்ச்சங்க இரண்டாம் ஆண்டு விழாவிற்கு நீங்கள் வந்திருந்து சிறப்புரை ஆற்ற வேண்டும்’ என்ற அழைப்பு வந்தபோது, நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நாம் சிறு வயதில் படித்த  ‘ கடல்  புறா’ ‘ பொன்னியின்  செல்வன்’  போன்ற நாவல்களிலும்,  சிலப்பதிகாரம்,  மணிமேகலை  போன்ற காப்பியங்களிலும் சொல்லப்பட்ட அற்;புதமான தீவுக் கூட்டங்களைக் காணப்போகிறோம் என்று!     அந்தமான்,  நிகோபார்,  ஜாவா,  சுமத்திரா  என்னும் தீவுக் கூட்டங்கள்  முந்நீர்ப்பழந்தீவுகள்  என இலக்கியங்களில் கூறப்படும் தீவுக் கூட்டங்களில் ஒன்றான  ‘ ஜாவா’  எனும் பெரும் தீவே தற்போது இந்தோனேசியா என்ற பெயரிலும், அதன் தலைநகர்  ஜகார்த்தா  என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது.                 ‘ சாவகம்’  என்னும் தீவு,  மணிமேகலை  எனும்  காப்பியத்தில்    குறிப்பிடப்படுகிறது. இத்...

எந்தக் கூட்டணியும் வேண்டாம்…!

படம்
                ‘ பாலைக்  கொடுத்துத்  திருஞானசம்பந்தரையும்                 சூலைக்  கொடுத்துத்  திருநாவுக்கரசரையும்                 ஓலை  கொடுத்துச்  சுந்தரமூர்த்தி  நாயனாரையும்                 சிவபெருமான்  ஆட்கொண்டார்’                எனத்  திருமுருக  கிருபானந்த  வாரியார்  சுவாமிகள்  பல்லாண்டுகளுக்கு முன் மதுரை ஆடி வீதியில் பேசியதை, சிறுபையனாக இருந்து கேட்டு ரசித்திருக்கிறேன். என் தந்தையார் இதற்கு அருமையாக விளக்கமும் சொன்னார்.                ‘திருஞானசம்பந்தப்  பெருமானுக்கு இறைவன் இறைவிமூல...