பருவகாலக் கல்வி…
ஜுன், ஜுலை தொடங்கிவிட்டாலே நம் பள்ளிகளில் பரபரப்பு தொடங்கிவிடுகிறது. காரணம் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற இடங்களில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய காலங்கள் இந்தக் காலங்கள்தான். ‘ ஆடிப்பட்டம் தேடிவிதை’ ‘ பருவத்தே பயிர்செய்’ என்ற பழமொழிகள் விவசாயம் செய்கிய விவசாயிகளுக்கு எவ்வளவு பொருத்தமோ அவ்வளவு பொருத்தம், சரியான நேரத்தில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களுக்கும் உண்டு. சரியான பருவத்தைத் தவறவிட்ட விவசாயியை ஊரே சேர்ந்து கண்டிப்பதும் உண்டு. ‘ உழுகிற காலத்தில் ஊர் சுத்தப் போயிட்டு அறுக்கிற காலத்தில் அருவாளோடு வந்தா எப்படி விளங்கும்’ என்று கிராமத்துப் பெரியவர்கள் சொலவடை சொல்லிக் காட்டுவார்கள். சரியான பள்ளிக்கூடத்தை, கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, அதிலும் சரியான ...