இடுகைகள்

ஞானம் வந்திருச்சு…

படம்
      இப்போதைய அன்றாட வாழ்வில் எவ்வளவோ நெருக்கடிகள். அவசரங்கள். இதனால் மனஇறுக்கம் கூடி விடுகிறபோது இதிலிருந்த நம்மை விடுபட வைப்பது நகைச்சுவை உணர்வே.      அதுதான் நம் மனசை லேசாக்குகிறது. நம் பிரச்சனைகளை இறகுபோல உணரவைக்கிறது. எல்லோருக்குமே இயல்பாக நகைச்சுவை உணர்வு இருக்கி;றது. இல்லை என்றால் ரசிக்க முடியாது.    நகைச்சுவைக்கென்று சூழலும் மனநிலையும் முக்கியம். சில திரைப்படங்களில் ஒரு நகைச்சுவை நடிகர் தோன்றியதுமே சிரித்து விடுவார்கள். பழைய படமாகிய  ‘ புதுமைப்பித்தன்’  னில் ஒரு காட்சி. படம் ஆரம்பித்ததும் கப்பலைக் காட்டுவார்கள். கொடியை அதில் ஏற்றும்போது, தலைகீழாக மேலே போவார் சந்திரபாபு. அந்தக் காட்சியே சிரிப்பதற்கானச் சூழலை உருவாக்கிவிடும்.      திருச்சி பேராசிரியராகிய ராதாகிருஷ்ணன் அவர்கள் தலையில் கட்டுக்குடுமி வைத்திருப்பார். மேடையில் தன்னைத்தானே அறிமுகப்படுத்தும்போதே; இப்படி ஆரம்பிப்பார். ‘தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு தடவை போய் இறங்கினதுமே ஒருத்தன் வந்து என்னைக் கும்பிட்டான். ‘என்னை நீ பார்த்திருக்கிறாயா?’...

கலைமகளுக்கே ஆசிரியர்… கி.வா.ஜ.,…

படம்
    தமிழில் சிலேடை என்பது ‘ இரட்டுற மொழிதல் ’ என்ற பொருளில் வரும் . அக்காலத்தில் சிலேடையாகப் பாடுவதில் காளமேகப்புலவர் வல்லவர் . பேச்சில் சிலேடை தொனிக்கப் பேசுபவர்கள் தம் பேச்சால் அனைவரையும் ஈர்ப்பர் . அத்தகைய வல்லமை பெற்றவர்களில் ஒருவர்தான் கி . வா . ஜகந்நாதன் அவர்கள் . இவர் மிகச்சிறந்த எழுத்தாளர் , பேச்சாளர் என்பதோடு பத்திரிக்கை ஆசிரியராகவும் இருந்தார் .   ஒருமுறை இவருடைய நண்பர் இவரைப் பாராட்டிப் பேசும்போது ‘ உங்களுக்குக் கிடைத்த புகழ் யாருக்குக் கிடைக்கும் ’ என்றாராம் . அதைக் கேட்டு கி . வா . ஜ . வியப்போடு , ‘ என்ன புகழ் ?’ என்று கேட்க , ‘ நீங்கள் கலைமகளுக்கே ஆசிரியராயிற்றே ’ என்று புன்னகையோடு சொன்னாராம் . கேட்ட கி . வா . ஜ . வின் முகத்திலும் புன்னகை .   இவரின் சிலேடைகள் இடத்திற்கும் நேரத்திற்கும் ஏற்றபடி அமையும் . ஒருமுறை இவர் ஒரு ஊருக்குப் பேசுவதற்காக இரயிலில் சென்றாராம் . காலைநேரத்தில் இரயில் அந்த ஊரில் போய் நிற்க , இவரை வரவேற்க வந்தவர்கள் , பெரிய மாலையைக் கொண்டுவந்து இவர் கழுத்த...

பருவகாலக் கல்வி…

படம்
    ஜுன், ஜுலை தொடங்கிவிட்டாலே நம் பள்ளிகளில் பரபரப்பு தொடங்கிவிடுகிறது. காரணம் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற இடங்களில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய காலங்கள் இந்தக் காலங்கள்தான்.                 ‘ ஆடிப்பட்டம்  தேடிவிதை’ ‘ பருவத்தே  பயிர்செய்’  என்ற பழமொழிகள் விவசாயம் செய்கிய விவசாயிகளுக்கு எவ்வளவு பொருத்தமோ அவ்வளவு பொருத்தம், சரியான நேரத்தில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களுக்கும் உண்டு. சரியான பருவத்தைத் தவறவிட்ட விவசாயியை ஊரே சேர்ந்து கண்டிப்பதும் உண்டு.                 ‘ உழுகிற  காலத்தில்  ஊர்  சுத்தப்  போயிட்டு  அறுக்கிற  காலத்தில்  அருவாளோடு  வந்தா  எப்படி  விளங்கும்’  என்று கிராமத்துப் பெரியவர்கள் சொலவடை சொல்லிக் காட்டுவார்கள். சரியான பள்ளிக்கூடத்தை, கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, அதிலும் சரியான ...

விளக்குகளை ஏற்றும் விளக்கு… ராகுல சாங்கிருத்தியாயன்

படம்
          நான் மேடையில் பேசுகிறபோதெல்லாம் எனக்குப் பிடித்த புத்தகம், என்னைத் தொடர்ந்து பயணிக்கத் தூண்டிய புத்தகம் என்று ஒன்று இருக்குமானால் அது  ‘வால்கா முதல் கங்கை வரை’  என்ற புத்தகம்தான் எனக் கூறுவேன். இந்தப் புத்தகத்தை நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் படிக்கத் தொடங்கி இன்றுவரை படித்து வருகிறேன். இதனுடைய ஆசிரியர்  கேதார்நாத் பாண்டே  என்ற இயற்பெயர் கொண்ட  ராகுல சாங்கிருத்தியாயன் .           இவருடைய வாழ்கை வரலாற்று நூலும் இவரின் பயண நூல்களும் என்னை அக்காலத்திலேயே வியக்க வைத்தன. தமிழ்மொழி உள்பட 33மொழிகள் தெரிந்த பன்மொழிக் கலைஞர் இவர். இவருடைய பயணங்கள் மூலமாக இந்திய நாட்டின் இயற்கை வளத்தை மட்டுமல்லாமல் இந்தியப் பண்பாட்டையும் அறிந்துகொள்ளலாம்.           மனிதகுல வரலாற்றைப் பற்றி  ஜார்ஜ் தாம்சன்  என்பவர் எழுதிய நூலையும் நான் படித்திருக்கிறேன். ஆயினும்  ‘வால்கா முதல் கங்கை வரை’  நூலில் மனிதகுல வரலாறு தொடங்கி இந்தியாவில் காந்தியடிகளுக்கும் அம்பேத்காருக்கும் நடந்த...

முத்திரைக் கதைகளில் முத்திரை பதித்தவர்….

படம்
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர் உலகில் தனக்கெனத் தனியே ஒரு சிம்மாசனத்தை உருவாக்கிக்கொண்ட பெருமை  எழுத்தாளர் ஜெயகாந்தன்  அவர்களுக்கே உண்டு. நான் பள்ளியில் படிக்கிற காலங்களில் ஆனந்தவிகடனில் இவருடைய கதைகள் தொடர்ச்சியாக முத்திரைக் கதைகளாகப் பரிசு பெற்று வந்ததை நான் அறிவேன். என் தந்தையார் என்னைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். பாரதம், இராமாயணம் இவற்றோடு நவீன கால இலக்கியம் என்று வரும்போது  கல்கி, ஜெயகாந்தன்  போன்றோருடைய படைப்புகளையும் படிக்கச் சொல்லுவார். குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் ஜெயகாந்தனுடைய  ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’  நாவலை நான் படிக்கும்போதும், அதில் வருகிற  ஓவியர் கோபுலு  அவர்களின் ஓவியங்களைப் பார்க்கிறபோதும் பெருமகிழ்வு அடைவேன் (2003க்குப் பிறகு கலைஞானி கமல்ஹாசன் அவர்களுடைய நட்பு எனக்குக் கிடைத்தது. அவரிடத்தில் ஒருநாள் இந்த நாவலை ஏன் படமாக்காமல் போனீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரும் ‘அதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டேன். ஹென்றி பாத்திரத்தில் நடிப்பதற்காகத் தயாராகக்கூட இருந்தேன். அதற்கேற்ற சூழ்நிலை அமையவில்லை’ என்றார் ...

விடுமுறையும்…. சுற்றுலாவும்….

படம்
                    கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிக்கூட, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குக் கொண்டாட்டமான காலம் இது. சுற்றுலா போகலாம். முழுப்பரீட்சை லீவை முழுவதும் அனுபவிக்க, பாட்டி, தாத்தா வீட்டுக்கு அல்லது அத்தை – மாமா வீட்டுக்குச் சென்று வரலாம். சைக்கிள் பழகலாம், நீச்சல் பழகலாம்… இவையெல்லாம் அந்தக் கால மாணவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் இன்றைக்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி, படிக்கிற குழந்தைகளுக்குக் கூட இது பொருந்தாது. ஏனென்றால் இப்போதிருக்கிற பெற்றோர்களும், ஆசிரியர்களும்…. ஏன் குழந்தைகளும் கூட விடுமுறையின் இனிமை பற்றிச் சிந்திக்கிறார்களா? தெரியவில்லை!                நகரத்தில் விடுமுறையில் பிள்ளைகளை எங்கே விடுவது எனத் தெரியாமல்  ‘ பத்து  நாட்களில்  அறிவாளியாகலாம்’ ‘ இருபது  நாளில்  எல்லோரையும்  வெல்லலாம்’  என்று விளம்பரப்படுத்துகின்ற தனியார் அமைப்புகளில் பிள்ளைகளைத் திணித்து, அவர்கள் அறிவாளிகளாகப் போகும் நாட்களை எண...