இடுகைகள்

சக்தி தருவாய் சக்தி…

படம்
               இந்த உலகத்தில் நம்மை அறிமுகப்படுத்துவதும், உலகத்தாரை நமக்கு அறிமுகப்படுத்துவதும் தாய்தானே! அவளின்றி ஓர் அணுவும் அசையாது. தாயின்றி உலகம் தனித்து இயங்காது. தாய்ப்பாசம் என்பது உலகில் பிறந்த அத்தனை உயிரினங்களுக்கும் உண்டு. இதில் உயர்திணை, அஃறிணை பேதமில்லை. நிலத்தில், நீரில், ஆகாயத்தில் என எங்கு வசிக்கும் உயிரினங்களுக்கும் உற்ற துணை தாய்தான்.                உலகைத் துறந்த சந்நியாசிகள்கூட தாய்ப்பாசத்தை மறக்கவில்லை.  ஆதிசங்கரர் , ‘ காலடி’  எனும் இடத்தில் தான் துறவு மேற்கொள்வதற்காகத் தாயிடம் அதற்கு ஒப்புதல் பெறும்பொருட்டு, ஒரு முதலைத் தன் காலைப் பிடித்துக்கொள்வது போலவும் சந்நியாசத்தை மேற்கொண்டால்தான் பிடித்த காலை விடமுடியும் என்று அந்த முதலை சொல்வதாகக் கூறித், தாயின் ஒப்புதலைப் பெறுகிறார். அப்போதும்கூட ‘உன் கடைசிக் காலத்தில் உன்னைக் காண வருவேன்’ என்று வாக்குறுதியும் தந்து அதை நிறைவேற்றவும் செய்கிறார்.      ...

தமிழுக்கோர் பல்கலைக்கழகம்… உமாமகேசுவரனார்….

படம்
2006ஆம்ஆண்டு நான் மூன்றாவது முறையாக அமெரிக்கா சென்றபோது வழக்கப்படி தமிழ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) காலை மாலை சில நேரங்களில் இரவு என இரண்டு மூன்று நிகழ்;ச்சிகளில் பங்கேற்பேன். அத்தோடு வெள்ளிக்கிழமை நியூஜெர்ஸி என்றால் சனிக்கிழமை வாஷிங்டன். ஞாயிற்றுக்கிழமை ஃபுளோரிடா என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு நண்பர்கள் வீட்டிலும் தங்கியிருப்பேன்.                அப்படி நான் தங்கியிருக்கும்போது ஒருநாள் என்னை அழைத்து வந்தவர்கள் காலை உணவை எனக்குத் தந்துகொண்டே பேசத் தொடங்கினர். நான் என் பேச்சின் நடுவே கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைப் பற்றி தற்செயலாகக் குறிப்பிட, அவர்கள் மிக மகிழ்ச்சியாகத் ‘திரு. உமாமகேசுவரனார் அவர்கள் எங்களுடைய தாத்தாதான்’ என்று சொன்னவுடன் நான் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் செலுத்தினேன். அவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.                அப்போது நான் சொன்ன வார்த்தைகள் இவைதான், ‘தஞ்சைத் ...

கவிதை முதல் கவிதை வரை…!

படம்
தமிழ் இலக்கிய வரலாறு இரண்டாயிரம் ஆண்டுப் பழைமை உடையது. சங்ககாலம் தொடங்கி இருபத்தியோராம் நூற்றாண்டுவரை, கவிதையானது தமிழரின் இலக்கிய வாழ்வில் முக்கியமானதொரு இடத்தைப் பெற்று வருகிறது.                குறிப்பாகச் சொல்வதானால், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளத் தொடங்கியபிறகு இந்தியாவில் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.                அறிவியல் வளர்ச்சி, புகைவண்டிகள், கார்களின் வருகை, அணைக்கட்டுகள் போன்ற மாற்றங்களோடு  ‘ உரைநடை’  என்னும் புதிய இலக்கிய வகை, தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமாகத் தொடங்கியது.                ஆங்கிலேயரின் வருகைக்குமுன் தமிழில் எல்லாச் செய்திகளும் செய்யுட்களில், கவிதைகளில், பாடல்களில்தான் இருந்திருக்கின்றன என்பது ஒரு அதிசயமான செய்தியாகும்.                கல்வெட்டுகள்,...

எழுத்துலகின் நகைச்சுவை வேந்தர் – தேவன்…!

படம்
நான் சிறுபிள்ளையாக இருந்தபோது, துப்பறியும் கதைகளையும் நகைச்சுவைக் கதைகளையும் விரும்பிப் படிப்பேன். அப்படி நகைச்சுவைக் கதைகளில் நான் அதிகம் விரும்பிப் படித்தது யாருடைய எழுத்து என்றால்,  மகாதேவன்  என்ற இயற்பெயர் கொண்டு  ஆனந்த விகடனில்  எழுதிவந்த  திரு.தேவன்  அவர்களுடைய கதைகள்தான் என்னைப் பெரிதும் ஈர்த்தன. அப்போதெல்லாம் புத்தகம் வாங்குவதற்குப் பணவசதி இருக்காது. தொடர்கதைகளை நண்பர் வீடுகளிலும், தொகுப்புப் புத்தகங்களை நூலகங்களிலும் சென்று படிப்பது எனக்கு வழக்கம். ஒருநாள் தேவன் அவர்களுடைய  ‘மைதிலி’  என்ற கதையை நான் நூலகத்தில் மனதிற்குள் படித்துக்கொண்டிருந்தபோது அதில் வந்த நகைச்சுவைக் காட்சிகளைப் படித்துவிட்டு சத்தம்போட்டு சிரித்துவிட்டேன். அங்கே படித்துக்கொண்டிருந்தவர்கள் என்னைக் கோபத்தோடு பார்க்க, நூலகர் வந்து ‘இப்படியெல்லாம் நூலகத்தில் சிரிக்கக்கூடாது’ என்று மிரட்டிவிட்டுப் போனார். அப்படி என்னை சிரிக்கவைத்த அந்தப் புத்தகம்போலவே  ‘கோமதியின் காதலன்’, ‘துப்பறியும் சாம்பு’, ‘சிஐடி சந்துரு’, ‘மிஸ்டர் வேதாந்தம்’  என்ற கதைகளையும் சொல்லிக...

நாடகமே உலகம்….

படம்
நாம் மக்களுக்காகத்தானே நடிக்கிறோம், நாம் நாடகத்தில் திரையில் சொல்லுகின்ற செய்திகளைப் பலர் பின்பற்றுவதில்லையே, என்ன செய்வது? “இது பல கலைஞர்கள் சொல்லும் குற்றச்சாட்டு”.                நாடகக் கலைஞர்களும்கூட இப்படிச் சொல்கிறார்கள். இருந்தாலும் பார்வையாளர்களுடைய ரசனையை எடைபோட நாடகக் கலைஞர்கள் பயிற்சி எடுத்திருக்க வேண்டும். நல்ல விஷயங்களாக இருந்தாலும் அதை கொடுக்க வேண்டிய முறையில் கொடுத்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள். தமிழ்நாட்டில் அந்தக்காலத்தில் (திரைப்படங்கள் அதிகம் தயாரிக்கப்படுவதற்கு முன்பாக, மேடை நாடகங்கள் மூலம் சாதனை செய்தவர்களைப் பற்றி சற்றே சிந்திப்போம்)                புராண நாடகங்கள் மூலம் புகழடைந்த  ஆர். எஸ். மனோகர்  செய்த சாதனைக்கு ஈடேது. மதுரையில்  நவாப்  ராஜ  மாணிக்கம்  பிரம்மாண்டமான அரங்க அமைப்பு மூலம் தனது நாடகங்களைப் பார்க்க வைத்தாரே! அவர் நாடகத்தில் ஐயப்பன் கோவில் என்றால் பிரமாதமாக ‘செட்’ போட்டுவ...

ரயிலே…. ரயிலே…

படம்
இன்றைக்கும் ரயில் என்றாலே உற்சாகம்தான். அதிலும் ரயில் ஸ்டீம்என்ஜினாகப் புகைவிட்டுக்கொண்டு குப்…குப்… என்று கிளம்பி, வேகம் எடுத்துச் செல்வதைப் பார்க்கையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஒரே ஆனந்தம்தான்.                நீராவியின் சக்தியை அறிந்த  ‘ ஜேம்ஸ்  வாட்டும்’ , நீராவி என்ஜினைக் கண்டுபிடித்த  ‘ ஜார்ஜ்  ஸ்டீபன்ச’ னும்  இன்றைய நவீன ரயிலை நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.                அதிலும், நம்மூரில் மரவட்டைக்குப் பெயர், ரயில் வண்டிப்பூச்சி. சிறுவர்கள் விளையாடும் விளையாட்டிற்குப் பெயர் ரயில் விளையாட்டு என்று, ரயில் நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உயிர்ப் பொருளாகிவிட்டது.                அந்தக்காலத்தில்  ‘ நல்லதம்பி ’ படத்தில் கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்கள் ‘நந்தனார்’ என்ற பழைய கதையை காலத்திற்கேற்ப மாற்றி, ‘க...

படங்களும்… பாடங்களும்…

படம்
கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், திரைப்படங்கள், புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இசை என படைக்கப்படுகின்ற எல்லாமே பொழுது போக்குவதற்காகவா? அல்லது பயன்பாட்டிற்காகவா? அதாவது கலை என்பது கலைக்காகவா? மக்களுக்காகவா? என்ற பட்டிமன்றத் தலைப்பு ஒன்று வெகுகாலமாகவே, ரசிகர்கள், படைப்பாளிகள், விமர்சகர்கள் மத்தியில் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.                ‘எந்த ஒரு படைப்பும் ஏதாவது ஒரு பயனைத் தரவேண்டும்’ என்கின்றனர் சிலர்.                ‘படைப்பை ரசித்து மகிழ வேண்டுமே, தவிர, ஆராய்ச்சி செய்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது’ எனச் சொல்கின்றனர் சிலர்.                உதாரணமாக, ஒரு செடியில், வாசனை பொருந்திய, வண்ணங்கள் நிறைந்த மலர் பூத்திருக்கிறது என்றால் அதனை ரசிக்க வேண்டும். ரசனைதான் முக்கியம் என்று சிலர் சொல்ல… அந்தப் பூ பூப்பதே காயாகிப், பழமாகி, விதை ...