ஒரு நிமிஷம் பொறு…
ஒருமுறை ‘திருஆவினன் குடி’ என்ற பழைய பெயர் கொண்ட பழனித் திருக்கோயிலின் குடமுழுக்கு நன்னீராட்டு (கும்பாபிேஷக) விழாவிற்கு, நேர்முக வர்ணனைக்காகப் போயிருந்தேன். அப்போது, அறுபடை வீடுகளில் ஒன்றாகிய அந்தப் பழனிமலை பற்றி கல்வெட்டுக்களில், இலக்கியங்களில், புராணங்களில், நாட்டுப்புறக் கதைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் படித்துப் பார்த்து வியந்து போனேன். ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று ஒரு பழமொழி தமிழில் உண்டு. கோயில் அத்தனை முக்கியமானதா? என்றொரு கேள்வி எழுகிறது. தமிழர்களின் அடையாளம் என்று பட்டியலிடும்போது, கோயில், நாதஸ்வரம், பரதம், தமிழிசை எனத் தங்களுக்கெனத் தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டவர்கள் தமிழர்கள். ஓர் அரசன், ஒரு கோயிலைக் கட்டும்போது, ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. இரண்டாவது,...