இடுகைகள்

கழுகுமலையும்… எல்லோரா குகைக்கோயிலும்…

படம்
               தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் மலைக்குகையில் அமைந்துள்ள சமணப்பள்ளிக்குப் போயிருந்தபோது அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்தும் நான் வியந்துபோனேன். இந்த வண்ணங்கள் எங்கிருந்து கிடைத்தன? என்று நான் கேட்டபோது, அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் எனக்கு அந்த அதிசயத்தைக் காண்பித்தார்.                என்னை அழைத்துக்கொண்டு அந்தக் மலைகுகைக்கு அருகிலிருந்த சின்னக் காட்டுக்குள் போனார். ஏதோ ஒரு மூலிகை போன்ற செடியிலிருந்து சில பச்சை இலைகளைப் பறித்து அதைக் கசக்கி என் கைகளில் அவர் தடவ, என் கை மருதாணி வைத்ததுபோலச் சிவந்து போனது. அவர் கையும் சிவப்பானது.                ‘இந்தக் கலரு மூணு நாளைக்கு உங்க கையில இருக்கும்’ என்று அவர் பெருமையாகச் சொல்லியதோடு, இது மாதிரி ஆயிரக்கணக்கான செடிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இவற்றின் சாறுகளை வைத்துதான் குகைக்குள் இருக்கின்ற ...

அஜந்தா ரகசியம்…

படம்
    சென்ற மே மாதத்தில் டில்லி மற்றும் புனே தமிழ்ச்சங்கங்களின் அழைப்பின்பேரில் நானும் என் துணைவியாரும் அங்கு சென்றுவிட்டு புனேயிலிருந்து ஷுரடிக்குப் போய் பாபாவையும் தரிசித்துவிட்டு எனது அன்பிற்குரிய தம்பி மகன் கணினிப் பொறியாளர்  திருமிகு.  ரவி  மற்றும் அவர்கள் குடும்பத்தாரோடு  எல்லோரா,  மற்றும்  அஜந்தா  போன்ற இடங்களுக்குச் சென்று வந்தோம்.                  ‘ சிவகாமியின்  சபதம்’  நாவலை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது படிக்கத் தொடங்கி, இன்றுவரை படித்து வருகிறேன். அதில் கதாநாயகியாகிய சிவகாமியின் தந்தையான  ஆயனசிற்பி  அஜந்தா ஓவியங்களின் வர்ண ரகசியத்தை அறிந்துகொள்ள அந்த நாவல் முழுவதும் முயற்சிப்பார்.  மகேந்திர  பல்லவன்,  நரசிம்ம  பல்லவன்,  அவர்களின்  தளபதி  பரஞ்சோதியார் ( பிற்காலத்தில்  இவர்தான் 63 நாயன்மார்களில்  ஒருவராகிய  சிறுத்தொண்டர்)  ஆகியோர் மூலமெல்லாம் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள மு...

எல்லா உயிரும்…நம் உயிர் தான்…

படம்
                வீட்டில் ஏதாவது ஜீவன்களை வளர்ப்பது இயல்பான விஷயம். அதனைப் பற்றிச் சொல்வதற்கு முன், ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.                சின்னப்பையன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்குப் போயிருந்த சமயத்தில், அவன் ஆசையாக வளர்த்து வந்த மைனா இறந்துவிட்டது. சாயங்காலம் அவன் வீட்டுக்கு வந்ததும், தயங்கியபடி அம்மா அவனிடம் சொன்னாள். அவனோ விளையாடப் போய்விட்டான். விளையாடித் திரும்பியவன் மைனா எங்கே? என்றான். டேய் அப்பவே சொன்னேன். தெரியலையா? அது செத்துப் போச்சு என்றாள் அம்மா.                பையன் உடனே புரண்டு புரண்டு அழுதான்.                அவனைத் தூக்கி நிறுத்தி, ஒரு அடி கொடுத்தாள் அம்மா.                டேய் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் செத்துப் போச்சுன்னு சொன்னேனே… உடனே விளையா...

உன்னையே நீ உணர்வாய்…

படம்
               புராணங்களில் வரும் அனுமன், பீமன், கடோத்கஜன் ஆகியோருக்கு இன்றும் சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் தனிமரியாதை உண்டு. இன்றைக்கு சக்திமான் ஸ்பைடர்மேன், ஹீமேன் மாதிரி அக்காலத்தில் அவர்கள் இருந்தனர்.                எல்லா மனிதர்களும் வலிமை உள்ளவர்களே. ஆனால் தன் பலத்தை அறியாததுதான் அவர்களின் குறை!                ஒருமுறை சென்னையில் ஓர் இளைஞர் கைகளால் தொடாமல் தன் பற்களாலேயே தண்ணீர்ப் பானையைத் தூக்கி ஒரு சுற்று சுற்றிக் கீழே வைத்தார்.                கோவையில் ஒருவர் தன் தலைமுடியில் லாரியைக் கட்டி இழுத்துக் கட்டினார்.                சிலருக்கு மட்டும் பற்களும், தலைமுடியும் அவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கிறதே எப்படி?        ...

காலத்தை வென்ற கவிஞர் கா.மு.ஷெரீப் .…

படம்
தமிழ்த் திரையுலகம் 1931ஆம் ஆண்டு பாட்டோடுதான் பேசத் தொடங்கியது. எனவே இன்றைக்குவரைக்கும் தமிழ்த் திரைப்படங்களில் பாடல் என்பது ஒரு பிரிக்க முடியாத அங்கம். இப்பாடலை தொடங்கி வைத்த பிதாமகர் என்ற பெருமை தமிழ்ப்பாடல் உலகின் பிதாமகர் பாபாநாசம் சிவன் அவர்களையே சாரும். அவரைத் தொடர்ந்து உடுமலை நாராயணகவி, கு.ம.பாலசுப்பிரமணியன், கு.ச.கிருஷ்ணமூர்த்தி, என்ற வரிசையில் தனக்கென ஒரு தனியிடத்தை வகுத்து அதில் தடம் பதித்தவர் கவிஞர் .  கா.மு.ஷெரீப் அவர்கள். தமிழ்த் திரையுலகில் தத்துவப் பாடல்களானாலும், காதல் பாடல்களானாலும் அப்பாடல்களில் இவரின் கற்பனை வளம் நெஞ்சை நிறைக்கும். சந்த நயம் செவியில் இனிக்கும்.                                ‘தொட்டால் மணக்கும் ஜவ்வாது                                சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு         ...

செம்மொழி நாயகர்…பரிதிமாற் கலைஞர்…!

படம்
மதுரை மாநகரம் ஈராயிரம் ஆண்டுப் பழைமையோடும் குன்றாத பெருமையோடும் இன்றும் திகழ்ந்து வருகிறது. முச்சங்கங்கள் தோன்றியது இம்மதுரையில்தான். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் போன்ற சங்கப்புலவர்கள் வாழ்ந்ததும் இம்மதுரையில்தான். இதன் தொடர்ச்சியை இருபத்தியோராம் நூற்றாண்டிலும் காண்கிறோம். மதுரையின் பெருமையை உலகறியச் செய்ததோடு தமிழ் உயர்தனிச் செம்மொழிதான் என முதலில் முழக்கமிட்டவர் பரிதிமாற் கலைஞர். இவர் 1870ஆம் ஆண்டு மதுரைக்கு அருகிலுள்ள விளாச்சேரி என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி. இவர் தம் தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரைச் சபாபதி முதலியாரிடம் தமிழும் கற்றார். மதுரை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். (தற்போது மதுரைக் கல்லூரி) உயர்தனிச் செம்மொழி தமிழென்றும், வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு அறிவித்தவர் பரிதிமாற் கலைஞர். பிரித்தானியரால் திணிக்கப்பட்ட ஆங்கிலமொழிக்கு தமிழர்கள் அடிபணியக்கூடாது என்றும் ஆணித்தரமாக வாதுரை செய்தவர் நம் பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர் ஆவார். பரிதிமாற் கலைஞர் ஒரு தமிழாசிர...

டைனிங் டேபிளில் சாப்பிட்ட குரங்கு…

படம்
“ வாய்விட்டுச்  சிரித்தால்  நோய்  விட்டுப்  போகும்”  என்று சொல்வார்கள். இவை பொய்யில்லை. மிகையுமில்லை.                வெவ்வேறு அளவில் மனஅழுத்தங்கள் இன்றைக்கு அதிகரிக்கின்றன. இளைஞர்களில் பலருக்கும் மன அழுத்தங்கள் இருக்கின்றன. சிரிக்கத் தெரிந்தால் இந்த மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.                வெளிநாட்டில் ஆபரேஷனுக்கு முன்பு ஒருவருக்கு மயக்க மருந்து கொடுக்கப் போனார்கள். அவர் மறுத்துவிட்டு ‘வேண்டாம்… சார்லி சாப்ளின் படத்தைப் போடுங்கள் போதும்’ என்றிருக்கிறார். அதன்பிறகு ஆபரேஷன் நடந்திருக்கிறது. நகைச்சுவையின் வலிமை அது.                கேன்சராலோ, எய்ட்ஸாலோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முன்னால் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘பபூன்’ போல வேஷம் போட்டு வித்தைகள் காட்டியபோது, அந்தக் குழந்தைகள் அப்படியொரு சிரிப்புச் சிரித்தார்களாம்.     ...