விளையாட்டால் வெற்றி பெற முடியுமா….?
இருபது வருஷங்களுக்கு முன்பு கபடி விளையாட்டு என்றால் அவ்வளவு இஷ்டம். ஆற்றங்கரையோரம் பள்ளி இருந்ததால் ஆற்றில் கபடி விளையாடுவார்கள். நானும் விளையாடியிருக்கிறேன். ஆட்கள் இருந்தால் போதும், இரண்டு அணியாய்ப் பிரிந்து விளையாட்டில் கலக்கி விடலாம். ஓடியாடி, தவ்விக்குதித்து, பாய்ந்து பிடித்து விளையாடும்போது உடம்பே வியர்த்துப் போகும். கபடி அவ்வளவு அருமையான உடற்பயிற்சி. அப்புறம் கிட்டி என்று விளையாட்டு இருக்கும். பெரிய கம்பு, சின்னக் கம்பு இரண்டை வைத்து விளையாடி, தூள் பரத்தி விடுவார்கள். கிரிக்கெட்டுக்குத் தாய் அதுதான். சில பகுதிகளில் அதை ‘ கில்லி’ என்கிறார்கள். ஆனால் கிரிக்கெட்டுக்குக் கிடைத்த மவுசு அதற்குக் கிடைக்கவில்லை. அதுமாதிரி ஒவ்வொரு ஊரிலும் சில மரங்கள...