இடுகைகள்

பக்திப் பயிரும்… பசுமைப் பயிரும்…நம்மாழ்வார்!

படம்
             நம் இந்திய நாடு வேளாண்மையில் சிறந்த விவசாய நாடு. இங்கு வற்றாத ஜீவநதிகள் உண்டு. காலம் அறிந்து பெய்யும் பருவமழையும் உண்டு. இத்தகைய இயற்கை வளங்கள் நம் நாட்டிற்குக் கிடைத்த வரங்கள்.                குறிப்பாகத் தமிழகம் மூவாயிரம் ஆண்டுப் பழமையும் பெருமையும் உடையது. வேட்டைக்காரச் சமுதாயமாக இருந்த மனிதஇனம், கால்நடைச் சமுதாயத்திற்கு மாறிப் பின்னர் ஆற்றங்கரை நாகரீகத்தை நாடி வேளாண்மைச் சமுதாய வாழ்க்கை முறையைத் தொடங்கியது.      நம் தமிழர்கள்  மலையும் மலைசார்ந்த இடத்தைக்   குறிஞ்சி  என்றும்,  காடும் காடு சார்ந்த இடத்தை   முல்லை  என்றும்,  வயலும் வயல் சார்ந்த பகுதிகளை   மருதம்  என்றும்,  கடலும் கடல் சார்ந்த பகுதிகளை நெய்தல்  என்றும்  மணலும் மணல் சார்ந்த பகுதிகளைப் பாலை  என்றும் பிரித்து அந்தந்த நிலத்துக்கேற்ற வேளாண்மை முறைகளையும் தொழில்களையும் செய்து வந்தார்கள்.      ...

பெண்ணரசியின் பேரருள்… (சித்திரைத் திருவிழா)

படம்
               கல்லூரியில் முதுகலை வகுப்பில் ஒரு மாணவி எழுந்து, ‘ஐயா சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் ஏன் கொண்டாடுகிறோம்’ என்று கேட்டவுடன் பலர் சிரித்தார்கள்.                ‘சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் கொண்டாடம பிறகு என்ன செப்டம்பர் மாசத்துலய கொண்டாடுவாங்க’ என்று ஒரு பையன் சொல்ல, எல்லோரும் சத்தம்போட்டுச் சிரித்தார்கள்.      வகுப்பு நடத்திக்கொண்டிருந்த நான், கேள்வி கேட்ட அந்தப் பெண்ணைப் பாராட்டிவிட்டு, அந்தச் செப்டம்பர் மாத பையனைப் பார்த்து, ‘நீ சொல்லேன் சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் ஏன் கொண்டாடுகிறார்கள்?’ என்று நான் கேட்க, அந்தப் பையன் ‘இதான் நம்ம சிலபஸ்ல இல்லேல சார்’ என்றான்.         ‘இருந்தாலும் சாய்ஸ்ல விட்ருவோம்;’ என்றான் இன்னொருவன். அப்போது நான் சற்றே கடுமையாக, ‘மதுரையில் பிறந்து மதுரையில் வளர்கிற நீங்களே இப்படிப் பேசலாமா?’ என்று சொல்லிவிட்டு, இந்தச் சித்திரைத் திருவிழா கொண்டாடத் தொடங்கி எவ்வளவு ...

அனுபவமே நல்ல கல்வி…

படம்
                                   நாம் சிறுகுழந்தைகளாக இருக்கும்போது , படம் பார்த்துக் கதை சொல்லுதல் நமக்குப் பிடித்தமான ஒன்று. அதிலும் வண்ணப்படங்களாக இருந்துவிட்டால் , குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். இந்தக்காலக் குழந்தைகள் இத்தகைய படங்களை அனிமே ஷ ன் என்று கார்ட்டூன் மூலமாகக் கண்டு மகிழ்கிறார்கள்.                   ஒரு படம் ஆயிரம் செய்திகளை நமக்கு விளக்கும். சமீபத்தில் நான் , இலக்கிய விழாவிற்காக ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஆயிரம் மரங்களுக்கு நடுவே அந்தப் பள்ளி அழகுற அமைந்திருந்தது. பிற்பகல் நேரத்தில் மரங்களுக்கு நடுவே மாணவ , மாணவிகள் அமர்ந்திருக்க   நான் பேசத் தொடங்கினேன். மரங்களின் பசுமை , பறவைகளின் ஓசை , வண்டுகளின் ரீங்காரம் இவற்றுக்கு நடுவே மண்தரையில் சம்மணமிட்டு , மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தார்கள். என் பேச்சுக்கு இடையில் நான் இவற்றைக் குறிப்பிட்டுக் கொண்...

விளையாட்டால் வெற்றி பெற முடியுமா….?

படம்
               இருபது வருஷங்களுக்கு முன்பு கபடி விளையாட்டு என்றால் அவ்வளவு இஷ்டம்.                ஆற்றங்கரையோரம் பள்ளி இருந்ததால் ஆற்றில் கபடி விளையாடுவார்கள். நானும் விளையாடியிருக்கிறேன். ஆட்கள் இருந்தால் போதும், இரண்டு அணியாய்ப் பிரிந்து விளையாட்டில் கலக்கி விடலாம். ஓடியாடி, தவ்விக்குதித்து, பாய்ந்து பிடித்து விளையாடும்போது உடம்பே வியர்த்துப் போகும். கபடி அவ்வளவு அருமையான உடற்பயிற்சி.                அப்புறம்  கிட்டி  என்று விளையாட்டு இருக்கும். பெரிய கம்பு, சின்னக் கம்பு இரண்டை வைத்து விளையாடி, தூள் பரத்தி விடுவார்கள். கிரிக்கெட்டுக்குத் தாய் அதுதான். சில பகுதிகளில் அதை  ‘ கில்லி’  என்கிறார்கள். ஆனால் கிரிக்கெட்டுக்குக் கிடைத்த மவுசு அதற்குக் கிடைக்கவில்லை.                அதுமாதிரி ஒவ்வொரு ஊரிலும் சில மரங்கள...

பூக்குட்டிகளும்…புத்தகங்களும்…

படம்
            புத்தகங்களும்…  குழந்தைகளும்…  என்றே கவிதை எழுதலாம். புத்தகங்களைப் படித்தால் நம் அறிவு வளர்கிறது. நம் கேள்விகளுக்கு விடையளிக்கிறது புத்தகம். குழந்தைகள் கேள்விகளாலேயே வளர்கின்றன. புத்தகத்தைப் பிரிக்கும்போது மகிழ்ச்சி. குழந்தையைப் பார்த்தாலும் பேசினாலும் தூக்கினாலும் மகிழ்ச்சி. இத்தகைய குழந்தைகள் நம்மிடமிருந்து செய்திகளைத் தெரிந்துகொள்வதைப்போல சிறுவயதிலேயே புத்தகங்களோடு பழகுவார்களேயானால் அவர்கள் வாழ்க்கை ஒளிமயமாகும். புத்தகத்தையும் குழந்தையையும் விரும்பாத மனிதர் யார்?            இரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு… அவர் செல்வம்மிகுந்த பிரபு குடும்பத்தைச் சார்ந்தவர்;. சிறுவயதாக இருந்தபோது அவருடைய பிறந்தநாள் வந்தது. அந்தப் பிறந்தநாளில் தாகூரின் சகோதரர் தன் தம்பிக்குப் பரிசளிக்க விரும்பி நள்ளிரவில் அவருடைய அறையைச் சத்தமின்றி திறந்து அவருடைய படுக்கையில் அந்தப் பரிசை வைக்கப்போனவர் வியந்துபோனார்.           காரணம், அந்தப் பட்டுமெத்தையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த...

புதியன கற்போம்… புதுமைகள் செய்வோம்…!

படம்
               உலக வரலாற்றில் புதிய சிந்தனைகளையோ, அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளையோ உருவாக்கிய மேதைகளை இந்த உலகம் அவ்வளவாகப் பாராட்டியதில்லை. மாறாக அத்தகைய சிந்தனையாளர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறது.                ‘உன்னையே நீ அறிவாய்… அறிவுதான் நான் தரும் ஆயுதம்…. சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள்…. எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்விகளைக் கேளுங்கள்!’ என்று சொன்ன  கிரேக்கஞானி  சாக்ரடீஸ் , அன்றைய அரசாங்கத்தால் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். ‘உலகம் உருண்டையானது. சூரியன் நிலையானது. பூமிதான் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது’ என்ற அறிவியல் உண்மையை, தான் வாழ்ந்த 14ஆம் நூற்றாண்டில், தான் கண்டுபிடித்த சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் நிரூபித்துக்காட்டிய  கலிலியோ  பல துன்பங்களைச் சந்தித்து, அப்போதைய போப்பாண்டவர் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கும் நிலைக்கு ஆளானார்.             ‘உலக உயிர்...

இப்போது இது அவசியம்…. அவசரம்….

படம்
               பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, பள்ளிகள் கல்லூரிகள் தொடங்கி மாணவ மாணவியரும் பள்ளி, கல்லூரி செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். மீண்டும் கல்விக்கான எந்திரம் சுழலத் தொடங்கிவிட்டது என்பதில் நமக்கு மகிழ்ச்சியே.              ஆனால் சமீப காலங்களில் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆசிரியர்கள் குறிப்பாகப் பெண் ஆசிரியைகள் மாணவர்களால் தாக்கப்படுகிறார்கள் என்பதும் மாணவ மாணவியர்களுள் சிலர் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கின்ற செய்திகளும் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன.                மாதா பிதா குரு தெய்வம் எனச் சொல்லும்போது, ஆசிரியர் தந்தைக்கு அடுத்தபடியாகவும் தெய்வத்திற்கு இணையாகவும் போற்றப்படக்கூடிய பெருமையை உடையவர் என்பது நம்முடைய மரபு. கல்வியின் பெருமையை ஆசிரியர் இல்லாமல் நாம் அறிந்துகொள்ள முடியாது.             ...