அஜந்தா ரகசியம்…
சென்ற மே மாதத்தில் டில்லி மற்றும் புனே தமிழ்ச்சங்கங்களின் அழைப்பின்பேரில் நானும் என் துணைவியாரும் அங்கு சென்றுவிட்டு புனேயிலிருந்து ஷுரடிக்குப் போய் பாபாவையும் தரிசித்துவிட்டு எனது அன்பிற்குரிய தம்பி மகன் கணினிப் பொறியாளர் திருமிகு. ரவி மற்றும் அவர்கள் குடும்பத்தாரோடு எல்லோரா, மற்றும் அஜந்தா போன்ற இடங்களுக்குச் சென்று வந்தோம். ‘ சிவகாமியின் சபதம்’ நாவலை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது படிக்கத் தொடங்கி, இன்றுவரை படித்து வருகிறேன். அதில் கதாநாயகியாகிய சிவகாமியின் தந்தையான ஆயனசிற்பி அஜந்தா ஓவியங்களின் வர்ண ரகசியத்தை அறிந்துகொள்ள அந்த நாவல் முழுவதும் முயற்சிப்பார். மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், அவர்களின் தளபதி பரஞ்சோதியார் ( பிற்காலத்தில் இவர்தான் 63 நாயன்மார்களில் ஒருவராகிய சிறுத்தொண்டர்) ஆகியோர் மூலமெல்லாம் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள மு...